ஸ்ட்ரெய்சண்ட் விளைவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்ட்ரெய்சண்ட் விளைவுக்கு அப்பெயர் வரக்காரணமான ஒளிப்படம்

ஒரு தகவலை மறைக்க அல்லது தணிக்கை செய்ய மேற்கொள்ளப்படும் முயற்சி அத்தகவலை மேன்மேலும் பரப்பும் எனில் அது ஸ்ட்ரெய்சண்ட் விளைவு (Streisand effect) எனப்படுகிறது. பொதுவாக இத்தகைய எதிர்பாராத விளைவு இணையத்தின் மூலம் நிகழ்கிறது.

அமெரிக்கத் திரைப்பட நடிகை பார்பரா ஸ்ட்ரெய்சண்டின் வாழ்வில் நடைபெற்ற ஒரு நிகழ்வே இப்பெயர் ஏற்படக் காரணமானது. ஸ்ட்ரெய்சண்டிற்கு அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம், மேலேபு நகரில் ஒரு கடற்கரையோர வீடு இருந்தது. 2003 ஆம் ஆண்டு அவ்வீட்டின் ஒளிப்படங்கள் இணையத்தில் வெளியாகின. அவற்றை நீக்க ஸ்ட்ரெய்சண்ட சட்ட வழியில் முயன்றார். ஆனால் எதிர்பாராத விதமாக அவரது முயற்சியே அவ்வீட்டின் ஒளிப்படத்தைப் பலரும் பார்க்கும்படி செய்துவிட்டது. அப்படம் மேலும் பல இணையத்தளங்களில் வெளியானது.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Canton, David (November 5, 2005). "Today's Business Law: Attempt to suppress can backfire". London Free Press. Archived from the original on பிப்ரவரி 17, 2006. https://web.archive.org/web/20060217032922/http://lfpress.ca/cgi-bin/publish.cgi?p=111404&x=articles&s=shopping. பார்த்த நாள்: July 21, 2007. 
  2. Mugrabi, Sunshine (January 22, 2007). "YouTube—Censored? Offending Paula Abdul clips are abruptly taken down". Red Herring. பிப்ரவரி 18, 2007 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. July 21, 2007 அன்று பார்க்கப்பட்டது.