பேச்சு:கி. வீரமணி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கி. வீரமணி[தொகு]

உப தலைப்புகளில் , எல்லா இடத்திலும் , "கி.வீரமணிக்கு" , "கி.வீரமணி" என்று உள்ளதே . அது தேவை தானா ?--Commons sibi (பேச்சு) 18:42, 27 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

எதைப் பற்றி குறிப்பிடுகிறோமோ அதை துணைத் தலைப்பாக குறிப்பிட்டால் போதும். ”இவரது அரசியல் வாழ்க்கை” என்று இருந்தால் ”அரசியல் பங்களிப்பு/அரசியல் வாழ்க்கை/அரசியல் ஈடுபாடு” என்று (எது பொருத்தமோ) மாற்றலாம். திருச்சி என்ற கட்டுரையில் “திருச்சியில் உள்ள அலுவலகங்கள்” என்ற துணைத் தலைப்பு இருந்தால், அதை “அலுவலகங்கள்” என்று மாற்றலாம். தமிழ் எழுத்துக்கள் என்ற கட்டுரையில் “தமிழ் எழுத்துக்களின் தோற்றம்” என்ற துணைத் தலைப்பு இருந்தால், அதை “தோற்றம்” என்று மாற்றலாம். துணைத்தலைப்பு பொருந்தாத பட்சத்தில் தகுந்த சொல்லைக் கொண்டு மாற்றுங்கள். மற்ற கட்டுரைகளில் பார்த்தாலும் மாற்றிவிடுங்கள். துணைத் தலைப்புகள் சுருக்கமாக இருக்க வேண்டும். பெரும்பாலும் இரண்டு அல்லது மூன்று சொற்களில் இருப்பது நல்லது. பாதி வரியைப் போல் நீட்டி எழுதுவது சரியாக இருக்காது. கட்டுரையினுள் ”கி.வீரமணிக்கு, கி. விரமணியின்” போன்ற சொற்கள் இருந்தாலும், அவற்றை ”இவரின்/இவருக்கு” என்று மாற்றிவிடுங்கள். இலக்கணப் பிழைகள், எழுத்து நடையில் தவறிருந்தால் திருத்தியமைக்க வேண்டுகிறேன். சந்தேகம் எழும் பட்சத்தில் மட்டும் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 19:07, 27 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
//இலக்கணப் பிழைகள், எழுத்து நடையில் தவறிருந்தால் திருத்தியமைக்க வேண்டுகிறேன். சந்தேகம் எழும் பட்சத்தில் மட்டும் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். //வணக்கம் தமிழ்க்குரிசில் . எனக்கு உண்மையாகவே இந்த இடத்தில் எழுத்து நடையில் சந்தேகம் இருந்தது . :(--Commons sibi (பேச்சு) 04:20, 28 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
பலரும் படிக்கும் தகவற்களஞ்சிய தளத்தில் எவ்வகையான சந்தேகம் இருந்தாலும், கேட்டுத் தெளிந்து செயற்படு(த்து)தலே சிறந்தது! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:39, 28 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

விளம்பரம்[தொகு]

@AntanO and Kanags: இக்கட்டுரையில் அதிகளவில் விளம்பர உள்ளடக்கம் உள்ளது, அதனை நீக்கி கட்டுரையை செம்மைபடுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி--கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 06:05, 3 மே 2019 (UTC)[பதிலளி]

ஆ.வி போன்று எழுதலாம். சிறைவாசம் என்பதின் கீழ் எத்தனை முறை சென்றார் எனவும் மிக முக்கியமானவற்றையும் குறிப்பிட்டு எழுதலாம். காண்க: en:Wikipedia:Biography dos and don'ts--AntanO (பேச்சு) 14:59, 5 மே 2019 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 18:19, 5 மே 2019 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கி._வீரமணி&oldid=2727814" இலிருந்து மீள்விக்கப்பட்டது