மன்னார் நகரம் பிரதேச செயலாளர் பிரிவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மன்னார் நகரம் பிரதேசச் செயலாளர் பிரிவு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மன்னார் நகரம் பிரதேச செயலாளர் பிரிவு இலங்கையின் மன்னார் மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாக அலகாகும். மன்னார் மாவட்டம் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குத் தெற்கே வன்னியில் இலங்கைத் தீவின் மேற்குக் கரையோரம் அமைந்துள்ளது. மன்னார் நகரம் பிரதேச செயலாளர் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 48 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது.

ஆகிய ஊர்கள் இப் பிரதேச செயலாளர் பிரிவினுள் அடங்குகின்றன. இப்பிரிவின் பெரும்பகுதி தலைமன்னார்த்தீவு ஆகும். இதன் தலைநிலப்பகுதியின் வடக்கில் கடலும், மேற்கிலும், தெற்கிலும் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவும், கிழக்கில் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவும் எல்லைகளாக உள்ளன.

இப்பிரிவு 212 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது[1].

குறிப்புக்கள்[தொகு]

  1. புள்ளிவிபரத் தொகுப்பு 2007, தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களம், இலங்கை

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]