மருந்தகம்

மருந்தகம் (Pharmacy) என்பது மருந்துகளின் பாதுகாப்பான, பயனுள்ள மற்றும் மலிவு விலையில் பயன்படுத்துவதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டு, மருந்துகளைக் கண்டறிந்து, உற்பத்தி செய்தல், தயாரித்தல், விநியோகித்தல், மறுஆய்வு செய்தல் மற்றும் கண்காணித்தல் ஆகியவற்றின் அறிவியல் நடைமுறையாகும். மருத்துவ அறிவியல் மற்றும் இயற்கை அறிவியலுடன் சுகாதார அறிவியலை இணைப்பதால் இது ஒரு பல்வகை அறிவியல் ஆகும். பெரும்பாலான மருந்துகள் இப்போது மருந்துத் தொழிற்சாலைகளால் தயாரிக்கப்படுவதால், தொழில்முறை நடைமுறையில் மருத்துவ ரீதியாக அதிக கவனம் செலுத்துகிறது. அமைப்பின் அடிப்படையில், மருந்தக நடைமுறை சமூகம் அல்லது நிறுவன மருந்தகம் என இவை வகைப்படுத்தப்படுகிறது. நிறுவன மருந்தகங்களின் சமூகத்தில் நேரடி நோயாளி பராமரிப்பு வழங்குவது ஆகிய நடைமுறைகளை மேற்கொள்வது மருந்தகமாகக் கருதப்படுகிறது. [1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Clinical Pharmacy Education, Practice and Research. Elsevier. November 2018. ISBN 9780128142769. Retrieved 6 September 2019.