உள்ளடக்கத்துக்குச் செல்

முகம்மது இர்பான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முகம்மது இர்பான்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்முகம்மது இர்பான்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைஇடதுகை வேகப்பந்து வீச்சு
பங்குபந்து வீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை முதல்தர
ஆட்டங்கள் 10
ஓட்டங்கள் 1
மட்டையாட்ட சராசரி
100கள்/50கள் 0/0
அதியுயர் ஓட்டம் 8*
வீசிய பந்துகள் 2056
வீழ்த்தல்கள் 43
பந்துவீச்சு சராசரி 28.76
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
4
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
1
சிறந்த பந்துவீச்சு 7/113
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், அக்டோபர் 18 2009

முகம்மது இர்பான் (Mohammad Irfan, Urdu: محمد عرفانபிறப்பு: சூன் 6 1982) பாக்கித்தான் துடுப்பாட்ட அணியின் வீரர் ஆவார்.இவர் வலதுகை விரைவு வீச்சாளர் ஆவார். இவர் 7 அடி 1 அங்குலம் உயரம் உடையவர்.[1] முதல்தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடிய அதிக உயரம் உள்ளவர் எனும் பெருமை பெற்றவர் ஆவார்[2][3]. இதற்கு முன் மேற்கிந்தியத் திவுகள் அணியைச் சேர்ந்த ஜோயல் கார்னர் மற்றும் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியைச் சேர்ந்த புரூஸ் ரெய்ட் ஆகியோர் 6 அடி 8 அங்குலம் உயரம் கொண்டதே சாதனையாக இருந்தது.[4] இவர் பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் இவர் விளையாடியுள்ளார்.

இந்தியன் பிரீமியர் லீக்

[தொகு]

2011 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடினார். இந்த அணியின் தலைமைப் பயிற்சியாளரான பாக்கித்தான் துடுப்பாட்ட அணியின் முன்னாள் வீராரான வசீம் அக்ரம் இவரைத் தேர்வு செய்ய அறிவுறுத்தினார். எனவே இவரை கொல்கத்தா அணி நிர்வாகம் ஏலத்தில் எடுத்தது. இருந்த போதிலும் இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் [5][6][7][8] மற்றும் பாக்கிஸ்தான் துடுப்பாட்ட வாரியத்தின் அனுமதி பெற வேண்டியிருந்தது.[9]

சர்வதேச போட்டிகள்

[தொகு]

தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகள்

[தொகு]

2013 ஆம் ஆண்டில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது . பெப்ரவரி 14 இல் கேப் டவுனில் நடைபெற்ற தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான இரண்டவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்.[10] இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 12 பந்துகளில் 6 ஓட்டங்களை எடுத்து பீட்டர்சனின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின் பந்துவீச்சில் 21 ஓவர்கள் வீசி 1 ஓவரை மெய்டனாக வீசி 86 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். இதில் 3 இலகுகளைக் கைப்பற்றினார். பின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் 14 பந்துகளில் 2 ஓட்டங்கள் எடுத்தார். பின் பந்துவீச்சில் 10 ஓவர்கள் வீசி 1 ஓவரை மெய்டனாக வீசி 35 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். ஆனாலிலக்கினைக் கைப்பற்றவில்லை. இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 4 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[11]

பின் தென்னாப்பிரிக்க அணி ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப் பயணம் செய்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியது. அக்டோபர் 23, இல் துபாயில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது தேர்வுத் துடுப்பாட்டப்போட்டியில் இவர் விளையாடினார். இதன் முதல் ஆட்டப் பகுதியில் 2 பந்துகளில் ஓட்டங்கள் ஏதும் எடுக்காமல் இம்ரான் தாஹீர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின் பந்துவீச்சில் 35 ஓவர்கள் வீசி 102 ஓட்டங்களை வீட்டுக்கொடுத்தார்.இதில் 5 ஓவர்களை மெய்டனாக வீசினார். இந்தப் போட்டியில் 3 இலக்குகளைக் கைப்பற்றினார். பின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் 29 பந்துகளில் 14 ஓட்டங்கள் எடுத்து டுமினி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதில் தென்னாப்பிரிக்க அணி ஒரு ஆட்டப் பகுதி மற்றும் 92 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[12]

பன்னாட்டு இருபது20

[தொகு]

டிசம்பர் 25, 2012 இல் பெங்களூருவில் நடைபெற்ற இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான பன்னாட்டு இருபது20 போட்டியில் இவர் அறிமுகமனார். இதில் 4 ஓவர்கள் வீசி 25 ஓட்டங்களை விய்யுக்கொடுத்து 1 இலக்கினைக் கைப்பற்றினார்.பாக்கித்தான் அணி 5 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாது.[13]

சான்றுகள்

[தொகு]
  1. PakPassion.net (22 February 2011). "Mohammad Irfan Interview". YouTube. Retrieved 24 April 2011.
  2. "At 7 ft 1 inch, Pakistan fast bowler Mohammad Irfan is tallest player in history of cricket". இந்தியன் எக்சுபிரசு. 28 December 2012. Archived from the original on 1 பிப்ரவரி 2013. Retrieved 28 December 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. Subbaiah, Sunil (27 December 2012). "Mohammad Irfan, Pakistan's towering fire". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 4 அக்டோபர் 2013. Retrieved 28 December 2012.
  4. Russell, Bill (8 March 2013). "Top 16 Tallest Cricketers in Cricket History". Sporteology.com. Archived from the original on 6 நவம்பர் 2016. Retrieved 29 April 2017.
  5. "Pakistan's Mohammad Irfan in line for IPL contract". Cricinfo. 10 August 2010. Retrieved 29 April 2017.
  6. Farooq, Umar (10 August 2010). "Mohammad Irfan signs IPL contract". The Express Tribune. Retrieved 29 April 2017.
  7. "Kolkata Knight Riders sign giant Pakistani fast bowler". sify.com. 10 August 2010. Retrieved 29 April 2017.
  8. "Irfan agrees to KKR deal". espnstar.com. Archived from the original on 2015-09-24. Retrieved 2018-05-26.
  9. "Mohammad Irfan awaits NOC from Pakistan board". Cricinfo. 10 September 2010. Retrieved 29 April 2017.
  10. "Mohammad Irfan", Cricinfo, retrieved 2018-05-26
  11. "2nd Test, Pakistan tour of South Africa at Cape Town, Feb 14-17 2013 | Match Summary | ESPNCricinfo", ESPNcricinfo, retrieved 2018-05-26
  12. "2nd Test, South Africa tour of United Arab Emirates at Dubai, Oct 23-26 2013 | Match Summary | ESPNCricinfo", ESPNcricinfo, retrieved 2018-05-26
  13. "1st T20I (N), Pakistan tour of India at Bengaluru, Dec 25 2012 | Match Summary | ESPNCricinfo", ESPNcricinfo, retrieved 2018-05-26

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=முகம்மது_இர்பான்&oldid=3742206" இலிருந்து மீள்விக்கப்பட்டது