பேச்சு:ஈழை நோய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
DNA-structure-and-bases.png ஈழை நோய் உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
Exquisite-kfind.png ஈழை நோய் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia

அடிக்குறிப்புகள்[தொகு]

ஒரே அடிக்குறிப்பு இரண்டுக்கு மேற்பட்ட இடங்களில் கொடுக்கப்படும்போது, அவற்றை அடிக்குறிப்பில் ஒரே எண்ணில் கொடுப்பதெப்படி? உதாரணமாக இந்தக் கட்டுரையில் 2 ஆம், 3 ஆம் அடிக்குறிப்புக்கள் ஒரே இணைப்பைக் சுட்டுகிறது. அதனால் 3 என்ற எண் வராமல் அங்கேயும் 2 என்ற எண்ணையே கொடுப்பது எப்படி?--கலை 22:56, 6 டிசம்பர் 2009 (UTC)

அடிக்குறிப்பிற்கு பெயர் கொடுப்பதன் மூலம் அதனை மீண்டும் அழைக்கலாம்.இரண்டு இடங்களிலும் ஒரே எண் தரப்படும்.காட்டாக,உங்கள் 2,3 அடிக்குறிப்புகளுக்கு WHO என பெயர் கொடுத்துள்ளேன். கட்டுரையில் பார்த்தால் விளங்கும் என நினைக்கிறேன். சாதரணமாக, <ref> ..</ref> என்று கொடுப்போம். இப்போது <ref name=பெயர்> என்று கொடுக்க வேண்டும். இரண்டாம் (அடுத்த) முறை பயன்படுத்தும்போது <ref name=பெயர்/> என்று இட்டால் போதும்.--மணியன் 05:59, 7 டிசம்பர் 2009 (UTC)
இதேமாதிரி நானும் எழுதி முயன்றேன். அப்போது ஏதாவது ஒரு குறியீட்டை போடாமல் விட்டு விட்டேன் போலிருக்கு. அதனால் அது சரியாக வரவில்லை. எனவேதான் இங்கே கேட்டு எழுதினேன். நன்றி மணியன்.--கலை 08:46, 7 டிசம்பர் 2009 (UTC)

தகுந்த சொல் பற்றி[தொகு]

பிறப்புரிமையியல் காரணிகள் என்று கட்டுரையில் சொல்லியிருப்பது, genetic causes என்று நினைக்கின்றேன். முதலில் congentical என்று கூற வந்தீர்களோ என்று எண்ணினேன். Genetic என்பதை நாம் மரபிழைய என்றோ, மரபணுவிய என்றோ -இயம் என்னும் பின்னொட்டைச் சேர்த்துக் கூறலாம். பிறப்புரிமையியல் என்பது birth right -ism என்பது போன்ற பொருள் சுட்டுகின்றது. இய என்னும் பின்னொட்டு வேண்டாம் எனினும் மரபணுக் காரணங்கள் என்றே கூடச் சொல்லலாம்.--செல்வா 23:15, 1 மே 2010 (UTC)

நன்றி செல்வா. நான் பயன்படுத்தும் வார்த்தைகள் பொதுவாக நான் படிக்கும் காலத்தில் பயன்படுத்திய வார்த்தைகள். நீங்கள் குறிப்பிட்ட சொல்லத் தேடித் திருத்தி விடுகிறேன். --கலை 15:14, 2 மே 2010 (UTC)

தலைப்பு[தொகு]

கலை, நீங்கள் கேட்டுக்கொண்டதன்படி ஈழை நோய், மூச்சுத்தடை நோய் என்ற கட்டுரைகள் இரண்டையும் அவற்றின் வரலாறுகளுடன் இணைத்திருக்கிறேன். எந்தத் தலைப்பை முதன்மைப்படுத்த வேண்டும் என்பதை நீஙகளே தீர்மானியுங்கள்.--Kanags \உரையாடுக 06:50, 2 மே 2010 (UTC)

இந்நோய் நெடுநாட்களாக தமிழர்கள் அறிந்த ஒன்று என்பதால் அதன் வழக்குப் பெயர்களையே முன்னிறுத்தலாமென நினைக்கிறேன். எங்கள் வட்டாரத்தில் இளைப்பு அல்லது இழைப்பு நோய் என்றும் அழைப்பார்கள். கால்நடை மருத்துவத்திலும் அதே சொல் புழக்கத்தில் உள்ளது என நினைக்கிறேன். இதையும் கருத்தில் கொள்ள வேண்டுகிறேன். -- சுந்தர் \பேச்சு 10:33, 2 மே 2010 (UTC)
இழைப்பு / இளைப்பு என்பது நேரடியாக asthma என்ற நோயைக் குறிக்காமல், weezing என்ற அதன் ஒரு நிலையைக் குறிக்கிறதென நினைக்கிறேன். ஈழை நோய் என்ற பெயரில் இந்தக் கட்டுரையை ஆரம்பிக்க முன்னரே, Asthma வை எப்படி எழுதலாம் என்று எனது பேச்சுப் பக்கத்தில் கேட்டு, மயூரனாதன் கொடுத்த பரிந்துரையின்படியே அந்தக் கட்டுரைக்கு ஈழைநோய் எனத் தலைப்பிட்டுவிட்டு, கட்டுரையில் ஏனைய பெயர்களையும் குறிப்பிட்டேன். எதற்கும் மற்றவர்களும் சேர்ந்து என்ன தலைப்பில் இந்தக் கட்டுரையை இங்கே வைத்திருக்கலாம் என்று உரையாடி, வேறு தலைப்பில் மாற்ற வேண்டுமா என முடிவைச் சொன்னால், அந்த தலைப்பில் போடலாம்.
மேலும், ஆரம்பத்தில் இக்கட்டுரையின் தலைப்பு ஈழை நோய் என இருந்ததால், நான் எழுதிய வரைக்கும், கட்டுரையின் பல இடங்களிலும் அதே பெயரைப் பயன்படுத்தி உள்ளேன். தற்போது மூச்சுத்தடை நோய் என இருப்பதால் அந்தப் பெயரையோ, அல்லது இளைப்பு/ இழைப்பு நோய் என மாற்றினால், அந்தப் பெயரையோ கட்டுரையில் அதிகம் பயன்படுத்த வேண்டியது அவசியமா? அல்லது ஈழை நோய் என்ற பெயரே கட்டுரை உள்ளடக்கத்தில் இருக்கலாமா என்பதையும் தயவுசெய்து கூறுங்கள் --கலை 15:17, 2 மே 2010 (UTC)
மூச்சுத்தடை நோய் செயற்கையாகத் தென்படுகிறது. அதுதான் சரியான கலைச்சொல் என்றால் மட்டும் முதன்மைத் தலைப்பாக இருக்கட்டும். இல்லையென்றால் ஈழை நோய் போன்ற வேறு பொருத்தமான தலைப்புக்கு நகர்த்தி அதையே முதன்மையாகக் கட்டுரைக்குள்ளும் பயன்படுத்தலாம். இழைப்பு/இளைப்பு பற்றிய உங்கள் கருத்து புரிகிறது. மற்றவர்களின் கருத்துக்களையும் அறிந்து செயல்படுவோம். -- சுந்தர் \பேச்சு 04:46, 3 மே 2010 (UTC)

Asthma மட்டும் மூச்சுத்தடை நோய் அல்லவே! மூச்சுத்தடை நோய் எனும் தலைப்பு இந்நோய்க்குப் பொருந்தாது;

மூச்சுத்தடை நெடுங்கால மூச்சுக்குழல் அழற்சி (Chronic bronchitis) மற்றும் காற்றேற்ற விரிவு (emphysema) ஆகிய சுவாசப்பாதைகள் குறுக்கம் அடையும் நெடுங்கால சுவாச அடைப்பு நோய்களிலும் காணப்படலாம், Asthmaவில் மூச்சுத்தடை மீண்டும் சரியான நிலைக்கு மீளும், ஆனால் நெடுங்கால சுவாச அடைப்பு நோய்களில் மீளாது. எனவே மூச்சுத்தடை நோய் எனும் தலைப்பை நீக்குமாறு பரிந்துரைக்கிறேன்.--செந்தி--ஃ உரையாடுக ஃ-- 13:24, 1 சூலை 2011 (UTC)

Asthma என்னும் இக்கட்டுரைக்கு என்ன தலைப்பைக் கொடுக்கலாம்? --கலை 13:40, 1 சூலை 2011 (UTC)

தற்போதைக்கு ஈழை நோய் என்று இருக்கட்டுமே.--செந்தி--ஃ உரையாடுக ஃ-- 16:15, 1 சூலை 2011 (UTC)

1852 ஆம் ஆண்டு அமெரிக்கன் மிஷனரிமாரால் யாழ்ப்பாணத்தில் பதிப்பதிக்கப்பட்ட தமிழ்-ஆங்கில அகராதியில் இதற்கு ஈழை நோய் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.--பாஹிம் (பேச்சு) 04:01, 31 திசம்பர் 2015 (UTC)

இந்நூலைத் தானே குறிப்பிடுகிறீர்கள். இதுவரை தமிழில் வெளிவந்த பல நூல்களை, மின்நூல் வடிவில் விக்கிமூலத்தில் கொண்டுவர முயற்சிக்கிறேன். எனவே, உங்களுக்குத் தெரிந்தவற்றை தொடுப்புகளுடன் தாருங்கள். --உழவன் (உரை) 05:02, 31 திசம்பர் 2015 (UTC)

அதே நூலே.--பாஹிம் (பேச்சு) 06:45, 31 திசம்பர் 2015 (UTC)

நோய்க் குறித்தொகுப்பு[தொகு]

இக்கட்டுரையிலுள்ள நோய்க் குறித்தொகுப்பு என்பது எதைக் குறிக்கிறது என்று அறிய விரும்புகிறேன். --கலை 12:17, 5 மே 2010 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஈழை_நோய்&oldid=1990838" இருந்து மீள்விக்கப்பட்டது