நைகீன் ஏரி

ஆள்கூறுகள்: 34°06′50″N 74°49′56″E / 34.11389°N 74.83222°E / 34.11389; 74.83222
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நைகீன் ஏரி
Nigeen Lake
அரி பர்பத் மலைக்குன்றின் பின்னணியில் நைகீன் ஏரி தோற்றம்
நைகீன் ஏரி Nigeen Lake is located in ஜம்மு காஷ்மீர்
நைகீன் ஏரி Nigeen Lake
நைகீன் ஏரி
Nigeen Lake
அமைவிடம்சிறிநகர், சம்மு காசுமீர், இந்தியா
ஆள்கூறுகள்34°06′50″N 74°49′56″E / 34.11389°N 74.83222°E / 34.11389; 74.83222
முதன்மை வெளியேற்றம்நல்லா அமீர் கான்
வடிநில நாடுகள்இந்தியா
அதிகபட்ச நீளம்2.7 km (1.7 mi)
அதிகபட்ச அகலம்0.82 km (0.51 mi)
கடல்மட்டத்திலிருந்து உயரம்1,582 m (5,190 அடி)

நைகீன் ஏரி (Nigeen ஏரி) இந்தியாவின் சம்மு காசுமீர் மாநிலத்தில் உள்ள சிறீநகரில் அமைந்துள்ள ஓர் ஏரியாகும். நாகீன் ஏரி என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது. ஒரு மிதமான கனிமவளம் நிறைந்த ஏரியாக இது கருதப்படுகிறது.[1] சில நேரங்களில் தால் ஏரியின் ஒரு பகுதியாகவும் நைகீன் ஏரி கருதப்படுகிறது. ஒரு குறுகிய நீரிணை வழியாக தால் ஏரியுடன் இது இணைக்கப்பட்டுள்ளது. [2] மேலும் நல்லா அமீர் கான் கால்வாய் மூலமாக குசால் சார் மற்றும் கில் சார் ஏரிகளுடன் நைகீன் ஏரி இணைக்கப்பட்டுள்ளது. [3]

சொற்பிறப்பியல்[தொகு]

நைகீன் ஏரியை ஏராளமான வில்லோ மற்றும் பாப்லர் மரங்கள் சூழ்ந்துள்ளன. எனவே, வளையத்தில் காணப்படும் நகை என்ற பொருள் கொண்ட நகீனா என்ற சொல்லால் இவ்வேரி குறிப்பிடப்பட்டுள்ளது. நைகீன் என்ற சொல் நகீனா என்ற சொல்லின் உள்ளூர் மாறுபாடாகும். [2]

அமைவிடம்[தொகு]

நைகீன் ஏரி அரி பர்பத் மலையடிவாரத்தில், தால் ஏரியின் மேற்கே அமைந்துள்ளது. இதன் வடக்கு மற்றும் மேற்கு திசைகளில் பாக்வான்போரா மற்றும் லால் பசார் ஆகிய இடங்களும், வடகிழக்கில் புகழ்பெற்ற சன்னதிக்கு பெயர் பெற்ற அசுரத்பால் வட்டாரமும் அமைந்துள்ளன. [2]

தற்போதைய நிலை[தொகு]

சிறீநகரில் நைகீன் ஏரி ஒரு முக்கிய சுற்றுலா அம்சமாகும், இது தால் ஏரியுடன் ஒப்பிடும்போது ஒப்பீட்டளவில் அழகிய நீருக்காக அறியப்படுகிறது. படகு வீடுகள் மற்றும் சிகாரா மரப்படகுகள் போன்றவை வழக்கமான காட்சிப் பொருட்களாகும். தால் ஏரியை விட ஆழமாகவும், கூட்டமாகவும் இருப்பதால் நைகீன் ஏரி நீச்சலுக்கும் ஏற்றதாகும். [2] காலனித்துவ காலத்தைச் சேர்ந்த நைகீன் சங்கம் ஏரியின் கிழக்கு கரையில் அமைந்துள்ளது.

இருப்பினும், காசுமீர் பள்ளத்தாக்கிலுள்ள பிற நீர்நிலைகளின் பிரச்சினை போலவே, இந்த ஏரியும் அத்துமீறல்களால் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இதன் நீரின் தரம் மோசமாகிறது. வெள்ள அபாயமும் அதிகரிக்கிறது. இதை உணர்ந்த சம்மு-காசுமீர் அரசாங்கம் ஏரியின் நிலையை மேம்படுத்தவும், அதன் அசல் மகிமைக்கு மீட்டெடுக்கவும் நடவடிக்கை எடுப்பதில் ஈடுபட்டுள்ளது. [4]

Nigeen lake
நைகீன் ஏரியின் மேற்கு கரையில் வரிசையாக நிற்கும் படகு வீடுகள் ஒரு பரந்த காட்சி. இடது முன்புறத்தில் அரி பர்பத் மலைக்குன்றும் பின்னணியில் பனி மூடிய பிர் பஞ்சால் மலைத்தொடரும் உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Nigeen lake turned eutrophic" இம் மூலத்தில் இருந்து 13 ஜூலை 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150713225220/http://www.greaterkashmir.com/news/news/-nigeen-lake-has-turned-eutrophic/126959.html. 
  2. 2.0 2.1 2.2 2.3 "Nigeen Lake-JK Tourism". பார்க்கப்பட்ட நாள் 11 July 2015.[தொடர்பிழந்த இணைப்பு]
  3. Unni,K.S. Conservation and Management of Aquatic Ecosystems கூகுள் புத்தகங்களில்
  4. "J&K govt to take steps for beautification of Nigeen lake". http://www.business-standard.com/article/pti-stories/j-k-govt-to-take-steps-for-beautification-of-nigeen-lake-115061001176_1.html. 

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=நைகீன்_ஏரி&oldid=3219066" இலிருந்து மீள்விக்கப்பட்டது