அந்தோபிலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அந்தோபிலாக்கள்
Bees Collecting Pollen 2004-08-14.jpg
தேனீ (Apis mellifera) collecting pollen
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: ஆறுகாலிகள்
வகுப்பு: பூச்சிகள்
வரிசை: ஐமெனோப்தேரா
துணைவரிசை: அப்போகிரிட்டா
பெருங்குடும்பம்: அப்போவைடீ
தரப்படுத்தப்படாத: அந்தோபிலா
குடும்பங்கள்

அண்ட்ரேனிடீ
அப்பிடீ
காலெக்டிடீ
தாசைப்போடாவைடீ
ஆலிக்ட்டைடீ
மெகாச்சிலைடீ
மெகானொமியைடீ
மெலிட்டைடீ
இசுட்டெனோடிரைடைடீ

வேறு பெயர்கள்

அப்பிபார்மசு

அந்தோபிலா (Anthophila) என்பது அறிவியல் வகைப்பாட்டில் அப்போவைடியீ பெருங்குடும்பத்தில் அடங்கிய ஒரு பிரிவு ஆகும். எனினும் இதற்கு இன்னும் வகைப்பாட்டுத் தலைப்பு ஒதுக்கப்படவில்லை. தேனீ இப் பிரிவைச் சேர்ந்தது. தாவரங்களில் மகரந்தச்சேர்க்கை, தேன் உற்பத்தி, தேன்மெழுகு உற்பத்தி என்பவை தொடர்பில் அந்தோபிலாக்களைப் பற்றிப் பலரும் அறிவர். இவை ஒருகண (monophyletic) வழிவந்தவை. அந்தோபிலாக்களில் ஒன்பது குடும்பங்களுள் அடங்கும் ஏறத்தாழ 20,000 அறியப்பட்ட இனங்கள் உள்ளன. இவற்றுள் பல விவரிக்கப்படாதவையாக உள்ளதுடன் இவற்றின் உண்மையான எண்ணிக்கை இன்னும் கூடுதலாக இருக்கவும் வாய்ப்புக்கள் உள்ளன. இவை அண்டார்ட்டிக்கா தவிர்ந்த எல்லாக் கண்டங்களிலும் காணப்படுகின்றன. உலகில் உள்ள வாழிடத் தொகுதிகள் அனைத்திலும் இவ்வகைப் பூச்சிகளால் மகரந்தச் சேர்க்கை அடையும் பூக்கும் தாவரங்கள் உள்ளன.

அறிமுகம்[தொகு]

அந்தோபிலாக்கள் பூக்களின் தேன், பூந்தாது ஆகியவற்றை உண்கின்றன. சிறப்பாகத் தேன் ஆற்றல் மூலமாகவும், பூந்தாது புரதம் முதலிய பிற ஊட்டப் பொருள் வழங்கியாகவும் உள்ளன. பூந்தாதுக்கள் பெரும்பாலும் இவற்றின் குடம்பிகளுக்கு உணவாகின்றது.

அந்தோபிலாக்களுக்குத் தும்பிக்கை போன்ற உறிஞ்சுகுழல்கள் உள்ளன. இவை பூக்களில் இருந்து தேனை உறிஞ்சி எடுப்பதற்கு அவற்றுக்கு உதவுகின்றன. இவற்றுக்கு அமைந்துள்ள உணர்கொம்புகள் இப் பெரும்குடும்பத்தைச் சேர்ந்த எல்லாப் பூச்சிகளுக்கும் உள்ளதுடன் ஆண் பூச்சிகளுக்குப் 13 துண்டுகளாகவும், பெண் பூச்சிகளுக்கு 12 துண்டுகளாகவும் காணப்படுகின்றன. எல்லா அந்தோபிலாக்களும் 2 சோடி இறக்கை களைக் கொண்டனவாக உள்ளன. இவற்றுள் பின்புற இறக்கைகள் இரண்டும் சிறியவை. சில இனங்களில் ஒரு பாலினமோ அல்லது ஒரு சாதியோ சிறிய இறகுகளைக் கொண்டிருப்பதுண்டு. இவ்வாறு சிறிய இறகுகளைக் கொண்டிருப்பவை பறப்பதற்குச் சிரமப்படுவனவாக அல்லது பறக்க முடியாதனவாக இருக்கின்றன. எனினும் இறக்கைகள் இல்லாத அந்தோபிலாக்கள் கிடையா.

அந்தோபிலாக்களுள் மிகவும் சிறிய இனம் டிரைகோனா மினிமா என்பதாகும். இவற்றுக்குக் கொடுக்குகள் இருப்பதில்லை. இவ்வினத்தைச் சேர்ந்த வேலையாள் பூச்சிகள் 2.1 மிமீ (5/64") நீளம் கொண்டவை. உலகில் காணப்படும் மிகப்பெரிய அந்தோபிலா மெகாச்சிலே புளூட்டோ என்னும் இனமாகும். இவ்வினத்தின் பெண் பூச்சிகள் 39 மிமீ (1.5") வரை நீளமாக வளர்கின்றன. வடவரைக் கோளத்தில் மிகப் பொதுவாகக் காணப்படுபவை ஆலிக்ட்டைடீ குடும்பத்தைச் சேர்ந்த இனங்களாகும். இவை சிறியனவான இவற்றைப் பெரும்பாலும் குளவிகளுடன் அல்லது ஈக்களுடன் குழம்பிக்கொள்கிறார்கள்.

அந்தோபிலாக்களில் மிகவும் அதிகமாக அறியப்படுபவை தேனீக்கள் ஆகும். இவை பூக்களில் இருந்து தேனை எடுத்துச் சேமிக்கின்றன. இதனை மனிதர்கள் தமது தேவைக்காக எடுத்துக்கொள்கிறார்கள். இவ்வாறு தேனுக்காகத் தேனீக்களை வளர்த்தல் தேனீவளர்ப்பு என அறியப்படுகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அந்தோபிலா&oldid=2267340" இருந்து மீள்விக்கப்பட்டது