இடர் ஈடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இடர் ஈடு (Risk compensation) என்பது இடரை எதிர் நோக்கும் மக்களின் நடத்தையில் ஏற்படும் மாற்றங்களை விளக்க முற்படும் ஒரு கோட்பாடு. மக்கள் தாங்கள் ஈடுபடும் செயல்களில் அல்லது இருக்கும் சூழலில் எவ்வளவு இடர் நேரலாம் என்று கணிப்பர். இடர் மிகுதியாக உள்ளது என்று தோன்றினால் அதிக கவனத்துடன் செயல்படுவர். இடர் குறைவாக உள்ளது என உணர்ந்தாலோ அல்லது பாதுகாப்பாக இருப்பதாக உணர்ந்தாலோ கவனக்குறைவுடன் செயல்படுவர். இத்தகைய நடத்தை மாற்றத்தால் பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் முறைமைகளின் தாக்கம் குறைகின்றது. சாலைப் பாதுகாப்பு ஆய்வுகளில், பாதுகாப்பு விதிமுறைகள் ஏன் எதிர்பார்த்த அளவு தாக்கத்தை அளிப்பதில்லை என்ற கேள்விக்கு விடையளிக்க இந்தக் கோட்பாடு உருவாக்கப்பட்டது.[1]

எடுத்துக்காட்டாக வாகன ஓட்டிகள் இருக்கைப் பட்டை அணிந்திருக்கும் போது ஆபத்து நிறைந்த முறைகளிலும் வேகமாகவும் (இருக்கைப் பட்டை அணியாத ஓட்டிகளை விட) தங்கள் ஊர்திகளை ஓட்டுகின்றனர்.[2] தலைக்கவசம் அணிந்த மிதிவண்டி ஓட்டிகள் தலைக்கவசம் அணியாத ஓட்டிகளைக் காட்டிலும் அதிக அளவில் சாலை விதிகளை மீறுகின்றன.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Vrolix (2006). Behavioural Adaptation, Risk Compensation, Risk Homeostasis and Moral Hazard in Traffic Safety. https://doclib.uhasselt.be/dspace/bitstream/1942/4002/1/behavioraladaptation.pdf. பார்த்த நாள்: 2014-05-31. 
  2. Janssen, W. (1994). "Seat belt wearing and driving behaviour: An instrumented-vehicle study Apr; Vol 26(2)". Accident Analysis and Prevention. pp. 249–2.
  3. Lardelli-Claret, P; De Dios Luna-Del-Castillo, J; Jiménez-Moleón, JJ; García-Martín, M; Bueno-Cavanillas, A; Gálvez-Vargas, R (2003). "Risk compensation theory and voluntary helmet use by cyclists in Spain". Injury Prevention 9 (2): 128–32. doi:10.1136/ip.9.2.128. பப்மெட்:12810738. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இடர்_ஈடு&oldid=3233502" இலிருந்து மீள்விக்கப்பட்டது