உள்ளடக்கத்துக்குச் செல்

ஜார்ஜ் கேலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சர் ஜார்ஜ் கேலி
Sir George Cayley
ஜார்ஜ் கேலி
பிறப்பு(1773-12-27)27 திசம்பர் 1773
ஸ்கார்பரோ, இங்கிலாந்து
இறப்பு15 திசம்பர் 1857(1857-12-15) (அகவை 83)
பிராம்ப்டன், இங்கிலாந்து
தேசியம்ஆங்கிலேயர்
அறியப்படுவதுமுதலாவது வெற்றிகரமான மனித மிதவை விமானத்தை வடிவமைத்தவர்.

சர் ஜார்ஜ் கேலி (Sir George Cayley, திசம்பர் 27, 1773 - திசம்பர் 15, 1857) என்பவர் ஆங்கிலப் பொறியாளரும், வானூர்தியியலின் வரலாற்றில் மிக முக்கியமான நபரும் ஆவார். பலரது கூற்றுப்படி, இவரே முதன்முதல் பறத்தல் தொடர்பான கருத்தாக்கங்களில் நிபுணத்துவம் பெற்ற அறிவியலாளர். மேலும், இவரே முதன்முதலில் பறத்தலுக்கான அடிப்படைத் தத்தவங்களையும் பறத்தலில் உருவாகும் விசைகளையும் ஆராய்ந்தவர்.[1][2][3] 1799-இல் நிலை-இறக்கை பொருத்தப்பட்ட வானூர்தி வடிவமைப்பை செய்தார்; அது, ஏற்றம், உந்துகை, மற்றும் கட்டுப்பாடு ஆகியவற்றுக்கென தனித்தனி அமைப்புகளைக் கொண்டிருந்தது.[4][5] இவர் வானூர்திப் பொறியியலில் மிகப்பெரும் நிபுணராவார், இவர் காற்றியக்கவியலின் தந்தை என அழைக்கப்படுகிறார். இவரே மனிதரை ஏற்றிச் செல்லக்கூடிய மிதவை வானூர்தியை வெற்றிகரமாக செயல்படவைத்தவர். ஒரு பறக்கும் வாகனத்தின் மீது செயல்படும் விசைகளான ஏற்றம், இழுவை, உந்துவிசை, மற்றும் எடை ஆகியவற்றைக் கண்டுணர்ந்தவராவார்.

குறிப்புதவிகள்

[தொகு]
  1. "Sir George Cayley". Flyingmachines.org. Retrieved 26 July 2009.
  2. "The Pioneers: Aviation and Airmodelling". Archived from the original on 2019-02-08. Retrieved 26 சூலை 2009.
  3. "U.S Centennial of Flight Commission – Sir George Cayley". Archived from the original on 2008-09-20. Retrieved 10 செப்டம்பர் 2008. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "Aviation History". Retrieved 26 சூலை 2009.
  5. "Sir George Cayley (British Inventor and Scientist)". பிரித்தானிக்கா. Retrieved 26 சூலை 2009.

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜார்ஜ்_கேலி&oldid=3930415" இலிருந்து மீள்விக்கப்பட்டது