மனோதூர் தேவாச வல்சாமா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
 மனோதூர் தேவாச வல்சாமா (அக்டோபர் 21, 1960) இவர் ஒரு ஓய்வு பெற்ற இந்திய விளையாட்டு வீராங்கணை ஆவர். ஆசிய விளையாட்டில் தனிநபர் விளையாட்டில் தங்க பதக்கத்தை வென்ற இரண்டாவது இந்திய பெண்மணி ஆவர். இந்திய மண்ணில் பதக்கம் வென்ற முதல் பெண்மணி ஆவர்.
=ஆரம்ப வாழ்க்கை=
   வல்சாமா அக்டோபர் 21, 1960 அன்று கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள ஓட்டாதில் பிறந்தார். பள்ளி நாட்களில் தனது தடகள வாழ்க்கையைத் தொடங்கினார். மேரிசி காலேஜில், கல்லூரி படிப்பை தொடர பாலக்காடு சென்றார். 1979ல் புனேவில் உள்ள இண்டர் - யுனிவர்ஸிட்டி சாம்பியன் ஷிப்பில் 100 மீட்டர் தடை மற்றும் பெண்ட்த்லான் ஆகியவற்றில் கேரளாவின் சார்பில் பங்குபெற்று தன் முதல் பதக்கத்தை வென்றார். அவர் தெற்கு ரெயில்வேயில் சேர்ந்தார். பின் ஏ.கே. குட்டி என்பவரிடம் பயிற்சி பெற்றார். 1981ஆம் ஆண்டு பெங்களுரில் நடைபெற்ற மாநிலங்களுக்கு இடையிலான விளையாட்டப் போட்டியில் பங்கு பெற்று ஐந்து தங்க பதக்கங்களை வென்றார்.
   1. 400 மீட்டர் பிளாட்
   2. 400மீ மற்றும் 100மீ தொடர் ஓட்டம்
   3. 400மீ மற்றும் 100மீ தடை ஓட்டம் ஆகிய ஐந்து போட்டிகளில் இவர் காட்டிய செயல்திறன், அவரை இரயில்வே மற்றும் தேசிய அணிகளுக்குள் நுழைந்தது. 1982ஆம் ஆண்டில் 400மீட்டர் தடை ஒட்டத்தில் தேசிய சாம்பியன் ஆனார். இது ஒரு புதிய சாதனையுடன், ஆசிய சாதனையை விட சிறந்ததாக அமைந்தது.

தொழில்முறை தடகள வாழ்க்கை[தொகு]

  1982ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டி ஜவஹர்லால் நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்திய மண்ணில் இந்திய மற்றும் ஆசிய வரலாற்றில் முதன்முதலாக 400மீ தடை ஓட்டடத்தில் 58.47 வினாடிகளில் கடந்து தங்கம் வென்று சாதனை படைத்தார். கமல்ஜித் சிந்துவிற்கு (400மீ - 1974) பிறகு இந்தியாவிற்கு பதக்கங்களை வென்றார்.