பேச்சு:அல்கா

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அல்கா உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

இணைப்புகள்[தொகு]

சுந்தர், ஒரு கட்டுரையிலிருந்து மற்றொரு பக்கத்துக்கு ஒரு முறை மட்டும் இணைப்பு தந்தால் போதும் என நினைக்கிறேன். பரிணாம வளர்ச்சி கட்டுரைக்கு நீங்கள் இரண்டாவதாகத் தந்துள்ள இணைப்பை நீக்கியுள்ளேன். ஒரு கட்டுரையில் முதலில் தென்படும் மற்றொரு கட்டுரைத் தலைப்புக்கு மட்டும் இணைப்பு தந்தால் போதும் எனக் கருதுகிறேன். அந்த தலைப்பு திரும்ப குறிப்பிடப் படும் பொழுது இணைப்பு தராமல் விட்டு விடலாம். இது குறித்து நடைக் கையேட்டிலும் நீங்கள் குறிப்பிடலாம். --ரவி (பேச்சு) 10:35, 17 ஜூன் 2005 (UTC)

ஆம். இம்முறை நான் கவனிக்கத் தவறி விட்டேன். நடைக் கையேட்டிலும் சேர்த்து விடலாம். நீண்ட கட்டுரைகளில் இந்நெறிமுறையை சிறிது மாற்றிக் கொள்ளலாம். ஒரு முறை கொடுக்கும் இணைப்பிற்கும் அதே கட்டுரைக்கான அடுத்த இணைப்பிற்கும் இடைவெளி போதுமான அளவு இருக்குமாறு பார்த்துக் கொள்வோம். -- Sundar 10:40, 17 ஜூன் 2005 (UTC)

ஆம். நீண்ட கட்டுரைகளில் சரியான இடைவெளியில் ஒரே பக்கத்திற்கு இணைப்புத் தருவது சரியாக இருக்கும். ஆனால், அந்த இடைவெளியை எப்படி வரையறுப்பது? கட்டுரையை எழுதுபவரே ஒரு நியாயமான இடைவெளியைக் கருத்தில் கொண்டு மறு இணைப்புகளைத் தருவது தான் சரியாக இருக்கும். Such intervals cannot be strictly defined.--ரவி (பேச்சு) 10:44, 17 ஜூன் 2005 (UTC)

Yes, at least, not more than once in a section. -- Sundar 10:47, 17 ஜூன் 2005 (UTC)

தலைப்பு மாற்றம்[தொகு]

இது அல்காக்கள் பற்றிய கட்டுரை. பாசி எனப் பிழையாகத் தலைப்பிடப்பட்டு அல்காக்கள் பற்றிய ஆங்கிலக் கட்டுரையுடன் தொடுக்கப்பட்டுள்ளது. இக்கட்டுரையின் தலைப்பை அல்கா என மாற்ற வேண்டும். அதே நேரம், பாசி என்ற தலைப்பில் வேறு கட்டுரை உருவாக்க வேண்டும். பாசி என்பது ஒரு தாவரம். அல்கா என்பது தாவரமல்ல. பாசி பற்றிய ஆங்கிலக் கட்டுரையை சரியான தமிழ்க் கட்டுரையுடன் இணைக்க வேண்டும்.--பாஹிம் 16:49, 29 மார்ச் 2011 (UTC)

பாஹிம் சொல்வது சரி. இது அல்காக்கள் பற்றிய கட்டுரை. பாசிகள் Mosses எனப்படுபவை. பிரயோபீற்றா வகையைச் சேர்ந்த தாவரம். எனவே இதை அல்கா என மாற்றிவிட்டு பாசி என்ற தலைப்பில் வேறு கட்டுரை உருவாக்க வேண்டும்.--சஞ்சீவி சிவகுமார் 08:53, 17 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]
Alga-வைச் சென்னைப் பல்கலைக்கழகப் பேரகரமுதலியில் கொந்தாழை எனத் தந்துள்ளார்கள். அந்தப் பெயருக்கு மாற்றிவிடலாமா? இந்தத்துறை அறிஞரான கார்த்தியிடமும் கருத்து கேட்கலாம். மற்ற பயனர்கள் யாராவது இதற்கான தமிழ்ப்பெயரை உறுதிசெய்தாலும் நல்லது. -- சுந்தர் \பேச்சு 09:43, 17 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]
பாஹிம் பிழையைக் கண்டறிந்தமைக்கு மிக்க நன்றி. இப்படிப் பல விடயங்கள் தமிழில் பெயர் தவறி உள்ளன, இரண்டையுமே தமிழில் பாசி என்று அழைப்பதால் வந்த பிரச்சனை. இங்கு ஏற்கனவே பயனர்கள் சிங்கமுகன் (நீலப்பச்சைப்பாசி), கார்த்திக் பாலா (இருகலப்பாசி), செந்தி (நான்) (பாசித்திரள்) தொடங்கிய கட்டுரைகளிலும் அல்காவை பாசி என்றே குறிப்பிட்டுள்ளோம், பல அகரமுதலிகளில்[1] [2] [3] உள்ள பிழையான பொருள் காரணம் ஆகலாம். moss, algae இரண்டுக்குமே பாசி என்று கொடுக்கப்பட்டுள்ளது, சில அல்கா வகைகள் பாசி போன்றே இருப்பதால் இக்குழப்பம் ஏற்பட்டிருக்கலாம். மேலும் அல்காக்களுக்கு கடற்பாசி என்றும் அழைத்திருப்பதைக் கவனிக்கலாம். சுந்தர் கூறியது போல கொந்தாழை அல்லது கடற்தாழை என்று கூறலாம், ஆனால் அங்கும் எல்லா அல்காக்களும் தாழை போன்று இருப்பதில்லை என்பதையும் கவனிக்க வேண்டி உள்ளது. எனவே தற்போதைக்கு (பாக்டீரியா போன்று ) அல்கா என்று இருப்பதே உகந்தது எனக்கருதுகிறேன்.--செந்தி--ஃ உரையாடுக ஃ-- 12:55, 17 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]
அல்கா என்று இருப்பதே எனக்கும் சரியாகப் படுகிறது.--சஞ்சீவி சிவகுமார் 15:56, 17 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]

கொந்தாழை என்னும் போது என்னவோ தாழை போன்ற பெரிய தாவரங்களைக் குறிப்பது போன்று தோன்றுகிறது. மேலும், அல்கா என்று பயன்படுத்தும் வழக்கம் இலங்கையில் உள்ளது. தமிழ்நாட்டில் எப்படிப் பயன்படுத்தப்படுகின்றதென அறியேன்.--பாஹிம் 16:13, 17 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]

இக்கட்டுரை "பாசி" என்று இருப்பதே சரியாகப்படுகிறது. தமிழ்நாட்டு பாடப்புத்தகங்களில் "பாசி" மற்றும் "அல்கா" இரு பெயர்களும் பயன்படுத்தப்பட்டுள்ளது. அல்கா என்பது ஆங்கிலத்தின் "Algae" என்பதின் ஒலிபெயர்பே தவிர தமிழ் சொல் அன்று! மேலும் இன்றும் தமிழ்நாட்டின் பல இடங்களில் ஏரி, குளம் மற்றும் ஓடைகளில் வளரும் Algaeகள் பாசிகள் என்ற பெயரே மக்களால் வழங்கப்படுகிறது. பாசி என்ற சொல் நீண்ட காலமாக பயன்பாட்டில் உள்ளது. இச்சொல் குற்றாலக்குறவஞ்சியில் ஓடையில் வளரும் நன்னீர் பாசியை குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது (தற்போது அப்பாடல் எதுவென்று நினைவில் இல்லை, விரையில் இங்கு தருகிறேன்). Moss என்பதற்கு இணையான தமிழ் பெயர் இல்லை என்றே தெரிகிறது? Moss கற்களிலும், மரங்களில் கிளைகளிலும் வளரும் ஒரு liverwort (ஈரலுருத்தாவரம்) ஆகும், இது Bryophyte (கலனிழையம்[vascular tissue] இல்லா தாவரம்) வகையை சார்ந்தவையாகும். என்னுடைய கருத்துப்படி Mossகளுக்குக்கென்று தமிழ் பெயர் இருந்ததாக எனக்கு தெரியவில்லை, ஆனால் இருக்க வாய்ப்புண்டு ஏனெனில் தமிழர்கள் பல சிறிய தாவரங்களுக்கும் பெயர் வழங்கியுள்ளார்கள். Mossகள் பல இடங்களில் எளிதில் காணப்படும் ஒரு தாவரம். கொந்தாழை என்னும் சொல் seaweed என்பதை குறிக்கும். இத்தாவரம் பெரியதாகவும் மற்றும் பயன்பாட்டில் (உணவு மற்றும் மருத்து) இருப்பதால் இதற்கென்று தனிபெயர் வழங்கப்பட்டு இருக்கலாம். கொந்தாழைகள் ஒரு வகையான் பாசிகள் என்பது சமீபத்தில் (200 ஆண்டுகளுக்குள்) கண்டுபிடுக்கப்பட்டவை. என்னுடைய கருத்துப்படி தமிழர்களின் வகைப்பாட்டியல் அறிவு பயன்சார்ந்தாகும் அறிவியல் சார்ந்ததன்று. பல ஆயிரம் ஆண்டு பழமைவாய்ந்த நாகரிகங்கள் அனைத்தும் இத்தகைய வகைப்பாட்டியலையே கடைபிடித்துவந்துள்ளது. அறிவியற்படி "Algae" என்பதற்கு "பாசி" நிகரான சொல்லாகும்

−முன்நிற்கும் கருத்து Karthickbala (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

நீர்நிலைகளுக்கு அருகில் கற்களில் வளரும் Moss என்பதைத்தானே பொதுவாக நாம் பாசி என்கிறோம்? அல்காக்களைப் பாசி என்று குறிப்பிடுவது சரியல்ல.--பாஹிம் 03:11, 18 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]

தமிழ்நாட்டு வழக்கில் அல்காக்களைக் குறிக்க “பாசி” என்ற சொல் பயன்படுத்தப்படுகின்றது. எனவே மாற்றத் தேவையில்லை.--சோடாபாட்டில்உரையாடுக 05:15, 18 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]
முன்பு தொடக்கம் பயன்பாட்டில் உள்ளதென்பதால் பாசி என்றே அழைக்கலாம் என்று முடிவெடுத்து, இவ்வாறே ஏனையவற்றிற்கும் தொடர்ந்தால்.. அறிவியலைத் தமிழில் விளங்கிக் கொள்ள முடியாது; முழுமையாகப் பாகுபடுத்த முடியாது. அல்காவுக்கு பாசி எனலாம் என்றால், mossதான் பாசி எனும் சொல்லுக்கு மிகவும் பொருத்தமானதாக உள்ளது. இப்படி எத்தனையோ "பிழையான" பதங்கள் வழக்கில் உள்ளது, தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலி சொற்களை நோக்கினால் அறியலாம், இதைப்பற்றிய அனுபவம் ஏற்கனவே பல பயனருக்கு உள்ளது, அவற்றைத் திருத்தி ஒரு புதிய அறிவியல் பாதையை வகுத்துக்கொள்வது தமிழில் அறிவியல் அறிவதற்கு உறுதுணையாகும், அன்றேல் தமிழில் அறிவியலை அறிந்து கொள்வது புறக்கணிக்கப்படும். இவ்வாறு உள்ள பல சொற்கள் திருத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவான வழக்கில் இருப்பதும் அறிவியல் வழக்கில் இருப்பதும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கவேண்டும் என்பதில்லை, பிறமொழிகளிலும் மக்கள் பயன்படுத்தும் சொற்களுக்கும் அறிவியற் சொற்களுக்கும் வேறுபாடு உள்ளது. இவை இரண்டுமே நோக்குவதற்கு ஒரே மாதிரியாக இருப்பதால் "பாசி" எனும் பொதுப் பெயரில் அழைக்கப்படுகின்றன. எனவே கட்டுரையில் இதனைப்பற்றித் தெளிவாகக் குறிப்பிட்டால் பின்வரும் காலங்களில் மக்கள் விளங்கிக்கொள்வார்கள்.

  • ///அறிவியற்படி "Algae" என்பதற்கு "பாசி" நிகரான சொல்லாகும்///

இதில் தங்களது முழுமையான விளக்கம் கிடைத்தால் நன்றாக இருக்கும். Algae எனும் இலத்தின் சொல் குறிப்பது "seaweed " என்பதை என்று http://www.etymonline.com/index.php?term=algae -இல் குறிப்பிட்டுள்ளனர்.

  • ///தமிழ்நாட்டு வழக்கில் அல்காக்களைக் குறிக்க “பாசி” என்ற சொல் பயன்படுத்தப்படுகின்றது. எனவே மாற்றத் தேவையில்லை.///

தங்களது கூற்று கேள்விக்குரியது, தவிர, தமிழ் நாட்டு வழக்கில் உள்ள எத்தனையோ சொற்கள் இங்கு மாற்றப்பட்டு உள்ளது என்பதைத் தாங்கள் அறிவீர்கள் என்று நினைக்கின்றேன். (உயிரணு - Cell - செல்) --செந்தி--ஃ உரையாடுக ஃ-- 07:32, 18 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]

செந்தி, இவ்வாறு மாற்றப்பட்டவை அனைத்தும் பழைய கலைச்சொல் வழக்குகளே. (அதாவது 20ம் நூற்றாண்டின் முதல் தமிழாக்க முயற்சிகளில் உருவானவை). இது கலைச்சொல்லாக்கமில்லாத பொதுவழக்கு. குளங்களிலும் நீர்நிலைகளிலும் காணப்படும் அல்காக்களை “பாசி” என்றே வழங்கி வந்துள்ளோம் (மொழிபெயர்ப்பாக அல்ல, தமிழ்ச்சொல்லாகவே).--சோடாபாட்டில்உரையாடுக 07:52, 18 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]
கிராமிய வழக்கில் Hydrilla, valicinaria, algae என பெயர் பிரிக்கமுடியாத எல்லாவற்றையும் பாசி என அழைக்கிறார்கள். "தூசியின்றித் தெளிந்தோடும் துறையினிலே நான் மூழ்கித் தொட்டதேதொ பாசி என்றெண்ணிக் கையாலே பறித்தெறியப் பற்றினேனா" என்பார் நீலாவணன். ஆயினும் அறிவியல் ரீதியில் இத்தகைய பெயரீடு குழப்பத்தையே உண்டுபண்ணும். சரியான சொல் பொருந்தாதவற்றுக்கு ஆங்கில ஒலிப்பெயர்ப்பை பயன்படுத்துவதே சரி.--சஞ்சீவி சிவகுமார் 09:06, 18 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]

தமிழில் "நன்னீர் பாசிகள்" என்ற புத்தகமே உள்ளது (1960களில் வெளிவந்தது). நீரிலும், நீரில் உள்ள கல், மக்கும் மரங்களில் வாழும் பச்சை/பளுப்பு நிற உயிரிகளையே பாசி என்றழைக்கிறோம். Mossess எப்பொழுதும் பாசிகள் என்று அழைக்கப்பட்டதாக நான் அறியவில்லை. இக்கலந்துரையாடலுக்கு மேலும் குழப்பம் சேர்க்க நான் இங்கு lichens பற்றியும் குறிப்பிடவிரும்புகிறேன் :). lichensயை கற்பாசி/பாசிக்காளான்/மரப்பாசி என்று அழைக்கப்படுகிறது (Algae, Mosses, Lichens அனைத்தும் படிவளர்ச்சியில் மிக நெருங்கிய தொடர்புடையவையாகும்). இவ்வாறாக பச்சை/பளுப்பு நிறத்தில் வளரும் அனைத்தும் பாசிகள் என்று அழைக்கப்பட்டு இருக்கலாம்! தற்போதைய குழப்பம் நீங்க Mossesக்கு வேறு ஏதேனும் பெயர் உள்ளதா என்று கண்டுபிடிக்கலாம். வேறு பெயர்கள் ஏதும் இல்லையெனில் நாமே கலந்துரையாடி ஒரு புதிய பெயரை உருவாக்கலாம். தமிழில் அனைத்து உயிரிகளுக்கும் பெயர் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்க இயலாது.

செந்தில் கூறியது போல Algae என்ற சொல் "ˈælɡə" என்ற இலத்தின் சொல்லில் இருந்து பெறப்பட்டுள்ளது. மேலும் phycos (φῦκος-கிரேக்கம்) என்ற சொல்லும் பாசிகளை குறிக்க வழக்கப்பட்டுள்ளது (கவனிக்க: Phycology: is the scientific study of algae). ælɡə மற்றும் φῦκος என இரண்டும் முறையே இலத்தின் மற்றும் கிரேக்கத்தில் Seaweeds குறிக்க பயன்பட்ட சொற்களாகும். இப்பெயர்கள் தமிழின் "கொந்தாழை" நிகரான பெயர்களே ஆகும். பழங்காலத்தில் பயன்பாட்டில் இருந்த உயிரிகளுக்கு மட்டுமே பெயர்கள் இருந்ததை நாம் இங்கு கருத்தில் கொள்ளவேண்டும். இலத்தின் மற்றும் கிரேக்கத்தில் இருந்து ஆங்கிலம் பெறப்பட்டதால் Algae மற்றும் Phycos பாசிகளை குறிக்க நிலைத்துவிட்டது. மனிதர்களுக்கு முதன்முதலில் தெரிந்து பாசி கொந்தாழை (Seaweeds), 19 மற்றும் 20ஆம் நூற்றாண்டுகளில் நுண்ணோக்கியின் வளர்ச்சியால் பல்லாயிர கணக்கான நுண்பாசியினங்கள் கண்டுபிடித்து அறியப்பட்டது. முதன்முதலில் அறியப்பட்ட Seaweedsயின் பெயரே அனைத்து பாசிகளின் பொது பெயராக அறியப்பட்டுவருகிறது. Algae என்பதற்கு நிகரான பாசி என்ற சொல்லை மாற்றுவதன் மூலமோ அல்லது Mossessயை பாசியினத்தில் புகுத்துவதால் நாம் குழப்பத்தை விளவிக்க நேரிடலாம் என்பது என் கருத்து. --கார்த்திக் 05:26, 19 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]

நீங்கள் Moss என்பதற்கு வேறு பெயர் குறிப்பிட வேண்டும் என்றும் அதனைப் பாசியல்ல என்ற கருத்துப்படக் கூறுவதும் எனக்கு வியப்பை அளிக்கிறது. ஊர்ப் புறங்களில் Moss என்பதைப் பாசி என்றுதான் கூறுகின்றனர். பாசி என்றாலே பலர் Moss என்பதைத்தான் சுட்டிக் காட்டும் நிலை இலங்கையில் உள்ளது. பாசி என்று அல்காக்களையும் குறிப்பதாயின் பாசி என்று Moss தாவரங்களையும் குறிக்கப்படும் நிலையில், ஒரு பகுதியை ஏன் தவறென்கிறீர்கள்? அதனாற்றான் இங்கு இந்தக் குழப்பம் விளைந்ததே.--பாஹிம் 09:07, 19 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]

சில நாட்கள் முன்னால் நானும், உண்மையில் பாசி என்பது எதனைக் குறிக்கின்றது எனக் குழம்பிக்கொண்டிருந்தேன் :).
பெயரிடுவது எனக்கு கடினமான வேலை :). ஆனால் Algae, Moss, Lichen, Seaweed ஆகியவற்றுக்கு தனித்தனியாக அறிவியற் பெயர்களை வழங்குவதே நல்லதென்று தோன்றுகின்றது. இலங்கை வழக்கு, தமிழ்நாட்டு வழக்கு என்று பார்க்காமல், சரியான, பொருத்தமான சொற்கள் கண்டறியப்பட்டு, அவற்றை பழக்கத்தில் கொண்டு வருவது நல்லதென்றே தோன்றுகின்றது. பொதுவான பேச்சு வழக்கில் ஒன்றுக்கு மேற்பட்ட உயிரினங்களுக்கு, ஒரே பெயரைப் பயன்படுத்துவதால் குழப்பம் இருப்பது உண்மையே. சிலர் Moss என்பதைப் பாசி என்றும், வேறு சிலர் algae ஐ பாசி என்றும் கூறினால் குழப்பம்தான். இதனால் அறிவியற் சொற்களைக் கொண்டு, குறிப்பிட்ட ஒரு உயிரினத்தை அடையாளம் காண முடியாமல் போய்விடுகின்றது.
மேலும் பொதுவான வழக்கில் இல்லாத சொற்களை தலைப்பாகக் கொண்டு இங்கே கட்டுரைகளை ஆக்கி இருக்கின்றோம். எடுத்துக்காட்டு: ஆஸ்துமா, இழுப்பு, தொய்வு என அழைக்கப்படும் Asthma நோய்க்கு ஈழைநோய் என்ற தலைப்பு. இந்த தலைப்பில் கட்டுரை ஆக்கும்வரை நான் இந்த சொல்லை கேள்விப்பட்டதே இல்லை. அதேபோல் புதிய சொற்களாக இருந்தாலும், அறிமுகம் செய்து பயன்படுத்தத் தொடங்கிவிட்டால், அதுவும் நாளடைவில் பயன்பாட்டுக்கு வந்துவிடும். எனவே சரியான சொற்களை கண்டறிந்து முடிவுக்கு வந்தால் நல்லது.
பாசி என்ற இந்தக் கட்டுரையை வேறொரு தலைப்புக்கு மாற்றி, பாசிக்கு புதிய கட்டுரை ஆக்குவதாயின், புதிய கட்டுரையை ஆக்க முன்பே, Algae யை பாசி எனக் குறிப்பிட்டு உள்ளிணைப்புக்கள் கொடுக்கப்பட்ட இடங்களைக் கண்டுபிடித்து, அவற்றை மாற்றம் செய்வதும் அவசியம் என நினைக்கின்றேன். காரணம் பாசி என்பதற்கு பல இடங்களில் ஏற்கனவே இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது, அவை பின்னர் புதிதாக ஆக்கப்படும் கட்டுரைக்கு தவறாக இணைக்கப்பட்டு விடும் என நினைக்கின்றேன். மேலும் தொடர்புடைய கட்டுரைகளையும் பெயர்மாற்றம் செய்ய வேண்டும்.
புதிய தமிழ் பெயராக்கத்தில் குழப்பம் நீடிப்பின், அது தீரும்வரைக்கும், தற்போதைக்கு பாக்டீரியா என்று இருப்பதுபோலவே, அல்கா என்ற (ஒலிபெயர்ப்பில்) தலைப்பில் கட்டுரையை வைத்துக்கொண்டு, கட்டுரையின் உள்ளே, அதற்கு வழக்கில் உள்ள சொற்களைக் குறிப்பிடுவதும் நல்லதென்றே தோன்றுகின்றது.--கலை 11:37, 19 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]

அகரமுதலிகளில்[தொகு]

  1. http://ta.wiktionary.org/wiki/alga
  2. http://www.tamillexicon.com/en/Alga.html
  3. http://translate.google.com/#en%7Cta%7CAlga

ஆலோசனை தருக[தொகு]

தமிழ் இலக்கியங்களிங் பாசி என்ற உட்பிரிவு மேலும் வளரும் தரவினைக் கொண்டுள்ளது. எனவே, இதனை தனிப்பக்கமாக உருவாக்கலாமா? ஏனெனில்,இன்று (21சூன்2014) 5தமிழ் இலக்கியங்களையே குறிப்பிட்டுள்ளேன். மேலும் 10-15 தமிழ் இலக்கிய நூல்களில் இச்சொல், பல இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன. --≈ உழவன் ( கூறுக ) 07:52, 21 சூன் 2014 (UTC)[பதிலளி]

பெயர்மாற்றம் பற்றி[தொகு]

இந்தக் கட்டுரையின் தலைப்பு மாற்றம்பற்றிப் பேசிவிட்டு, ஒரு முடிவுக்கு வராமல் விட்டுவிட்டோம் என நினைக்கின்றேன். அதனால் தலைப்பு மாற்றத்திற்கான வார்ப்புருவும் கட்டுரையில் அப்படியே உள்ளது. மேலே மூன்று அகரமுதலிகள் algae என்பதைப் பாசி எனக் கூறுவதற்கான மேற்கோள்களாகத் தரப்பட்டுள்ளன. அதே மூன்று அகரமுதலிகளிலும், Moss என்பதைப் போட்டுத் தேடினாலும், 'பாசி' என்ற சொல்லே கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், இலங்கை வழக்கில் பாசி என்பது moss என்பதைக் குறிப்பதாகவும், இந்திய வழக்கில் பாசி என்பது algae ஐக் குறிப்பதாகவும் பார்த்தோம். எனக்கு மேலும் ஒரு சந்தேகம். தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் பாசி algae ஐத்தான் குறிக்கின்றதா, அல்லது moss ஐயும் குறிக்கின்றதா? எனவே தற்போதைக்கு, அல்கா என்றே பெயர்மாற்றம் செய்துவிடலாமா? பாஹிம், சஞ்சீவி, சுந்தர், செந்தி, கார்த்திக், சோடாபாட்டில், த.உழவன் --கலை (பேச்சு) 20:48, 14 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அல்கா&oldid=2424985" இலிருந்து மீள்விக்கப்பட்டது