சைரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பேரரசர் சைரசு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பேரரசர் சைரசு
பாரசீக அரசர், அன்சானின் அரசர், மெடியாவின் அரசர், பபிலோனின் அரசர், சுமேரியாவினதும் அக்காடியாவினதும் அரசர், உலகின் நான்கு மூலைகளினதும் அரசர்[1]
Olympic Park Cyrus.jpg
ஆட்சி கிமு 559 - கிமு 530 (30 ஆண்டுகள்)
முடிசூட்டு விழா அன்சான், பாரசீகம்
முன்னிருந்தவர் கம்பிசசு I
பின்வந்தவர் கம்பிசசு II
வாரிசு(கள்) கம்பிசசு II
சிமேர்டிசு
ஆர்ட்டிசுட்டன்
அட்டோசா
பெயர் தெரியாதவர்
மரபு ஆக்கிமெனிட்
தந்தை கம்பிசசு I
தாய் மெடியாவின் மண்டானே அல்லது ஆர்கோசுத்தே
அடக்கம் பசர்கார்டே
சமயம் சோரோவாசுட்டிரியனியம்[2]

பேரரசர் சைரசு (Old Persian: 𐎤𐎢𐎽𐎢𐏁[3], IPA[kʰuːrʰuʃ], Kūruš[4], Persian: کوروش بزرگ, Kūrošé Bozorg) (கிமு 600 அல்லது 576 – டிசம்பர்[5][6] கிமு 530) முதலாவது சோரோவாசிட்டிரிய பாரசீகப் பேரரசர் ஆவார். ஆக்கிமெனிட் வம்சத்தின் கீழ் பாரசீகப் பேரரசை நிறுவியவரும் இவரே. உலக அளவிலான இப்பேரரசு உலக வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். இவர் பாரசீகத்தின் இரண்டாவது சைரசு, மூத்த சைரசு போன்ற பெயர்களினாலும் அறியப்படுகின்றார்.

இவரது காலத்திலேயே இப் பேரரசு பண்டைய அண்மைக் கிழக்குப் பகுதிகளில் இருந்த நாகரிகமடைந்த நாடுகள் எல்லாவற்றையும் உள்ளடக்கி விரிவடைந்தது. பின்னர் இது தென்மேற்கு ஆசியாவின் பெரும்பகுதி; நடு ஆசியாவின் பெரும்பகுதி; மேற்கே எகிப்து, எல்லெசுப்பொண்ட் ஆகியவற்றிலிருந்து கிழக்கே சிந்து நதி வரையும் உள்ள பகுதிகளையும் கைப்பற்றி அக்காலம் வரை அறியப்பட்டவற்றிலும் மிகவும் பெரிதான பேரரசாக விளங்கியது.

சைரசின் ஆட்சி 29 தொடக்கம் 30 ஆண்டுகள் வரை நீடித்தது. முதலில் சைரசு, மெடியப் பேரரசு, லிடியப் பேரரசு, புது பபிலோனியப் பேரரசு ஆகியவற்றை வரிசையாகக் கைப்பற்றியதன் மூலம் தனது பேரரசை நிறுவினார். பபிலோனியாவைக் கைப்பற்றுவதற்கு முன்னர் அல்லது பின்னர் நடு ஆசியாவுக்குப் படை நடத்திச் சென்று அப் பகுதிகளில் இருந்த எல்லா நாடுகளையும் சைரசு தனது ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார். சைரசு எகிப்துக்குள் நுழையவில்லை. கிமு 510 டிசம்பரில் நிகழ்ந்த போரில் சைரசு இறந்துவிட்டார். இவரைத் தொடர்ந்து இவரது மகன் இரண்டாம் கம்பிசசு ஆட்சிக்கு வந்தார். குறுகிய காலமே ஆட்சி செய்த இவர் தனது காலத்தில் எகிப்து, நூபியா, சைரனைக்கா ஆகிய நாடுகளையும் பேரரசில் இணைத்தார்.

குறிப்புகள்[தொகு]

  1. Ghasemi, Shapour. "The Cyrus the Great Cylinder". Iran Chamber Society. பார்த்த நாள் 2009-02-22.
  2. Boyce, Mary "Achaemenid Religion". Encycloaedia Iranica vol. 2. Routledge & Kegan Paul. ; "The Religion of Cyrus the Great" in A. Kuhrt and H. Sancisi-Weerdenburg, eds., Achaemenid History III. Method and Theory, Leiden, 1988.
  3. Ghias Abadi, R. M. (2004) (in Persian). Achaemenid Inscriptions lrm; (2nd edition ed.). Tehran: Shiraz Navid Publications. பக். 19. ISBN 964-358-015-6. 
  4. Kent, Ronald Grubb (1384 AP) (in Persian). Old Persian: Grammar, Text, Glossary. translated into Persian by S. Oryan. பக். 393. ISBN 964-421-045-X. 
  5. (Dandamaev 1989, p. 71)
  6. Jona Lendering. "livius.org". livius.org. பார்த்த நாள் 2009-07-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சைரசு&oldid=1828430" இருந்து மீள்விக்கப்பட்டது