முசலி பிரதேச செயலாளர் பிரிவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முசலி பிரதேச செயலாளர் பிரிவு இலங்கையின் மன்னார் மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாக அலகாகும். மன்னார் மாவட்டம் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குத் தெற்கே வன்னியில் இலங்கைத் தீவின் மேற்குக் கரையோரம் அமைந்துள்ளது. முசலி பிரதேச செயலாளர் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 20 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது. அகக்கிமுறிப்பு, அரிப்பு, சிலாவத்துறை, கரடிக்குழி, கொக்குப்படையான், கொல்லன்குளம், கொண்டச்சி, மறிச்சுக்கட்டி, மருதமடு, மேதன்வெளி, முள்ளிக்குளம், பாலைக்குழி, பண்டாரவெளி, பெரியபுள்ளச்சி பொற்கேணி, பூநொச்சிக்குளம், புதுவெளி, செவரியார்புரம், சின்னப்புள்ளச்சி பொற்கேணி, வேப்பங்குளம் ஆகிய ஊர்கள் இப் பிரதேச செயலாளர் பிரிவினுள் அடங்குகின்றன. வடக்கில் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவும்; மேற்கில் மன்னார்க் குடாக்கடலும்; தெற்கில் புத்தளம், அநுராதபுரம் மாவட்டங்களும்; கிழக்கில் மடு பிரதேச செயலாளர் பிரிவும் எல்லைகளாக உள்ளன.

இப்பிரிவு 475 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது[1].

குறிப்புக்கள்[தொகு]

  1. புள்ளிவிபரத் தொகுப்பு 2007, தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களம், இலங்கை

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]