மாலினிதன்

ஆள்கூறுகள்: 27°39′24″N 94°42′21″E / 27.65667°N 94.70583°E / 27.65667; 94.70583
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாலினிதன்
மாலினிதன் is located in இந்தியா
மாலினிதன்
மாலினிதன் கோயில் அமைவிடம்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:அருணாசலப் பிரதேசம்
மாவட்டம்:கீழ் சியாங் மாவட்டம்
அமைவு:இலிகாபலி
ஆள்கூறுகள்:27°39′24″N 94°42′21″E / 27.65667°N 94.70583°E / 27.65667; 94.70583
கோயில் தகவல்கள்
வரலாறு
அமைத்தவர்:சுதியா அரசர்கள்
மாலினிதன் கோயில் வளாகம்

மாலினிதன் (Malinithan) என்பது ஒரு தொல்பொருள் தளமாகும். இது இந்திய மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில் பிரம்மபுத்திரா ஆற்றின் வடக்கு கரையில் ஆரம்பகால இடைக்காலத்தின் ஒரு இந்துக் கோவிலின் இடிபாடுகளைக் கொண்டுள்ளது. இடிபாடுகளின் தொல்பொருள் ஆய்வுகள் இப்பகுதியில் இந்து மத செல்வாக்கின் காலத்தில் கறுப்பு கிரானைட் கற்களால் கோயில் கட்டப்பட்டதாக குறிப்பிடுகிறது. இது 13 முதல் 14 ஆம் நூற்றாண்டில் சுதியா மன்னர்களால் கட்டப்பட்டது. [1] [2] [3] [4] [5] சுதியா மன்னர்கள் தங்கள் இராச்சியத்தின் பல்வேறு பகுதிகளில் பிராமணர்களுக்கு நில மானியங்களை வழங்கத் தொடங்கிய காலம் இது. [6] சுதியா பழங்குடி தெய்வமான கெச்சாய்-கைட்டி, பாழடைந்த கோவிலில் வழிபடப்பட்ட பிரதான தெய்வம் என்று நம்பப்பட்டது.

அமைவிடம்[தொகு]

மாலினிதன் தொல்பொருள் தளம் இலிகாபலி நகரத்தில் உள்ள சியாங் மலைகளின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இது அருணாச்சல பிரதேசத்தின் கீழ் சியாங் மாவட்டத்தின் துணைப்பிரிவாகும். [6][7] இது 21 மீட்டர் (69 அடி) உயரத்திலுள்ள ஒரு மலையில் அமைந்துள்ளது. இதைச் சுற்றி சமவெளிகளும்ம் பிரம்மபுத்திரா ஆறும் அமைந்துள்ளது. [8]

கதை[தொகு]

இந்த தளம் பிரித்தானிய இராச்சியத்தின் காலங்களில் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பின்னர் கதைகள் இந்த தளத்திற்காக புனையப்பட்டுள்ளன. இந்தப் புராணத்தின் படி, கிருட்டிணன் விதர்பாவின் மன்னர் பீஷ்மகாவின் மகள் ருக்மணியைத் திருமணம் செய்ய விரும்பியபோது, சிசுபாலனுடனான திருமணத்திற்கு முன்பு அவளை கடத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது. கிருட்டிணரும் ருக்மிணியும் பின்னர் பீஷ்மகாநகரில் இருந்து துவாரகைக்குச் சென்று, மாலினிதனில் தங்களை நிறுத்திக் கொண்டு, அங்கே சிவன் மற்றும் துர்கையின் விருந்தினர்களாக இருந்தனர். சிவனின் மனைவியான பார்வதி, தனது விருந்தினர்களை அன்புடன் வரவேற்று, தனது பழத்தோட்டத்திலிருந்து பறிக்கப்பட்ட பூக்களால் செய்யப்பட்ட மாலைகளை அவர்களுக்கு வழங்கினார். [6][8] கிருட்டிணன் மலர்களின் அழகையும் வாசனையையும் கண்டு மிகவும் ஈர்க்கப்பட்டார். அவர் பார்வதியை மாலினி என்று அழைத்தார். அதாவது "தோட்டத்தின் உரிமையாளர்" என்று பொருள்படும். அதன் பின்னர் அந்த இடத்திற்கு மாலினிதன் என்று பெயரிடப்பட்டது. மற்றொரு புராணத்தில், அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட தலை இல்லாமல் ஒரு பெண்ணின் உருவம், சிவனின் காதலியாக இருந்த மாலினியைக் குறிக்கிறது என்று கூறப்படுகிறது. இங்கு காணப்படும் துர்கையின் உருவம் தெய்வீகத் தாயின் பழங்காலப் பெயரான "புபேன்" என்றும் அழைக்கப்படுகிறது. 

வரலாறு[தொகு]

தொல்பொருள் ஆய்வுகளில் மக்களின் வழிபாட்டுடன் தொடர்புடைய சிவன் மலையில் துர்கையின் சிற்பமும், காளையுடன் கூடிய சிவனின் உருவமும் கிடைத்தது. இவற்றின் அடிப்படையில், இப்பகுதியில் சக்தி வழிபாடு நடைமுறையில் இருந்ததாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஊகித்துள்ளனர். இது சாக்தத்தின் மூன்று முன்னணி மையங்களில் ஒன்றாகும். மற்ற இரண்டு மையங்கள் வடக்கு லக்கீம்பூரிலுள்ள கோரேஹோகா கிராமத்தில் தாய் தெய்வமான பகவதி, மேற்கு முனையில் தாகுவாகானாவில் ஹர்ஹிதன் , கிழக்கில் தமரேசரி என்று கூறப்படுகிறது. 10 முதல் 11 ஆம் நூற்றாண்டு காளிகா புராணத்தில் இந்த கோவிலிலைப் பற்றிய எந்தக் குறிப்பும் இல்லை. இந்த இடத்தில் உள்ள அனைத்து தொல்பொருள் சான்றுகளிலிருந்தும், தொல்பொருள் ஆய்வாளர்கள் இந்த கோயில் 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று கருதுகின்றனர். [9] தமிரேசுவரி கோயில், புரா-பூரி, பதும் புகுரி போன்ற சதியாவின் தளங்களிலும், நக்சபர்பத் மற்றும் புரோய் கோட்டை போன்ற பிற இடங்களிலும் காணப்பட்டதை விட மாலினியில் கல் செதுக்கல்கள் அதிகமாகக் காணப்பட்டன. இந்த கட்டமைப்புகள் அனைத்தும் ஒரே காலகட்டத்தில் ஒரே மக்களால் கட்டப்பட்டவை என்பதைக் குறிக்கிறது. அதாவது சுதியா மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டவை. [10] [11] கி.பி 1442 இல் சுதியா மன்னர் முக்ததர்மநாராயணனால் கட்டப்பட்ட செங்கல் சுவரின் அஸ்திவாரத்தில் தமரேசுவரி கோயிலில் அடையாளங்கள் காணப்பட்டன என்பது சுவாரஸ்யமானது. [12]

புகைப்படத் தொகுப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. Sarma, P.C.A study of the temple architecture of Assam from the Gupta period to the end of the Ahom rule: Chutiya architecture, p. 205
 2. Choudhury, R.D, Heritage of Architecture of Assam, p.5
 3. (Bose 1997)
 4. Sengupta, Gautam, Archeology in Northeast India, p.359
 5. Thakur, A.K, Pre-historic Archeological Remains of Arunachal Pradesh and People's perception: An Overview, p.6
 6. 6.0 6.1 6.2 "Malini Than". Government of Arunachal Pradesh. Archived from the original on 12 May 2015. பார்க்கப்பட்ட நாள் 3 May 2015.
 7. "Likabali". பார்க்கப்பட்ட நாள் 3 May 2016.
 8. 8.0 8.1 Sali 1998, ப. 148.
 9. Thakur, A.K, Pre-historic Archeological Remains of Arunachal Pradesh and People's perception: An Overview, p.6
 10. "The probability is that these ruins are the traces of as Hindu or Hinduised dynasty of local rulers who ruled over a kingdom confined to the north bank of Brahmaputra and extending from Burai in the west to Sadiya in the east. This dynasty is evidently the line of Chutia kings who assumed the surname Pala" Barua, K.L An Early History of Kamrupa 1933, p. 271.
 11. "If architectural continuity is admitted between the fortifications in the Sadiya region and the Burai river ruin site, it would be possible to believe that the kingdom of these rulers extended as far as the outer limit of Darrang district." Neog, Maheswar, Lights on a Ruling Dynasty of Arunachal Pradesh, p.218
 12. Hannay, S.F, Journal of the Asiatic society of Bengal 1848, p.467.

நூலியல்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாலினிதன்&oldid=3712669" இலிருந்து மீள்விக்கப்பட்டது