உள்ளடக்கத்துக்குச் செல்

பொருத்தத் தோற்றமுரண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பொருத்தத் தோற்றமுரண் (Relevance paradox) என்பது முடிவு எடுத்தல் முறைமையில் ஏற்படும் ஒரு தோற்றமுரண். ஒரு விசயத்தில் மிகச்சிறந்த முடிவு எடுக்கத் தேவையான பல வகைப்பட்ட தகவல்கள் திரட்டப்படுகின்றன. ஆனால் அவற்றின் அளவு அதிகமாகும் போது அல்லது அவை பிற துறை சார்ந்திருக்கும் போது, அவற்றுள் பல தேவையற்றவை அல்லது பொருந்தாதவை என ஒதுக்கப்படுகின்றன. சிறந்த முடிவினை எடுக்க இன்றியமையாத தகவல்களும் இப்படி ஒதுக்கப்பட்டு அதனால் எடுக்கப்படும் முடிவு சரியாக அமையாது போனால் அந்நிலை பொருத்தத் தோற்றமுரண் எனப்படும். இக்கோட்பாடு கணிதவியலாளர் மோஜென்ஸ் நிஸ் (Mogens Niss) என்பவரால் உருவாக்கப்பட்டது. ஒரு பெரும் முடிவு எடுக்க வேண்டிய சூழ்நிலையில், அந்நிலையில் இருப்பவர் தேவையான தகவல்களையும் தரவுகளையும் திரட்டுவார். அவ்வாறு திரட்டப்படுபவையின் அளவு அதிகமாகும் போதோ அல்லது தொடர்பில்லாதது போலத் தோன்றும் பிற இடங்களிலும் துறைகளிலும் கிடைக்கும் போதோ அவை புறந்தள்ளப்படலாம். முடிவெடுக்க ஆய்வு செய்யப்பட்டாலும் அந்த ஆய்வினால் பலனின்றி இன்றியமையாத தகவல் முடிவு எடுப்பவரைச் சென்றடைவதில்லை. இதன் மூலம் முடிவு சரியாக அமையாது போகின்றது.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Gail E. FitzSimons (31 July 2002). What Counts as Mathematics?: Technologies of Power in Adult and Vocational Education. Springer. pp. 25–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4020-0669-2.
  2. "NCTM Research Catalyst Conference" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2014-05-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொருத்தத்_தோற்றமுரண்&oldid=3565619" இலிருந்து மீள்விக்கப்பட்டது