மானஸ்பல் ஏரி

ஆள்கூறுகள்: 34°15′N 74°40′E / 34.250°N 74.667°E / 34.250; 74.667
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மானஸ்பல் ஏரி
Manasbal Lake
ஜம்மு காஷ்மீரில் மானஸ்பல் ஏரியின் அமைவிடம்
ஜம்மு காஷ்மீரில் மானஸ்பல் ஏரியின் அமைவிடம்
மானஸ்பல் ஏரி
Manasbal Lake
அமைவிடம்சபாபோரா, காந்தர்பல் மாவட்டம், ஜம்மு காஷ்மீர் (ஒன்றியப் பகுதி), இந்தியா
ஆள்கூறுகள்34°15′N 74°40′E / 34.250°N 74.667°E / 34.250; 74.667
ஏரி வகைநன்னீர்
வடிநிலப் பரப்பு33 km2 (13 sq mi)
வடிநில நாடுகள்இந்தியா
அதிகபட்ச நீளம்5 km (3.1 mi)
அதிகபட்ச அகலம்1 km (0.62 mi)[1]
மேற்பரப்பளவு2.81 km2 (1.08 sq mi)
சராசரி ஆழம்4.5 m (15 அடி)
அதிகபட்ச ஆழம்13 m (43 அடி)
நீர்க் கனவளவு0.0128 km3 (0.0031 cu mi)
நீர்தங்கு நேரம்1.2 years
கரை நீளம்110.2 km (6.3 mi)
கடல்மட்டத்திலிருந்து உயரம்1,583 m (5,194 அடி)
குடியேற்றங்கள்கொன்டபல்
1 கரை நீளம் என்பது சரியாக வரையறுக்கப்பட்ட அளவீடு அன்று.

மானஸ்பல் ஏரி (Manasbal Lake) என்பது இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் ஒன்றிய நிலப்பரப்பிலுள்ள காந்தர்பல் மாவட்டத்தில் இருக்கும் சபாபோரா பகுதியில் அமைந்துள்ள ஒரு நன்னீர் ஏரி. இந்தியாவின் ஆழமான ஏரிகளுள் மானஸ்பல் ஏரியும் ஒன்றாகும். இந்த ஏரியின் மிகத்தாழ்வான பகுதி 13 மீட்டர் அல்லது 43 அடி ஆழம் கொண்டது. இந்த ஏரியைச் சுற்றியவாறு நான்கு சிற்றூர்கள் அமைந்துள்ளன. அவை ஜரோக்பல், கொன்டபல், கிராட்பல் மற்றும் ஏரியின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள நெஸ்பல்.[2]

இந்த ஏரியின் பெயரான மானஸ்பல் என்பது திபெத்திலிருக்கும் மானசரோவர் ஏரியின் பெயரிலிருந்து பெறப்பட்டது.[3] முகலாய அரசி நூர் சகான் கட்டிய ஜரோகா பாக் (தூணிடைச் சாளரம்) என்றழைக்கப்படும் முகலாயத் தோட்டம் ஏரியை நோக்கியவாறு அமைந்துள்ளது.[4] காஷ்மீரின் நீர்வாழ் பறவைகளுக்கான இயற்கையான தங்குமிடங்களுள் ஒன்றான இந்த ஏரி பறவை நோக்கலுக்கு ஏற்றதாக உள்ளது, எனவே "காஷ்மீர ஏரிகளுக்கெல்லாம் மிக உயர்ந்த மணி" எனச் செல்லமாக அழைக்கப்படுகிறது.[5][6]

வரலாறு[தொகு]

இது ஒரு பழங்கால ஏரி என உள்ளூர் மக்கள் நம்புகின்றனர், ஆயினும் இந்த ஏரியின் சரியான வயது கணக்கிடப்பட வேண்டியுள்ளது. இந்த ஏரியின் வடக்கு கரையின் அருகில் இடிந்த நிலையில் பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு கோட்டை உள்ளது. முகலாயர்களால் கட்டப்பட்ட இக்கோட்டை பஞ்சாப் பகுதியிலிருந்து சிறீநகருக்குப் பயணிக்கும் கூண்டு வண்டிகளால் கடந்த காலங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.[3][5]

அணுகல்[தொகு]

சிறீநகரில் இருந்து ஷாதிபோரா, நஸீம், காந்தர்பல் வழியாகச் சாலை வழியே மானஸ்பல் ஏரிக்குச் செல்லலாம். காஷ்மீரின் பெரிய ஏரியான உளர் ஏரிக்கான சாலை இந்த ஏரியின் ஊடாக சாபாபோரா வழியாகச் செல்கிறது.[3] சோன்மார்க்கிலிருந்து காந்தர்பல் வழியாக இந்த ஏரிக்கு வருவதும் எளிது.

நீரியல்[தொகு]

இந்த ஏரியின் வடிநிலம் 10 km2 (3.9 sq mi) பரப்பளவு கொண்டது. இந்த ஏரிக்கான நீர்வரத்தாகப் பெரிய ஓடைகள் ஏதுமில்லை, எனவே இது முதன்மையாக மழை மற்றும் பனிப்பொழிவாலும் நீரூற்றுகளாலும் நிரப்பப்படுகிறது.[7] இந்த ஏரியிலிருந்து ஜீலம் ஆற்றுக்கு கட்டுப்படுத்தப்பட்ட முறையில் நீர்வெளியேறுகிறது.

பொருளியல்[தொகு]

இந்த ஏரி குடிநீருக்கான ஊற்றாக மட்டுமின்றி, நீர்வழிப் போக்குவரத்துக்கும், மீன்பிடிப்புக்கும், பொருளியல் வகையில் பயன்படும் தாவரங்களை அறுவடை செய்யவும், சுற்றுலா இடமாகவும், பொழுதுபோக்கிடமாகவும் பயன்படுகிறது.[5]

ஏரியின் விளிம்புப் பகுதியில் நெலும்போ நூஸிஃபெரா தாவர இனத்தை சார்ந்த தாமரைகள் யூலை மற்றும் ஆகத்து மாதங்களில் பெருமளவில் பூக்கின்றன. தாமரைகளின் வேர்கள் அறுவடை செய்யப்பட்டு சந்தைப்படுத்தப்படுகின்றன, உள்ளூர் மக்கள் அதை உணவாகவும் பயன்படுத்துகின்றனர்.[3]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 9 October 2011. பார்க்கப்பட்ட நாள் 30 July 2011.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  2. "Neglect, of Manasbal Lake". Greater Kashmir (in அமெரிக்க ஆங்கிலம்). 2015-03-13. பார்க்கப்பட்ட நாள் 2020-10-10.
  3. 3.0 3.1 3.2 3.3 http://kashmir-tourism.com/jammu-kashmir-lakes-mansabal-lake.htm, Manasbal Lake
  4. "Manasbal Lake, Manasbal Lake in Jammu, Lakes in Jammu, Jammu Kashmir Lake Tours, Travelling in Jammu Kashmir". Archived from the original on 2012-02-14. பார்க்கப்பட்ட நாள் 2012-04-25. Mansbal lake
  5. 5.0 5.1 5.2 "Manasbal Lake". Archived from the original on 2012-03-03. பார்க்கப்பட்ட நாள் 2012-04-25. Manasbal Lake
  6. http://www.mascottravels.com/kashmirlakes.htm kashmir lakes
  7. http://www.dailyexcelsior.com/web1/07nov26/news.htm[தொடர்பிழந்த இணைப்பு], Dal look for Manasbal lake soon

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மானஸ்பல்_ஏரி&oldid=3655395" இலிருந்து மீள்விக்கப்பட்டது