மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவு இலங்கையின் மன்னார் மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாக அலகாகும். மன்னார் மாவட்டம் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குத் தெற்கே வன்னியில் இலங்கைத் தீவின் மேற்குக் கரையோரம் அமைந்துள்ளது. மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 36 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது. தேவாம்பிட்டி, வெள்ளாங்குளம், பாலியாறு, அந்தோனியார்புரம், இலுப்பைக்கடவை, கள்ளியடி, ஆத்திமோட்டை, பெரியமடு, காயாநகர், பள்ளமடு, கோவில்குளம், விடலைத்தீவு, பாப்பாமோட்டை, பரப்புக்கடந்தான், கண்ணடி, மினுக்கன், மாளிகைத்திடல், வெட்டையார்முறிப்பு, அடம்பன், நெடுங்கண்டல், கருங்கண்டல், வண்ணாகுளம், ஆள்காட்டிவெளி, ஆண்டாகுளம், சோமபுரி, பளிக்குழி, காத்தான்குளம், வட்டக்கண்டல், பாளையடிப்புதுக்குளம், பழைப்பெருமாள்கட்டு ஆகிய ஊர்கள் இப் பிரதேச செயலாளர் பிரிவினுள் அடங்குகின்றன. இப்பிரிவின் வடக்கில் கிளிநொச்சி மாவட்டமும்; மேற்கில் இந்தியப் பெருங்கடல், மன்னார் நகரம் பிரதேச செயலாளர் பிரிவும்; தெற்கில் மடு பிரதேச செயலாளர் பிரிவும்; கிழக்கில் மடு பிரதேச செயலாளர் பிரிவும், முல்லைத்தீவு மாவட்டமும் எல்லைகளாக உள்ளன.

இப்பிரிவு 608 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது[1].

குறிப்புக்கள்[தொகு]

  1. புள்ளிவிபரத் தொகுப்பு 2007, தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களம், இலங்கை

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]