மலேசியத் தேன் வழிகாட்டி
மலேசியத் தேன் வழிகாட்டி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | பிசிபார்மிசு
|
குடும்பம்: | இண்டிகேட்டோரிடே
|
பேரினம்: | இண்டிகேட்டர்
|
இனம்: | இ. ஆர்கிபெலாஜிகசு
|
இருசொற் பெயரீடு | |
இண்டிகேட்டர் ஆர்கிபெலாஜிகசு தெம்மினிக், 1832 |
மலேசியத் தேன் வழிகாட்டி (Malaysian honeyguide)(இண்டிகேட்டர் ஆர்கிபெலாஜிகசு) என்பது இண்டிகேட்டரிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவையாகும். இவை மரங்கொத்திகளுடன் தொடர்புடைய பாசரின் பறவைகளுக்கு நெருங்கிய தொல் வெப்ப மண்டல உயிரினம் ஆகும். இந்த இனம் தென்கிழக்கு ஆசியாவைச் சேர்ந்தது.
விளக்கம்
[தொகு]மலேசியத் தேன் வழிகாட்டி நடுத்தர அளவிலான பறவையாகும். இது 18 செ. மீ. நீளம் வரை வளரக்கூடியது. ஆலிவ்-பழுப்பு நிறத்தில் பசுமை நிற கோடுகளுடன், சிவப்பு நிற கருவிழி, அடர்த்தியான சாம்பல் அலகு மற்றும் அடிப்பகுதியில் சாம்பல் கலந்த வெண்மை நிறத்திலானது. ஆணின் தோளில் மஞ்சள் திட்டு உள்ளது.
வாழ்விடம்
[தொகு]மலேசியத் தேன் வழிகாட்டி மேற்கு தாய்லாந்து, தீபகற்ப மலேசியா, போர்னியோ மற்றும் சுமாத்திரா தீவின் தாழ் நில அகன்ற காடுகள் முழுவதும் காணப்படுகிறது.
நடத்தை
[தொகு]மலேசியத் தேன் வழிகாட்டியின் அழைப்பு பூனை போன்ற " மியாவ் " ஒலியுடன் தொடர்ந்து சத்தமாக ஒலிக்கும். இதனுடைய முக்கிய உணவாகப் பூச்சிகள் உள்ளன. குறிப்பாக இவை காட்டுத் தேனீக்கள் மற்றும் குளவிகளை உண்ணுகிறது. இது மரத்தின் பொந்துகளில் கூடு கட்டுகிறது.
நிலை
[தொகு]தொடர்ந்து வாழ்விட இழப்பு, உள்ளூர் மற்றும் அரிதான எண்ணிக்கை காரணமாக, மலேசியத் தேன் வழிகாட்டி பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியலில் அச்சுறு நிலையை அண்மித்த உயிரியாக மதிப்பிடப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ BirdLife International (2022). "Indicator archipelagicus". IUCN Red List of Threatened Species 2022: e.T22680620A220010505. doi:10.2305/IUCN.UK.2022-2.RLTS.T22680620A220010505.en. https://www.iucnredlist.org/species/22680620/220010505. பார்த்த நாள்: 12 November 2021.