உள்ளடக்கத்துக்குச் செல்

போர்னிய குள்ள மூஞ்சூறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
போர்னிய குள்ள மூஞ்சூறு
Bornean pygmy shrew[1]
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
இயுலிபோடைப்ளா
குடும்பம்:
சோரிசிடே
பேரினம்:
சன்கசு
இனம்:
ச. ஹோசி
இருசொற் பெயரீடு
சன்கசு ஹோசி
(தாமசு, 1893)
போர்னிய குள்ள மூஞ்சூறு பரம்பல்

போர்னிய குள்ள மூஞ்சூறு (Bornean pygmy shrew)(சன்கசு ஹோசி) என்பது சோரிசிடே குடும்பத்தில் உள்ள ஒரு மூஞ்சூறு சிற்றினம் ஆகும். விலங்கியல் வல்லுநரான சார்லசு ஹோஸின் பெயரால் இது அழைக்கப்படுகிறது.

பரவல்[தொகு]

போரினிய குள்ள மூஞ்சூறு பன்னாட்டுத் தீவான போர்னியோவில், குறிப்பாக வடக்கு சரவாக் மற்றும் மலேசியாவின் வடகிழக்கு சபா மாநிலங்களில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி ஆகும். இது பரவலாக புரூணையிலும், இந்தோனேசியாவின் வடக்கு கலிமந்தன் மாகாணத்திலும் காணப்படலாம்.

போரினிய குள்ள மூஞ்சூறுவின் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல மற்றும் வெப்பமண்டல வறண்ட காடுகள் ஆகும். இது பெரும்பாலும் எட்ருசுகன் மூஞ்சூறு (சன்கசு எட்ரசுகசு) எனப் பட்டியலிடப்படுகிறது. இது ஐரோப்பா மற்றும் வட ஆப்பிரிக்காவிலிருந்து தென்கிழக்கு ஆசியா வரை பரவியுள்ளது. இவை வேறுபட்ட இனங்களாக அறியப்படுகின்றன.

பாதுகாப்பு[தொகு]

போரினிய குள்ள மூஞ்சூறு 1996 முதல் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியலில் அழிவாய்ப்பு இனமாகப் பட்டியலிடப்பட்டது. 2008-ல் தரவுகள் போதாது இனமாக மாற்றப்பட்டது.

இதனுடைய சரியான அச்சுறுத்தல்கள் தெரியவில்லை. இது காடு சார்ந்ததாக இருந்தால், வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது. வாழ்விடத்தைக் குறிப்பாக செம்பனை எண்ணெய்க்காக விவசாய தோட்டங்களாக மாற்றுவது, மரம் வெட்டுதல், மற்றும் தீ வைத்தல் காரணமாக வாழிட அழிவு நடைபெறுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. அட்டெரெர்(Hutterer, Rainer) (நவம்பர் 16, 2005). Don E. Wilson and DeeAnn M. Reeder (ed.). Mammal Species of the World (3 ed.). Johns Hopkins பல்கலைக் கழகப் பதிப்பகம். p. 258. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8018-8221-0.
  2. Lunde, D.; Ruedas, L. (2008). "Suncus hosei". IUCN Red List of Threatened Species 2008. https://www.iucnredlist.org/details/21144/0/0. பார்த்த நாள்: 6 July 2010.  Database entry includes a brief justification of why this species is of data deficient.
"https://ta.wikipedia.org/w/index.php?title=போர்னிய_குள்ள_மூஞ்சூறு&oldid=3750174" இலிருந்து மீள்விக்கப்பட்டது