மலேசியத் தேன் வழிகாட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலேசியத் தேன் வழிகாட்டி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
பிசிபார்மிசு
குடும்பம்:
இண்டிகேட்டோரிடே
பேரினம்:
இண்டிகேட்டர்
இனம்:
இ. ஆர்கிபெலாஜிகசு
இருசொற் பெயரீடு
இண்டிகேட்டர் ஆர்கிபெலாஜிகசு
தெம்மினிக், 1832

மலேசியத் தேன் வழிகாட்டி (Malaysian honeyguide)(இண்டிகேட்டர் ஆர்கிபெலாஜிகசு) என்பது இண்டிகேட்டரிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவையாகும். இவை மரங்கொத்திகளுடன் தொடர்புடைய பாசரின் பறவைகளுக்கு நெருங்கிய தொல் வெப்ப மண்டல உயிரினம் ஆகும். இந்த இனம் தென்கிழக்கு ஆசியாவைச் சேர்ந்தது.

விளக்கம்[தொகு]

மலேசியத் தேன் வழிகாட்டி நடுத்தர அளவிலான பறவையாகும். இது 18 செ. மீ. நீளம் வரை வளரக்கூடியது. ஆலிவ்-பழுப்பு நிறத்தில் பசுமை நிற கோடுகளுடன், சிவப்பு நிற கருவிழி, அடர்த்தியான சாம்பல் அலகு மற்றும் அடிப்பகுதியில் சாம்பல் கலந்த வெண்மை நிறத்திலானது. ஆணின் தோளில் மஞ்சள் திட்டு உள்ளது.

வாழ்விடம்[தொகு]

மலேசியத் தேன் வழிகாட்டி மேற்கு தாய்லாந்து, தீபகற்ப மலேசியா, போர்னியோ மற்றும் சுமாத்திரா தீவின் தாழ் நில அகன்ற காடுகள் முழுவதும் காணப்படுகிறது.

நடத்தை[தொகு]

மலேசியத் தேன் வழிகாட்டியின் அழைப்பு பூனை போன்ற " மியாவ் " ஒலியுடன் தொடர்ந்து சத்தமாக ஒலிக்கும். இதனுடைய முக்கிய உணவாகப் பூச்சிகள் உள்ளன. குறிப்பாக இவை காட்டுத் தேனீக்கள் மற்றும் குளவிகளை உண்ணுகிறது. இது மரத்தின் பொந்துகளில் கூடு கட்டுகிறது.

நிலை[தொகு]

தொடர்ந்து வாழ்விட இழப்பு, உள்ளூர் மற்றும் அரிதான எண்ணிக்கை காரணமாக, மலேசியத் தேன் வழிகாட்டி பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியலில் அச்சுறு நிலையை அண்மித்த உயிரியாக மதிப்பிடப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2022). "Indicator archipelagicus". IUCN Red List of Threatened Species 2022: e.T22680620A220010505. doi:10.2305/IUCN.UK.2022-2.RLTS.T22680620A220010505.en. https://www.iucnredlist.org/species/22680620/220010505. பார்த்த நாள்: 12 November 2021. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மலேசியத்_தேன்_வழிகாட்டி&oldid=3826448" இலிருந்து மீள்விக்கப்பட்டது