மனதூர் தேவசியா வால்சம்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மனதூர் தேவசியா வால்சம்மா (பிறப்பு: அக்டோபர் 21, 1960) ஓய்வு பெற்ற இந்திய விளையாட்டு வீரர். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தனிநபர் தங்கப் பதக்கம் வென்ற இரண்டாவது இந்தியப் பெண்மணி மற்றும் இந்திய மண்ணில் அதை வென்ற முதல் பெண்மணி ஆவார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

வால்சம்மா அக்டோபர் 21, 1960 அன்று கேரளாவின் கண்ணூர் மாவட்டம் ஒட்டாயில் பிறந்தார். பள்ளி நாட்களில் தனது தடகள வாழ்க்கையைத் தொடங்கினார், அவர் மேல் படிப்பிற்காக பாலக்காட்டின் மெர்சி கல்லூரிக்குச் சென்றபோது மிகவும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டார். 1979 ஆம் ஆண்டில் புனேவில் நடந்த பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான 100 மீட்டர் தடை ஓட்டங்களிலும், பென்டத்லானிலும் கேரளாவுக்கு அவரது முதல் பதக்கம் கிடைத்தது.

இந்திய அரசு 1982 ஆம் ஆண்டில் அவருக்கு அர்ஜுனா விருதும், 1983ல் பத்மஸ்ரீ விருதும்  வழங்கியது. கேரள அரசு ஜி.வி.ராஜா ரொக்க விருதும் வழங்கி சிறப்பித்தது.

வரலாற்றில் முதல்முறையாக, இந்திய பெண்கள் அணி 1984 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் இறுதிப் போட்டியில் நுழைந்து ஏழாவது இடம் பெற்றனர். வால்சம்மா 100 மீ தடைகளில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கினார். 100 மீ தடைகளில் தங்கம் வென்ற அவர் 1985 ஆம் ஆண்டில் முதல் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தேசிய சாதனையை படைத்தார்.

குறிப்புகள்[தொகு]