மியான்மரில் விவசாயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மியான்மரின் விளைநிலங்கள்

மியான்மரில் விவசாயம் (Agriculture in Myanmar) (மியான்மர், பர்மா என்றும் அழைக்கப்படுகிறது) ஒரு முக்கியமான தொழிலாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 60 சதவீதம் விவசாயத்தில் இருந்தே கிடைக்கிறது. நாட்டில் உள்ள தொழிலாளர்களில் 65 சதவீதம் பேர் விவசாயிகள் ஆவர்[1]. முன்னொரு காலத்தில் பர்மாதான் அதிக அளவில் அரிசி ஏற்றுமதி செய்யும் நாடாக இருந்தது[2]. அரிசி இப்பொழுதும் முக்கிய விவசாயப் பொருளாக இருக்கிறது[1].

பருப்பு, அவரை, எள், நிலக்கடலை, கரும்பு, மரப்பலகைகள், மீன் முதலியன மற்ற பிரதானமான விவசாய்ப் பொருட்கள் ஆகும்.[3]மேலும் கால்நடைகள் உணவு மற்றும் உழைப்பு ஆகியவற்றுகாக அதிகமாக வளர்க்கப்பட்டன[4].

விவசாயப் பொருட்கள்[தொகு]

அரிசி[3]

மக்காச்சோளம்[2]

பருப்பு[3].

பட்டானி[2]

வெங்காயம்[2]

நிலக்கடலை[3]

பேயெள்[2]

எள்[3]

மசாலாப் பொருட்கள், கொத்தமல்லி, இஞ்சி, மஞ்சள், மிளகாய் போன்றவை[2]

கரும்பு[3]

மரப்பலகைகள்

விவசாய முறை[தொகு]

வரலாற்றிலும் தற்காலத்திலும் வெட்டுதல் மற்றும் எரித்தல் முறையில் விளைநிலங்களைத் தயாரிப்பது முதன்மையான விவசாய முறையாகும். [5] இவ்வாறு தயாரிக்கப்பட்ட நிலத்தில் இடப்பெயற்சி முறையில் அல்லது நாற்றங்கால் அமைத்து பிடுங்கி நடுதல் என்பது ஒரு வகை பயிரிடல் முறையாகும். பயிரிடப்பட வேண்டிய நிலப்பகுதியில் காடாக முளைத்திருக்கும் களைத் தாரவரங்களை முதலில் தீயிட்டு கொளுத்துகிறார்கள். பின்னர் இந்நிலப்பகுதிகள் சிலகாலம் பயன்படுத்தப்பட்டு அம்மண்ணில் உள்ள சத்துப்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதைத்தொடர்ந்து நிலத்த்தில் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் விட்டு நடப்பட்டவை தானாக வளர அனுமதிக்கப்படுகிறது[5][6]. முதல் மூன்று ஆண்டுகளில் வளரத்தொடங்கும் தாவரங்கள் 10 முதல் 20 ஆண்டுகளில் இரண்டாம் நிலை காடுகளாக உருவாகின்றன[5].

சில சமயங்களில் இவ்விளைநிலங்கள் நெல் பயிரிடும் நிலங்களாக மாற்றப்படுகின்றன. இம்முறை ஒரு பொதுவான விவசாய முறையாக தெற்கு மற்றும் கிழக்கு ஆசியாவில் பின்பற்றப்படுகிறது. பர்மாவில் இவ்வகை நிலங்களில் எப்போதாவது ஆறுகளால் வெள்ளப்பெருக்கு ஏற்படும். பெரும்பாலான நாட்களில் விவசாயிகள் பருவமழையை எதிர்பார்த்தே காத்திருந்தனர். நெல் நடவுசெய்ய வேண்டிய வயல்கள் நீர்புகா அடிமண்ணும் மேற்பகுதியில் நிறைவான களிமண்ணும் கொண்டு 4 முதல் 6 அங்குலம் வரை நீரால் நிரம்பியிருக்க வேண்டியது அவசியமாகும்[1][7] .

கால்நடைகள்[தொகு]

பர்மாவில் உள்ள விவசாயிகள் உணவுக்காகவும் வயல்களில் உழைப்பதற்காகவும் கால்நடைகளை வளர்த்தனர். மாடுகள், எருமைகள், ஆடுகள், செம்மறிகள், கோழிகள், மற்றும் பன்றிகள் கால்நடைகளில் அடங்கும். எருதுகளும் எருமைகளும் நாடு முழுவதும் பணி விலங்காக பயன்பட்டன. பெரும்பாலான கால்நடைகள் வறண்ட வடக்குப் பகுதிகளில் வளர்க்கப்பட்டன[4]. மேய்ச்சல் நிலங்களில் விவசாயிகள் ஆடுகளைப் பாலுக்காக வளர்த்தனர். [2]

பர்மா விவசாயிகள் H5N1 என்ற ஒருவகை வைரசு நோயால் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதன் விளைவாக கோழிகள், காடைகள் மற்றும் அவற்றின் முட்டைகள் தரமிழந்து போயின. எனினும் 2006 ஆம் ஆண்டு வரை கால்நடை அலுவலர்கள் இவ்வுயிரினங்களின் தரம் உயர்த்த நிதிவழங்கும் திட்டத்தினை அறிவித்தனர்.[8]

மீன் பிடித்தல்[தொகு]

பர்மாவின் உணவு உற்பத்தியில் மீன் பிடித்தல் ஒரு நியாயமான பகுதியை ஈடுசெய்தது. உப்பு நீர் மற்றும் நன்னீர் ஆகிய இரண்டு நீர்நிலைகளிலும் மீன்பிடித்தல் தொழில் நடைபெற்றது. பர்மிய நன்னீரில் கிட்டத்தட்ட 300 வகையான மீனினங்கள் காணப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவற்றில் சிலவகை மீன்கள் குறிப்பிட்ட ஒருசில பகுதிகளுக்கே உரியனவாக இருந்தன[9] . வடக்கு பர்மாவில் உள்ள இந்தாவ்கை ஏரியில் கிடைக்கும் கடல்குதிரை வகை மீன் இதற்கு உதாரணமாகக் கூறலாம். கருவாடு எனப்படும் உலர்த்தப்பட்ட மீன்கள் பர்மிய உணவின் ஒரு பகுதியாகும். இவையே புரத உணவுக்கு ஆதார மூலமாகவும் பர்மாவில் கருதப்படுகிறது.[4]

கடற்கரை, கடற்கரை அருகு மீன்பண்ணைகள் மற்றும் ஆழ்கடல் மீன்வளப்பகுதிகள் என்ற பலவகையான மீன்பிடி பகுதிகள் பர்மாவில் காணப்படுகின்றன. பெரும்பான்மையான மீன்கள் நவீன தொழில் நுட்பத்தை உபயோகித்து வர்த்தகத்திற்காக பிடிக்கப்படுகின்றன. மரபார்ந்த பண்டைய முறைகளைப் பயன்படுத்தி சிறிய அளவில் மீன்கள் பிடிக்கப்படுகின்றன.[10]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Burma (Myanmar) - Agriculture". Encyclopedia of the Nations. பார்த்த நாள் 1 March 2012.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 "Myanmar Agriculture Rice Beans Kenaf Bamboo Products". AllMyanmar.com. பார்த்த நாள் 1 March 2012.
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 "East & Southeast Asia :: Burma". CIA World Factbook. பார்த்த நாள் 1 March 2012. பிழை காட்டு: Invalid <ref> tag; name "CIA" defined multiple times with different content
  4. 4.0 4.1 4.2 "Burma (Myanmar) - Location and size, Population, Livestock, Forestry, Fishing, Mining". Encyclopedia of the Nation. பார்த்த நாள் 15 March 2012.
  5. 5.0 5.1 5.2 Fox, Jefferson M. (2000). "How Blaming 'Slash & Burn' Farmers is Deforesting Mainland Southeast Asia". East-West Center 47: 1–8. http://scholarspace.manoa.hawaii.edu/bitstream/handle/10125/3832/api047.pdf?sequence=1. பார்த்த நாள்: 1 March 2012. 
  6. "Slash and Burn". The Encyclopedia of Earth. பார்த்த நாள் 1 March 2012.
  7. "Paddy (Agriculture)". Encyclopaedia Britannica. பார்த்த நாள் 1 March 2012.
  8. "Burma Restocks Poultry Farms Again". Bio-Medicine.org. பார்த்த நாள் 1 March 2012.
  9. "The Freshwater Fishes of Myanmar". Naturhistoriska Riksmuseet. பார்த்த நாள் 19 March 2012.
  10. "FAO Fishery Country Profile – The Union of Myanmar". Fao.org. பார்த்த நாள் 1 March 2012.

உசாத்துணை[தொகு]