மாமூத்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
மாமூத் புதைப்படிவ காலம்:Early Pliocene to Middle Holocene | |
---|---|
கொலம்பிய மாமூத் ஜார்ஜ்.சி அருங்காட்சியகம், லாஸ் ஏஞ்சலஸ்
| |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | எலிபன்டிடே
|
இனக்குழு: | |
பேரினம்: | மாமூத்
|
மாமூத்துக்கள் (Mammoth) என்பன பூமியில் 4.8 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த எலபென்டியா என்ற உயிரியல் குடும்பத்தினை சேர்ந்த ஓர் உயிரினம் ஆகும். எலபென்டியா என்பது பிரோபாக்சிடியா என்ற உயிரியல் குடும்பத்தின் துணை குடும்பம் ஆகும். இந்த மாமூத்துகளுக்கும் தற்கால யானைகளுக்கும் நெருங்கிய படிவளர்ச்சித் தொடர்பு உள்ளது. மாமூத்துகளுக்கு தற்போதுள்ள பெரிய யானைகளை விட பெரிய தந்தங்கள் உண்டு மேலும் இதன் உடல் அடர்ந்த மயிர்களால் மூடப்பட்டும் காணப்பட்டது. மாமூத் என்கிற வார்த்தையானது மன்சி என்ற உருசிய மொழியில் இருந்த MAMOHT mamont என்ற சொல்லிலிருந்து திரிந்து வந்ததாகும்.
உருவம்
[தொகு]மாமூத்துக்கள் தற்கால யானைகளை ஒப்பிடும் போது மிகவும் பேருரு உடையதாகும். ஆங்கிலச் சொல் "mammoth" என்பது "பெரிய" அல்லது "மிகப்பெரிய" என்கிற பொருள் தருவதாகும். சோங்குவா ஆற்றில் கண்டுபிடிக்கப்பட்ட படிமமே இதுவரை கண்டுபிடிக்க பட்ட படிமங்களிலேயே மிகப்பெரியது (Songhua River mammoth). அது ஏறத்தாழ ஐந்து மீட்டர் உயரம் இருந்திருக்க கூடும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. பொதுவாக மாமூத்துகள் ஆறு முதல் எட்டு தொன்கள் எடை இருந்திருக்க கூடும் சில ஆண் மாமூத்துகள் பன்னிரண்டு தொன்கள் வரை இருந்திருக்கலாம் என கருதபடுகிறது.