உள்ளடக்கத்துக்குச் செல்

முதுமையியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1970 ஆம் ஆண்டு ஆம்ஸ்டர்டாமில் அட்டைகளை விளையாடும் முதியவர்கள்

முதுமையியல் (Gerontology) என்பது முதுமையின் சமூக, கலாச்சார, உளவியல், அறிவாற்றல் மற்றும் உயிரியல் அம்சங்களைப் பற்றிய ஆய்வு ஆகும். இந்த வார்த்தை 1903 ஆம் ஆண்டில் இலியா மெச்னிகோவ் என்பவரால் உருவாக்கப்பட்டது. இந்தத் துறை முதியவர்களில் இருக்கும் நோய்க்குச் சிகிச்சையளிப்பதில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவத்தின் கிளையான முதியோர் மருத்துவத்திலிருந்து வேறுபடுகிறது. முதியோர் மருத்துவர்கள் மற்றும் ஆய்வாளர்கள் உயிரியல், செவிலியம், மருத்துவம், குற்றவியல், பல் மருத்துவம், சமூகப்பணி, உடல் மற்றும் தொழில் சிகிச்சை, உளவியல், மனநலம், சமூகவியல், பொருளாதாரம், அரசறிவியல், கட்டடக்கலை, புவியியல், மருந்தகம், பொதுச் சுகாதாரம், வீட்டுவசதி மற்றும் மானிடவியல் ஆகிய துறைகளில் உள்ளனர்.[1]

உயிரிய முதுமையியல்

[தொகு]
ஒரு பெரியவரின் கை

உயிரிய முதுமையியல் (Biogerontology), முதுமையியலின் பரிணாம தோற்றம் மற்றும் செயல்முறையில் தலையிடுவதற்கான சாத்தியமான வழிமுறைகள் குறித்து அக்கறை கொண்ட முதுமையியலின் சிறப்புத் துணைத் துறையாக உள்ளது. முதுமை செயல்முறைகளில் தலையிடுவதன் மூலம் முதுமை தொடர்பான நோயைத் தடுப்பது உயிரிமுதுமையிலின் முதன்மை நோக்கமாகும். வயதாவது நோயின் அளவுகோல்களுக்குப் பொருந்துகிறது என்று சிலர் வாதிடுகின்றனர், எனவே முதுமை ஒரு நோயாகக் கருதப்பட வேண்டும் என்ற கருதுகோளும் உண்டு.[2][3][4]

36 பிறழ் பிரிப்பு ஆய்வுகள் மனிதர்களின் வயதுக்கும் டி. என். ஏ. சேதத்திற்கும் இடையே ஒரு தொடர்பு இருப்பதாக முடிவு செய்தது.[5] இது முதுமைக்கான டி. என். ஏ. சேதக் கோட்பாட்டுடன் ஒத்துப்போகிறது.

சமூக முதுமையியல்

[தொகு]

சமூக முதுமையியல் (Social gerontology) என்பது முதியவர்களைப் பற்றிப் படிப்பதிலும், அவர்களுடன் வேலை செய்வதிலும் நிபுணத்துவம் பெற படிக்கும் துணைத் துறையாகும். சமூக முதியோர் வல்லுநர்கள், சமூகப்பணி, செவிலியம், உளவியல், சமூகவியல், மக்கள்தொகை, பொதுச் சுகாதாரம் அல்லது பிற சமூக அறிவியல் துறைகளில் பட்டங்கள் பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்கள் முதியோர் கல்வி, ஆராய்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்குப் பொறுப்பானவர்கள்.[6]

ஆயுள் காலம் மற்றும் ஆயுள் நீட்டிப்பு பிரச்சினைகளை அளவிட எண்கள் தேவைப்படுவதால், மக்கள் தொகையியலுடன் இணைவாக உள்ளது. மனித ஆயுட்காலம் குறித்த புள்ளிவிவரங்களைப் படிப்பவர்கள், முதியவர்களின் சமூகப் புள்ளிவிவரங்களைப் பற்றி ஆய்வு செய்வோரிலிருந்து வேறுபடுகிறார்கள்.

சுற்றுச்சூழல் முதுமையியல்

[தொகு]

சுற்றுச்சூழல் முதுமையியல் (Environmental gerontology) என்பது முதியவர்களுக்கும் அவர்களின் உடல் மற்றும் சமூகச் சூழல்களுக்கும் இடையிலான உறவை மேம்படுத்துவதற்கான புரிதல் மற்றும் தலையீடுகளை நாடும் ஒரு நிபுணத்துவம் ஆகும்.[7][8][9]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Hooyman, N.R.; Kiyak, H.A. (2011). Social gerontology: A multidisciplinary perspective (9th ed.). Boston: Pearson Education. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0205763139.
  2. Stambler, Ilia (2017-10-01). "Recognizing Degenerative Aging as a Treatable Medical Condition: Methodology and Policy". Aging and Disease 8 (5): 583–589. doi:10.14336/AD.2017.0130. பப்மெட்:28966803. பப்மெட் சென்ட்ரல்:5614323. http://www.aginganddisease.org/article/2017/2152-5250/ad-8-5-583.shtml. 
  3. The Lancet Diabetes & Endocrinology (2018-08-01). "Opening the door to treating ageing as a disease". The Lancet Diabetes & Endocrinology 6 (8): 587. doi:10.1016/S2213-8587(18)30214-6. பப்மெட்:30053981. https://www.thelancet.com/journals/landia/article/PIIS2213-8587(18)30214-6/fulltext. 
  4. Khaltourina, Daria; Matveyev, Yuri; Alekseev, Aleksey; Cortese, Franco; Ioviţă, Anca (July 2020). "Aging Fits the Disease Criteria of the International Classification of Diseases". Mechanisms of Ageing and Development 189: 111230. doi:10.1016/j.mad.2020.111230. பப்மெட்:32251691. https://www.sciencedirect.com/science/article/abs/pii/S0047637420300257. 
  5. Soares JP, Cortinhas A, Bento T, Leitão JC, Collins AR, Gaivão I, Mota MP. Aging and DNA damage in humans: a meta‐analysis study. Aging (Albany NY). 2014 Jun;6(6):432-9. doi: 10.18632/aging.100667. PMID 25140379; PMCID: PMC4100806
  6. Putney, Norella M.; Alley, Dawn E.; Bengtson, Vern L. (2005). "Social Gerontology as Public Sociology in Action". The American Sociologist (Springer Publishing) 36 (3): 88–104. doi:10.1007/s12108- 005-1018-9. https://www.jstor.org/stable/27700435. "As a multidisciplinary field engaged in basic and applied research and practice, social gerontology's major aim is to improve the lives of older people and to ameliorate problems associated with age and aging.". 
  7. Sanchez-Gonzalez, D.; Rodriguez-Rodriguez, V. (2016). Environmental Gerontology in Europe and Latin America. Policies and perspectives on environment and aging. New York: Springer Publishing Company. p. 284. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-319-21418-4.
  8. Rowles, Graham D.; Bernard, Miriam (2013). Environmental Gerontology: Making Meaningful Places in Old Age. New York: Springer Publishing Company. p. 320. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0826108135.
  9. Scheidt, Rick J.; Schwarz, Benyamin (2013). Environmental Gerontology. What Now?. New York: Routledge. p. 338. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-415-62616-3.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முதுமையியல்&oldid=4050290" இலிருந்து மீள்விக்கப்பட்டது