இருக்கைப் பட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இருக்கை பட்டையும் வார்ப்பூட்டும்.

பாதுகாப்புப் பட்டை எனப்படும் இருக்கைப் பட்டை (seat belt) வாகனங்களில் பயன்படுத்தப்படும் ஒரு பாதுகாப்பு சாதனமாகும். இயக்கத்திற்கு எதிராக ஒரு வாகனத்தில் பயணிப்பவர் தீங்கு ஏற்படும் அசைவிலிருந்து பாதுகாக்கும் வகையில் இது பயன்படுத்தப்படுகிறது. போக்குவரத்தினால் ஏற்படும் மோதலின் போது மரணம் அல்லது தீவிரமான காயம் ஏற்படாமல் காக்கும் சாதனம் இது.

வரலாறு[தொகு]

இருக்கைப் பட்டை 19ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் ஆங்கிலேயப் பொறியாளர் ஜார்ஜ் கேலியினால் கண்டுபிடிக்கப்பட்டது.[1] ஆனாலும் நியூயார்க்கை சேர்ந்த எட்வர்ட் ஜே கலக்ஹார்ன்க்கு, இது சம்பந்தமாக முதல் காப்புரிமை (ஒரு பாதுகாப்பு பட்டை பிப்ரவரி 10, 1885 அன்று அமெரிக்க காப்புரிமை 312,085) வழங்கப்பட்டது.[2]

இருக்கை பட்டை குறியீடு

1903 இல், பிரெஞ்சு கண்டுபிடிப்பாளர் கஸ்டவ்-டிசையர் லேவியு (Gustave-Désiré Leveau) ஒரு சிறப்பு வகை இருக்கைப் பட்டையை கண்டுபிடித்தார்.[3]

1911 ஆம் ஆண்டில், பெஞ்சமின் பௌளிஸ் குதிரைப்படை சேணம் போன்ற அமைப்பை ரைட் சகோதரர்களின் 1906ல் உருவான சிக்னல் கார்ப்ஸ் 1 என்ற வானூர்தியில் அமைத்தார். அவர் அதை அவர் வானூர்தியின் புறப்பாடு மற்றும் தரையிறங்கல் நேரங்களின் போது பயன்படுத்த வேண்டுமேன்றும் மேலும் அவரது இருக்கை அவரை உறுதியாக கட்டப்படிருக்கும் காரணத்தினால் விமானி சிறப்பாக தனது விமானத்தை கட்டுப்படுத்த முடியும் என பயன்படுத்தினார்.

உலகின் இருக்கை பட்டை பயன்பாடு பற்றிய முதல் சட்டம் ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில், 1970ல் இயற்றப்பட்டது. இது ஓட்டுனர் மற்றும் முன் இருக்கை பயணிகள் இருக்கை பட்டை கட்டாயம் அணிந்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியது.[4]

இருக்கைப் பட்டைகளின் வகைகள்[தொகு]

3 புள்ளி இருக்கை பட்டை
 • 2 புள்ளிகள்
  • லேப் (Lap)
  • சஷ் (Sash)
 • 3 புள்ளிகள்
  • இருக்கையில் பட்டை
 • 4- 5- 6- புள்ளிகள்
 • எழு புள்ளிகள்

பயன்கள்[தொகு]

இருக்கை பட்டை மற்றும் காற்று பையினால் காப்பற்றப்பட்ட உயிர்கள்
 • பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இருக்கைப் பட்டை அணிவது விபத்தின் போது பயணி வாகனத்திலிருந்து வேறியேறி விழுவதைத்தடுக்கிறது.
 • விபத்தின் போது ஏற்படும் தாக்கத்தின் நேரத்தினை நீட்டிக்க உதவுகிறது.
 • மூளை மற்றும் முதுகுத் தண்டை பாதுகாக்கிறது

இந்தியாவில் இதற்கான சட்டங்கள்[தொகு]

இந்தியாவில் மோட்டார் வாகனச் சட்டத்தின் 138வது பிரிவின் படி இருக்கை பட்டை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.[5][6] மோட்டார் வாகனச் சட்ட திருத்த வரைவில், வாகனத்தில் இருக்கைப் பட்டை அல்லது தலைக்கவசம் அணியாமல் சென்றாலோ, சிவப்பு நிற சிக்னலை மதிக்காமல் சென்றாலோ ரூ.500 அபராதமாக விதிக்கப்படும் என நிறைவேற்றப்பட்டுள்ளது.[7]

இந்திய நகரங்களில் இருக்கைப் பட்டை அணியாமல் சென்றவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள்:[8]

வருடம் பதிவு செய்யப்பட்ட வழக்குகள்
2008 78
2009 1680
2010 1143
2011 129

விழிப்புணர்வு[தொகு]

அமெரிக்காவில் ஜார்ஜியா மாநிலத்தில் Click It or Ticket - Georgia[9] என்ற திட்டம் மூலம் இருக்கைப் பட்டை அணிவதன் முக்கியத்துவத்தை முன்னிறுத்தி பல பிரச்சாரங்கள் நடக்கின்றன. தமிழ்நாட்டில் மேடை நாடகங்கள் மூலம் இருக்கை பட்டை அணிவதனை வலியுறுத்த தமிழக காவல்துறை முடிவு செய்துள்ளது.[10].


மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இருக்கைப்_பட்டை&oldid=3354378" இலிருந்து மீள்விக்கப்பட்டது