தற்பிழையாகும் வருவதுரைத்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தற்பிழையாகும் வருவதுரைத்தல் (Self-defeating prophecy) என்பது தான் கணிப்பதை நடக்கவிடாமல் தானே தடுக்கும்.[1]

ஏதாவதொன்றைக்குறித்து பின்வருமாறு கணிப்பு ஒன்று கூறப்படுகிறது - ”எதிர்காலத்தில் இது நடக்கும்”. இந்தக்கணிப்பைக் கேட்பவருக்கு அதனைப்பொய்யாக்கும் ஆர்வம் எழலாம் அல்லது கணித்தவாறு நடந்தால் பெரும் பாதிப்புக்குள்ளாகலாம். அதனால் அதனைப் பொய்யாக்க அவர் முனைந்து முயற்சியில் வெற்றி பெறலாம். எனவே சொல்லப்பட்ட கணிப்பு தன்னைத்தானே பொய்யாக்கிவிட்டது என்று கொள்ளலாம். இத்தகைய கணிப்பிற்கு சில எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு:

  • வருடம் 2000 சிக்கல் – 2000ம் ஆண்டு தரவுத்தள வடிவமைப்பு வழுவால் கணினி செயலாக்கங்களில் சிக்கல் எழும் என்று பரவலாகக் கணிக்கப்பட்டது. எனவே பாதிக்கப்படவிருந்த நிறுவனங்கள் விரைந்து செயல்பட்டு அந்த வழுவை சரி செய்து பாதிப்பைத் தவிர்த்துவிட்டனர்.

மேற்கோள்கள்[தொகு]