மேய்ச்சல் சுறா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Cetorhinus|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
மேய்ச்சல் சுறா
புதைப்படிவ காலம்:Miocene–Present[1]
Cetorhinus maximus by greg skomal.JPG
Basking-Shark-Scale-Chart-SVG-Steveoc86-001.svg
மேய்ச்சுறாவின் வளர்ச்சி மற்றும் முதிர்ச்சி போன்ற பல்வேறு நிலைகளில் மனிதனின் அளவுடன் ஒரு ஒப்பீடு
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Cetorhinus
இனம்: வார்ப்புரு:Taxonomy/CetorhinusC. maximus
இருசொற் பெயரீடு
Cetorhinus maximus
(Gunnerus, 1765)
Cypron-Range Cetorhinus maximus.svg
Range of the basking shark
வேறு பெயர்கள்

மேய்ச்சல் சுறா அல்லது மேச்சுறா (Basking shark) என்பது உலகில் தற்போது வாழக்கூடிய சுறாக்களில் இரண்டாவது பெரிய மீன் ஆகும். [3] கடலில் உள்ள மிதவைவாழிகளை உணவாக உட்கொள்ளும் மூன்று வகை சுறாக்களில் இது ஒன்றாகும். பிற இரண்டு சுறாக்களாக திமிங்கலச் சுறா, மெகாமவுத் சுறா ஆகியவை உள்ளன. வளர்ந்த சுறாக்கள் பொதுவாக 7.9 m (26 ft) நீளம் கொண்டவையாக இருக்கும். இது பொதுவாக சளி படர்ந்தது போன்ற சாம்பல் அல்லது பழுப்பு நிறத் தோலுடன் காணப்படும். இதன் வால் துடுப்பு வலுவானதாகவும் பிறை வடிவமானதாகவும் இருக்கும்.

மேய்ச்சுறா உலகம் முழுக்க இடம்பெயரும் இனமாகும். இது உலகின் அனைத்து மிதவெப்ப மண்டல கடல்களிலும் காணப்படுகிறது. பொதுவாக இது கடலின் மேல்மட்டத்திலேயே திரிந்து மிதவை உணவு எனப்படும் கவுர்களை நீருடன் உட்கவர்ந்து வடிகட்டி உண்டபடி மெதுவாக நகர்ந்து செல்லும். இதனால் இது சூரிய குளியல் மேற்கொளவதாக நினைத்து பாஷ்கிங் ஷார்க் என ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. கடலின் மேற்புறம் மேய்வதுபோல் இது அலைவதால் தமிழில் மேய்ச்சுறா என்று பெயர்பெற்றது. இது நீரில் உள்ள உணவை வடிகட்டி உண்பதால் அதற்கு ஏற்றவாறு மிகப்பெரிய வாயையும், மிகவும் வளர்ந்த செவுளையும் கொண்டுள்ளது. இதன் மூக்கு கூம்பு வடிவமானது. மேலும் இதன் செவுள் பிளவுகள் அதன் தலையின் மேல் பகுதி முதல் கீழ் பகுதி வரை நீண்டுள்ளது. இதன் வாயில் கொக்கி போன்ற நூற்றுக்கணக்கான பல அடுக்கான சிறிய பற்களைக் கொண்டுள்ளது. மேலும் வரிசைக்கு 100 பற்கள் வரை உள்ளன. இதன் கொக்கி போன்ற வளைந்த பற்கள், பின்னோக்கி வளைந்திருக்கின்றன. மேலும் மேல் மற்றும் கீழ் தாடைகள் என இரண்டிலும் ஒரே மாதிரியாக இருக்கின்றன. இந்த இனத்தின் மூளையானது பிற இன சுறாக்களை விட எடையில் சிறிய மூளையாக உள்ளன. இது ஒப்பீட்டளவில் செயலாற்றல் குறைந்த வாழ்க்கை முறையை பிரதிபலிக்கிறது. [4]

மேய்ச்சல் சுறாக்கள் சிறிய கூட்டமாகவோ அல்லது தனியாகவோ காணப்படலாம். இவை பெரிய அளவானதாகவும், அச்சுறுத்தும் தோற்றம் கொண்டவையாக இருந்தபோதிலும், இந்த சுறாக்கள் ஆக்ரோசமற்றவை. இதனால் மனிதர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

இந்தச் சுறாக்களானது அதன் துடுப்பு, இறைச்சி, கல்லீரல் எண்ணை போன்றவற்றிற்காக நீண்ட காலமாக வணிக ரீதியாக முக்கியத்துவம் கொண்ட மீனாக இருந்து வருகிறது. இவை அதிகப்படியாக வேட்டையாடப்படுவதால் இவற்றின் எண்ணிக்கை மிகவும் குறைத்துள்ளது. எஞ்சி இருக்கும் சுறாக்களுக்கு பாதுகாப்பு தேவை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. [5]

குறிப்புகள்[தொகு]

  1. Sepkoski, Jack (2002). "A compendium of fossil marine animal genera (Chondrichthyes entry)". Bulletins of American Paleontology 364: 560. http://strata.ummp.lsa.umich.edu/jack/showgenera.php?taxon=575&rank=class. பார்த்த நாள்: 9 January 2008. 
  2. Rigby, C.L., Barreto, R., Carlson, J., Fernando, D., Fordham, S., Francis, M.P., Herman, K., Jabado, R.W., Liu, K.M., Marshall, A., Romanov, E. & Kyne, P.M. (2021). "Cetorhinus maximus (amended version of 2019 assessment)". IUCN Red List of Threatened Species 2019: e.T4292A194720078. https://www.iucnredlist.org/species/4292/194720078. 
  3. "Basking Shark".
  4. Kruska, DC (1988). "Brain of the basking shark (Cetorhinus maximus)". Brain Behav. Evol. 32 (6): 353–63. doi:10.1159/000116562. பப்மெட்:3228691. 
  5. Sims, DW (2008). Sieving a living: A review of the biology, ecology and conservation status of the plankton-feeding basking shark Cetorhinus maximus. 54. 171–220. doi:10.1016/S0065-2881(08)00003-5. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-12-374351-0. https://www.researchgate.net/publication/23392700. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேய்ச்சல்_சுறா&oldid=3266168" இருந்து மீள்விக்கப்பட்டது