உள்ளடக்கத்துக்குச் செல்

பைத்தனோய்டே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பைத்தனோய்டே
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்
  • பைத்தானிடே
  • லோக்சோசீமிடே
  • ஜீனோபெல்டிடே

பைத்தானாய்டே பாம்புகள் என்றும் அழைக்கப்படும் பைத்தோனாய்டே (Pythonoidea), பாம்புகளின் பெருங் குடும்பமாகும். இதில் மலைப்பாம்புகள் (குடும்பம் பைத்தோனிடே) மற்றும் பிற நெருங்கிய தொடர்புடைய மலைப்பாம்பு போன்ற பாம்புகள் உள்ளன (ஆனால் போயாசு அல்ல, இவை பூய்டியா எனப்படும் தனி பெருங்குடும்பத்தில் உள்ளன). 2022ஆம் ஆண்டு நிலவரப்படி, பைத்தனோய்டியாவில் 39 சிற்றினங்கள் உள்ளன, இதில் பைதான் என்ற பெயரிடப்பட்ட பேரினம் மற்றும் 10 பிற வகை மலைப்பாம்புகள் (ஆன்டரேசியா, அபோடோரா, ஆசுபிடைட்சு, போத்ரோச்சிலசு, லியோபிதான், லியாசிசு, மலாயோபித்தோன் , சிம்யோபிலியாப், மற்றும் மொரேலியா குடும்பம்) உள்ளன. இத்துடன் அதிகம் அறியப்படாத இரண்டு குடும்பங்களாக, லோக்சோசெமிடே (ஒரு சிற்றினம், மெக்சிகன் புதை மலைப்பாம்பு, லோக்சோசெமசு பேரினத்தில் உள்ளது) மற்றும் ஜெனோபெல்டிடே ( ஜெனோபெல்டிசு பேரினத்தில் இரண்டு வகையான சூரிய ஒளி பாம்புகள்).[1]

மலைப்பாம்புகள், போவாசு மற்றும் பிற கெனோபிடியன் பாம்புகளின் வகைப்பாட்டியல் நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இறுதியில் ஒரு குறிப்பிட்ட உட்கோட்டினை ஒரு குறிப்பிட்ட லின்னேயன் தரநிலைக்கு (ஒரு பெருங்குடும்பம், குடும்பம் அல்லது துணைக் குடும்பம் போன்றவை) ஒதுக்குவது என்பது தன்னிச்சையானது. 62 [CI: 46-78] மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பொதுவான மூதாதையரைக் கடைசியாகப் பகிர்ந்து கொண்ட இந்த 43 சிற்றினங்களுக்கிடையில் ஒப்பீட்டளவில் நெருக்கமான பரிணாம உறவை பைத்தோனிடே வலியுறுத்துகிறது (பைத்தோனாய்டுகளுக்கும் யூரோபெல்டாய்டுகளுக்கும் இடையிலான மிகச் சமீபத்திய பொதுவான மூதாதையர் ~73 [CI:59-87] மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தன).[2]

மேற்கோள்கள்

[தொகு]
விலங்கியல்

தொடரின் ஒரு பகுதி


விலங்கியலின் கிளைகள்

மானிடவியல் ·
தேனீயியல் · எட்டுக்காலியியல்
கணுக்காலியியல் · நீர்ப்பாலூட்டியியல்
சிப்பியோட்டியல் · பூச்சியியல்
நடத்தையியல் · ஒண்டுப்புழுவியல்
ஊர்வனவியல் · மீனியல்
நத்தையினவியல் · பாலூட்டியியல்
எறும்பியல் · உருளைப்புழுவியல்
விலங்கு நரம்பு&நடத்தையியல் · பறவையியல்
தொல்விலங்கியல் · மிதவையுயிரியல்}
முதனியியல்

குறிப்பிடத்தக்க விலங்கியலாளர்

ஜார்ஜஸ் கவியர் · சார்லசு டார்வின்
வில்லியம் கிர்பி · கரோலசு லின்னேயசு
கான்ட்ராட் லாரென்சு · தாமசு சே
ஆல்ஃப்ர்ட் ரஸல் வல்லேஸ் · மேலும்...

வரலாறு

டார்வினுக்கு முன்
டார்வினுக்குப் பின்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பைத்தனோய்டே&oldid=3840525" இலிருந்து மீள்விக்கப்பட்டது