உள்ளடக்கத்துக்குச் செல்

மலாய் குருகு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Gorsachius|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
மலாய் குருகு
Malayan night heron
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Gorsachius
இனம்:
இருசொற் பெயரீடு
Gorsachius melanolophus
(இராஃபிள்சு, 1822)
Range of G. melanolophus      Breeding range     Resident range     Wintering range

மலய் குருகு (Malayan night heron, also known as Malaysian night heron and tiger bittern [2] ) என்பது ஒரு நடுத்தர அளவிலான ஹெரான் ஆகும். இது தெற்கு மற்றும் கிழக்கு ஆசியாவில் காணப்படுகிறது.

பரவலும் வாழ்விடமும்

[தொகு]

மலாய் குருகானது இந்தியா, இலங்கை, புரூணை, நேபாளம், மியான்மர், வங்காளதேசம், கம்போடியா, லாவோஸ், வியட்நாம், தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், சீனா, இந்தோனேசியா, பிலிப்பீன்சு, தைவான் யப்பான் ஆகிய நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இது சிலசமயம் கிறிஸ்துமசு தீவு மற்றும் பலாவுவில் தற்செயலாக வந்து செல்கிறது. இவை பரவியுள்ள எல்லை 1,240,000 கிமீ 2 என மதிப்பிடபட்டுள்ளது. இந்த பறவை காடுகள், நீரோடைகள், சதுப்பு நிலங்களில் காணப்படுகிறது. [3]

தைவானின் சிஞ்சுவில் ஒரு மலாய் குருகு

விளக்கம்

[தொகு]

மலாய் குருகு சுமார் 48 cm (19 அங்) நீளமுள்ளது. [4] இறக்கைகள் விரித்த நிலையில் இப்பறவையின் அகலம் சுமார் 86 cm (34 அங்) ஆகும் . [5] இதன் அலகு பருத்து குட்டையாக இருக்கும். இதன் கழுத்தும், மார்பகமும் செம்பழுப்பு நிறத்தில் இருக்கும். கழுத்தின் மையத்தில் இருந்து மார்பகத்திற்குக் கோடுகள் செல்கின்றன. [4] உடலின் மேல்பகுதி நல்ல செம்பழுப்பு நிறத்தில் உள்ளது. பறக்கும் இறகுகள் கருப்பு நிறத்தில் இருக்கும். தலை உச்சி கருப்பு, கன்னம் வெள்ளை, கண்கள் மஞ்சள், அலகு வெளிர் சாம்பல் நிறத்திலும், கால்கள் பசுமை தோய்ந்த பழுப்பு நிறத்தில் இருக்கும். இவை இளம் பருவத்தில் சாம்பல் நிறத்தில் இருந்து செம்பழுப்பு நிறத்தில் இருக்கும். மேலும் புள்ளிகள் மற்றும் சிறு வரிகள் கொண்டிருக்கும்.

இளம் வயதில் பறவை
மலாய் குருகு (கோர்சாசியஸ் மெலனோலோபஸ்)

உயிரியல்

[தொகு]

மலாய் குருகு பொதுவாக தனித்து இருக்கும். இது மரங்களில் தங்கி, திறந்த வெளியில் உணவு தேடுகிறது. இதன் மிகவும் பொதுவான உணவு மண்புழுக்கள் மற்றும் தவளைகள் ஆகும். சில சமயங்களில் இது மீன்களை உண்ணும். [6] இதன் செரிக்கப்படாத எச்சத்தை ஆய்வு செய்ததில் அதில் ஊர்வன, நத்தை, பூரான், சிலந்தி, நண்டு, பூச்சிகள் போன்றவற்றின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. [7]

பாதுகாப்பு

[தொகு]

இந்த பறவை ஒரு பெரிய வாழும் பரப்பைக் கொண்டுள்ளது. மேலும் இதன் உலகளாவிய எண்ணிக்கை 2,000 முதல் 20,000 வரை இருக்கலாம் என கருதப்படுகிறது. இதன் எண்ணிக்கைப் போக்கு தெரியவில்லை, ஆனால் இது தீவாய்ப்பு இனங்கள் என்ற நிலைக்கான அளவுகோல்களை நிறைவு செய்யவில்லை.

மேற்கோள்கள்

[தொகு]
  1. BirdLife International (2016). "Gorsachius melanolophus". IUCN Red List of Threatened Species 2016: e.T22697242A93604480. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22697242A93604480.en. https://www.iucnredlist.org/species/22697242/93604480. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. "Malayan Night-Heron". Birding in Taiwan. பார்க்கப்பட்ட நாள் 31 July 2016.
  3. Grimmett, Richard; Inskipp, Carol; Inskipp, Tim (2013). Birds of the Indian Subcontinent. Bloomsbury. p. 82. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4081-6264-4.
  4. 4.0 4.1 Jeyarajasingam, Allen; Pearson, Alan (2012). A Field Guide to the Birds of Peninsular Malaysia and Singapore. Oxford University Press. p. 99. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-1996-3942-7.
  5. Kennedy, Robert (2000). A Guide to the Birds of the Philippines. Oxford University Press. p. 31. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-1985-4668-9.
  6. Chang, C. (2000).
  7. Kawakami, Kazuto; Fujita, Masaki; Hasegawa, Motohiro; Makahira, Hiroshi (2011). "Dietary characteristics of the Malayan Night Heron (Gorsachius melanolophus) in the Yaeyama Islands, southern Japan". Chinese Birds 2 (2): 87–93. doi:10.5122/cbirds.2011.0015. http://www.chinesebirds.net/EN/abstract/abstract75.shtml. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலாய்_குருகு&oldid=3756959" இலிருந்து மீள்விக்கப்பட்டது