மங்களூர் கோழிச் சுக்கா
Appearance
மாற்றுப் பெயர்கள் | துளு: கோரி சுக்கா, கோரி அசாதின, ஆங்கிலம்: (சிக்கன் சுக்கா) Chicken Sukka |
---|---|
வகை | கறி |
பரிமாறப்படும் வெப்பநிலை | முதன்மை உணவு |
தொடங்கிய இடம் | இந்தியா |
பகுதி | துளு நாடு |
முக்கிய சேர்பொருட்கள் | கோழிக்கறி, துருவிய தேங்காய், காய்ந்த மிளகாய் |
வேறுபாடுகள் | உலர்ந்த, பகுதி கிரேவி |
மங்களூர் கோழிச் சுக்கா அல்லது 'கோரி சுக்கா/ கோரி அசாதினா (துளு) என்பது இந்திய உணவு வகையாகும். இந்த கோழி சுக்கா மங்களூர் மற்றும் உடுப்பி பகுதியில் தோன்றியதாகும். சுக்கா என்பது "சுக்கா" வார்த்தையாகும். இந்தியில் "சுகா" என்றால் "உலர்ந்த" என்று பொருள்படும். சில நேரங்களில் "கோரி அஜடினா " என்றும் அழைக்கப்படுகிறது. இருப்பினும் இது உலர் மற்றும் பகுதி கிரேவி என இரண்டு மாறுபாடுகளில் தயாரிக்கப்படலாம்.[1]
தேவையான பொருட்கள்
[தொகு]கோழிச் சுக்கா தயாரிக்கத் தேவையான பொருட்கள்.[2]
- 1 1/2 கிலோ கோழிக்கறி
- 10 காய்ந்த சிவப்பு மிளகாய் (உலர் கெய்ன் மிளகு அல்லது சொர்க்க மிளகு)
- 1 கோப்பை அரைத்த தேங்காய்
- 2 தேக்கரண்டி கொத்தமல்லி தூள்
- 10-12 கருப்பு மிளகு
- 1/2 தேக்கரண்டி சீரகம்
- 1/2 தேக்கரண்டி வெந்தயம்
- 2 இலவங்கப்பட்டை
- 6 கிராம்பு
- 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
- பூண்டு 5-6 பல்
- 2 வெங்காயம்
- 2-3 தக்காளி
- 5-6 கறிவேப்பிலை
- 1 எலுமிச்சை (சிறியது)
- சுவைக்க உப்பு
- 1 தேக்கரண்டி நெய் + 1 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய்
தயாரிப்பு
[தொகு]மங்களூர் கோழிச் சுக்காவினை பின்வரும் முறையில் தயாரிக்கலாம்.[2]
- கோழிக்கறியினை சிறிய துண்டுகளாக வெட்டி நன்றாகக் கழுவி, மஞ்சள், உப்பு, எலுமிச்சம் சாறு சேர்த்து ஊறவைக்கவேண்டும்.
- மசாலா தூள் : உலர்ந்த வறுத்த சிவப்பு மிளகாய், கொத்தமல்லி, வெந்தயம், சீரகம், இலவங்கப்பட்டை மற்றும் கிராம்பு முதலியவற்றை மிக்சியில் இட்டு தூளாகப் பொடி செய்யவேண்டும்.
- மசாலா பசை: 1 வெங்காயம், பூண்டு ஆகியவற்றை பசையாக அரைத்து, துருவிய தேங்காய் துளைச் சேர்த்து சிறிது நேரம் அரைக்கவும்.
- ஒரு கடாயில் நெய் மற்றும் எண்ணெய்யை இட்டு சூடாக்கவேண்டும். எண்ணெய் சூடான பின்னர், நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும். பின்னர் நறுக்கிய தக்காளியைச் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
- கறிவேப்பிலை சேர்த்து சிறிது நேரம் வறுக்கவும்.
- இப்போது ஊறவைத்த கோழிக்கறியினைச் சேர்க்கவும். மசலாவினை கோழிக்கறியில் நன்றாக சேறுமாறு கிளறிவிட்டு சிறிது நேரம் சமைக்கவும்.
- இப்போது அரைத்த மசாலா மற்றும் மசாலாத்தூள் சேர்த்து, நன்கு நீர் வற்றும் வரை சமைக்கவும்.
- கோழிக்கறி நன்கு வெந்தவுடன் கொத்தமல்லி இலைகளைத் தூவி சூடாகப் பரிமாறவும்.
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Charishma (2011-06-20). "Cherie's Stolen Recipes: kori aajadina/ chicken sukka". Cherie's Stolen Recipes. பார்க்கப்பட்ட நாள் 2016-10-06.
- ↑ 2.0 2.1 "Udupi Today: Sunday Special Recipe # 5: Kori Sukka (Dry Chicken With Coconut)". www.udupitoday.com. Archived from the original on 2018-06-22. பார்க்கப்பட்ட நாள் 2016-10-08.