மலவள்ளி

ஆள்கூறுகள்: 12°23′N 77°05′E / 12.38°N 77.08°E / 12.38; 77.08
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலவள்ளி
நகரம்
மலவள்ளி is located in கருநாடகம்
மலவள்ளி
மலவள்ளி
கருநாடகத்தில் அமைவிடம்
மலவள்ளி is located in இந்தியா
மலவள்ளி
மலவள்ளி
மலவள்ளி (இந்தியா)
ஆள்கூறுகள்: 12°23′N 77°05′E / 12.38°N 77.08°E / 12.38; 77.08
நாடு India
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்மாண்டியா
அரசு
 • வகைTown Municipal Council
 • நிர்வாகம்Malavalli Town Municipal Council
பரப்பளவு[1]
 • நகரம்10.36 km2 (4.00 sq mi)
 • நாட்டுப்புறம்806.45 km2 (311.37 sq mi)
ஏற்றம்610 m (2,000 ft)
மக்கள்தொகை (2011)
 • நகரம்37,601
 • அடர்த்தி3,600/km2 (9,400/sq mi)
 • நாட்டுப்புறம்2,45,664
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாககன்னடம்
நேர வலயம்இ.சீ.நே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்571430
வாகனப் பதிவுKA-11
இணையதளம்www.malavallitown.mrc.gov.in

மலவள்ளி (Malavalli) என்பது இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின், மாண்டியா மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் மற்றும் ஒரு வட்டம் ஆகும். வரலாற்றில் மாலவல்லி நகரம் 27 மார்ச் 1799 - நான்காவது ஆங்கிலோ மைசூர் போரில் இடம்பெற்றுள்ளது. ஆர்தர் வெல்லஸ்லி தலைமையிலான பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்துக்கு எதிராக திப்பு சுல்தானின் மைசூர் படைகளுக்கு இடையே மலவள்ளி சமர் நடந்தது. ஊரைச் சேர்ந்த மனிதர்கள் கடுமையாகப் போராடி உயிரைக் கொடுத்தனர்.

இந்த நகரத்தை நாட யஜமானா குடும்பம் ஆண்டது. மலவள்ளியின் அஞ்சல் குறியீட்டு எண் 571430.[2]

சாரங்கபாணி கோவில்
பாட்டியம்மா கோவில்
புனித மதியா தேவாலயம்

நிலவியல்[தொகு]

மலவள்ளி நகரம் அமைந்துள்ளது. இந்த நகரம் கடல் மட்டத்தில் இருந்து சராசரியாக 610 மீட்டர் (2,000 அடி) உயரத்தில் உள்ளது.

ஈர்ப்புகள்[தொகு]

மலவள்ளி நகரம் மிகவும் துடிப்பான, சுறுசுறுப்பான கிராமப்புற சந்தையாகும். இது 4 கி.மீ நீளத்திற்கு நீண்டுள்ளது.

மாரேஹள்ளி இலட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலானது, மலவள்ளி நகரதில் இருந்து இரண்டு கி.மீ. தொலைவில் உள்ளது. அது மாண்டியா மாவட்டத்தில் உள்ள முக்கிய நரசிம்மசுவாமி கோயில்களில் ஸ்ரீ வைஷ்ணவ பாரம்பரியத்தைச் சேர்ந்தது. 10 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டு, முதலாம் இராஜ ராஜ சோழனால் புதுப்பிக்கப்பட்ட இக்கோயில் சுமார் 12 ஏக்கர் பரப்பளவில் அடர்ந்த பசுமையான பகுதிகளுக்கு மத்தியில் உள்ளது.

மலவள்ளியில் இருந்து 13 கி.மீ. தொலைவில் (பாரதிநகர் அருகே) உள்ள ஆத்மலிங்கேஸ்வர சேத்திரம் முக்கியத்துவம் வாய்ந்த தலமாகும்.

உலகப் புகழ் பெற்ற சோமநாதபுர போசளர் கோவில் மலவள்ளிக்கு தென்மேற்கே சுமார் 28 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

இப்பகுதியில் உள்ள மற்ற கோவில்கள்:

  • ஆஞ்சநேயர் (முத்ததிராய) கோயில், காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள முத்தாதியுல் உள்ளது .
  • ஹலகுரு நகருக்கு அருகில் உள்ள தாயி கபாலம்மா கோயில்,
  • சோட்டனஹள்ளி கிராமத்தில் உள்ள ஆதிநாடு சிக்கம்மா தாயி கோயில்,
  • மலை மகாதேசுவரன் கோவில் சன்னிபுரா (டிசி புரா) ஹாட்லி சதுக்கத்துக்கு அருகில்
  • பசவேவரர் கோயில் மற்றும் மானே மஞ்சம்மா தாயி கோயில் அகசனபுரம்
  • ஹலகுரு மலவல்லி பிரதான சாலையில் உள்ள நடுமார்கத பசவேஸ்வரர் கோவில்
  • ஹலகுரு நகருக்கு அருகில் உள்ள தரேகே தொட்டவரு மண்டேசுவாமி கோவில் மட்டத ஹொன்னா நாயக்கனஹள்ளி
  • கே.எம்.தொட்டி மற்றும் ஹலகுரு பிரதான சாலையில் உள்ள அந்தரஹள்ளி சித்தப்பாஜி கோவில்
  • மலவள்ளி நகருக்கு அருகில் (6. கி.மீ) அவ்வேரஹள்ளி சனீஸ்வரர் கோவில்
  • அருகில் உள்ள ஹலகுரு நகர ஹெப்பேடத பசவேஸ்வரர் கோயில்
  • பெலத்தூர் கிராமத்தில் உள்ள உத்பவ மூர்த்தி சென்ன சோமேஸ்வரர் கோவில், ஹலகுரு நகரத்திலிருந்து சுமார் 8 கி.மீ தொலைவில் உள்ளது
  • ஹாட்லி வட்டம் மலாவலி அருகே உள்ள துரகனுரு கிராமத்தில் உள்ள காமதேனு, பசவேஸ்வரா மற்றும் சனீஸ்வரர் கோவில்
  • ஹாட்லி வட்டத்திற்கு அருகில் உள்ள ஆலடஹள்ளி கிராமத்தில் உள்ள அபய ஆஞ்சநேயர் கோவில் மற்றும் காலபைரவேஸ்வரர் கோவில்
  • மத்திதலேஸ்வரர் கோவில், கல்லுவீரனஹள்ளி, மலவல்லி வட்டம் (ஊருக்கு வடக்கே 9 கிமீ)
  • காலேஷ்வரர் கோவில், யாத்தம்பாடி, மாளவல்லி வட்டம் (நகரின் வடகிழக்கில் 24 கிமீ)
  • மத்திதலேஸ்வரர் கோவில், கல்லுவேரனஹள்ளி

அருகில் சிவசமுத்திரம் அருவி, சிம்சா, காவேரி காட்டுயிர் புகலிடம், முத்தாத்தி காடு, ஹலகுரு அருகே பீமேஸ்வரி காவேரி மீன்பிடி முகாம்,[3] கலிபோர் மீன்பிடி முகாம் மற்றும் பல உள்ளன.[4]

மக்கள்தொகையியல்[தொகு]

2001 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி,[5] மலவள்ளியின் மக்கள் தொகை 35,800 ஆகும். மக்கள் தொகையில் ஆண்களின் விகிதம் 51% என்றும். பெண்களின் விகிதம் 49% என்றும் உள்ளது. மலவள்ளியின் சராசரி கல்வியறிவு விகிதம் 64% ஆகும், இது தேசிய சராசரியான 59.5% ஐ விட அதிகமாகும். இதில் ஆண்களின் கல்வியறிவு விகிதம் 69% என்றும், பெண்களின் கல்வியறிவு விகிதம் 58% என்றும் உள்ளது. மலவள்ளி மக்கள் தொகையில் 6 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் வகிதம் 13% ஆகும்.

மலவள்ளியில் உள்ள உயர்/தொழில்முறைக் கல்விப் பிரிவில், மைசூர் சாலையில் உள்ள வித்யா இன்ஸ்டிடியூட் ஆப் பாரா மெடிக்கல் சயின்சஸ் உள்ளது.

இது தவிர முன் பல்கலைக்கழக கல்லூரிகளில் சாந்தி கல்லூரி மற்றும் அரசு கல்லூரிகள் மலவள்ளியில் உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Census Data Handbook 2011" (PDF). பார்க்கப்பட்ட நாள் 3 August 2023.
  2. http://www.citypincode.in/KARNATAKA/MANDYA/MALAVALLI_PINCODE
  3. "Bheemeshwari". Karnataka.com. 20 July 2016.
  4. "Nature's beauty beckons them". 5 August 2005.
  5. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலவள்ளி&oldid=3865972" இலிருந்து மீள்விக்கப்பட்டது