மணிராம் பக்ரி
மணிராம் பக்ரி | |
---|---|
சட்டப் பேரவை உறுப்பினர் | |
தொகுதி | பத்தேகாபாத், அரியானா |
3வது மக்களவை உறுப்பினர் | |
தொகுதி | ஹிசார் மாவட்டம், அரியானா |
6வது மக்களவை நாடாளுமன்ற உறுப்பினர் | |
தொகுதி | மதுரா, உத்தரப் பிரதேசம் |
7வது நாடாளுமன்ற உறுப்பினர் | |
தொகுதி | ஹிசார் மாவட்டம், அரியானா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பான் மந்தோரி, ஹிசோரி, பஞ்சாப், பிரித்தானிய இந்தியா | 1 சனவரி 1920
இறப்பு | 31 சனவரி 2012 ஹிசார், அரியானா | (அகவை 92)
தேசியம் | இந்தியா 1947–2012 பிரித்தானிய இந்தியா 1920–1947 |
துணைவர் | தானி தேவி |
பிள்ளைகள் | 5 |
வாழிடம்(s) | பக்ரி சௌக், ஹிசார் |
தொழில் | அரசியல் ஆர்வலர், அரசியல்வாதி |
மணி ராம் பக்ரி (Mani Ram Bagri) (1 ஜனவரி 1920 - 31 ஜனவரி 2012) ஒரு இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் அரசியல் ஆர்வலரும் ஆவார். 1962 முதல் 1967 வரையிலும், பின்னர் மீண்டும் 1977 முதல் 1984 வரை என இவர் மூன்று முறை இந்திய நாடாளுமன்றத்தில் உறுப்பினராக பணியாற்றினார்.[1][2] டாக்டர் ராம் மனோகர் லோகியா மற்றும் ஜெயபிரகாஷ் நாராயண் போன்ற பாராளுமன்ற எதிர்க்கட்சி சோசலிசவாதிகளுடன் இவர் சேர்ந்து பணியாற்றினார்.[3]
மக்களவையில் "உண்மையான" எதிர்க்கட்சித் தலைவராக இருந்த காலத்தில் வட இந்தியா முழுவதும் பரவலாக அறியப்பட்ட பக்ரி, இவரது காலத்தின் மிகச் சிறந்த சோசலிச தலைவர்களில் ஒருவராக பரவலாகக் கருதப்பட்டார். 1960 களில் தாஷ்கண்ட் பிரகடனத்திற்கு வழிவகுத்த உச்சிமாநாடு மற்றும் வார்சா உடன்பாடு சோசலிச குடியரசுகள் உட்பட சோவியத் ஒன்றியத்திற்கான நாட்டின் சர்வதேச விஜயங்களில் இவர் பங்களிப்பாளராக இருந்தார். சர்வதேச நாடாளுமன்ற மாநாட்டில் தனது தாய்மொழியான இந்தியில் உரையாற்றிய முதல் பேச்சாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பணிகள்
[தொகு]மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்த பக்ரி, இந்திய சமூகத்தின் பின்தங்கிய பிரிவினருக்காக தனது வாழ்நாளின் பெரும்பகுதியை போராடினார். இவரது இந்த முறைகள் பொதுவாக காந்தியவாதி என்று விவரிக்கப்படுகின்றன. இளம் வயதிலேயே அரசியலில் இறங்கிய இவர், ஏழைகளின் உரிமைகளுக்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர். இவர் ஒரு சிக்கனமான வாழ்க்கை முறையை வாழ்ந்தற்காகப் புகழ் பெற்றவர். மேலும் தனது ஊதியத்தில் பெரும் தொகையை தில்லியின் ஹிஸ்ஸாரைச் சுற்றியுள்ள ஏழைகளுக்கு நன்கொடையாக அளித்து வந்தார்.[4] ஜவகர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி, மொரார்ஜி தேசாய் சரண் சிங், இந்திரா காந்தி, இராஜீவ் காந்தி, அடல் பிகாரி வாச்பாய் மற்றும் மன்மோகன் சிங் உட்பட இந்தியாவின் அடுத்தடுத்த பிரதமர்களால் பக்ரி மிகவும் மதிக்கப்பட்டார். காங்கிரசின் கொள்கைகளை அடிக்கடி எதிர்க்கும் சோசலிச சித்தாந்தத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய போதிலும்,[5] ஜவகர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி மற்றும் இந்திரா காந்தி ஆகியோருடன் பக்ரி ஆழ்ந்த தனிப்பட்ட பிணைப்பைப் பகிர்ந்து கொண்டார்.[6] இந்தியாவில் புதிய ஜனநாயகத்தை வடிவமைப்பதில் பக்ரி முக்கிய பங்கு வகித்தார், மேலும் மில்லியன் கணக்கான கிராமவாசிகள், ஏழைகள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்காக குரல் கொடுத்தார். வட இந்தியாவில் ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் காரணத்திற்காக பல இயக்கங்களை வழிநடத்தினார். மேலும், சமூகத்தின் இந்த பலவீனமான பிரிவினருக்கு சுய நம்பிக்கையை வழங்குவதில் ஒரு பெரிய சக்தியாக கருதப்படுகிறார்.
சான்றுகள்
[தொகு]- ↑ "Biographical Sketch Of Sixth Lok Sabha(State Wise)". Parliamentofindia.nic.in. Archived from the original on 7 February 2006. பார்க்கப்பட்ட நாள் 2012-02-09.
- ↑ "Biographical Sketch Of Third Lok Sabha(State Wise)". Parliamentofindia.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2012-02-09.
- ↑ "tribuneindia... Regional Vignettes". Tribuneindia.com. பார்க்கப்பட்ட நாள் 2012-02-09.
- ↑ "Haryana News Today". Haryana News Today. 2012-01-31. Archived from the original on 26 January 2013. பார்க்கப்பட்ட நாள் 2012-02-09.
- ↑ "News – Veteran Socialist leader and parliamentarian Mani Ram Bagri, passed away today". The Radical Humanist. Archived from the original on 12 செப்டெம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 9 பெப்பிரவரி 2012.
- ↑ From Jawaharlal Nehru to Mani Ram Bagri, India has never lacked for great communicators in its politics. http://www.dailypioneer.com/columnists/edit/one-nation-under-the-same-satellite-feed.html
- https://archive.today/20120912153648/http://www.theradicalhumanist.com/index.php?option=com_radical&controller=news&Itemid=54&cid=478&task=single
- https://archive.today/20130126061922/http://www.haryananewstoday.com/managenewssingle.aspx?id=271
- http://www.tribuneindia.com/2012/20120201/haryana.htm#3
- http://dainiktribuneonline.com/2012/02/%E0%A4%86%E0%A4%AE-%E0%A4%86%E0%A4%A6%E0%A4%AE%E0%A5%80-%E0%A4%95%E0%A5%80-%E0%A4%86%E0%A4%B5%E0%A4%BE%E0%A4%9C-%E0%A4%89%E0%A4%A0%E0%A4%BE%E0%A4%A4%E0%A5%87-%E0%A4%A5%E0%A5%87-%E0%A4%AC%E0%A4%BE/
- http://www.lohiavani.com/GalleryPhoto.aspx
- https://web.archive.org/web/20140202114614/http://164.100.47.132/LssNew/biodata_1_12/1428.htm