உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:Karthickbala

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


வணிக விளம்பரம்

[தொகு]

பயனர் பக்கத்தில் தி ஹிந்துவை வாங்காதீர்கள் என எழுதியுள்ளார். பயனர் பக்கத்தை வணிக விளம்பரங்களுக்கு (எதிற்பு விளம்பரமானாலும்) பயன்படுத்துவது கண்டிக்கத் தக்கது. அதை உடனடியாக நீக்குமாறு கோரிக்கை.--92.39.200.17 11:02, 7 ஜூன் 2009 (UTC)

வணக்கம் தோழரே, தங்களின் கோரிக்கையை ஏற்கிறேன்! தற்பொழுது த.வியில் இது பற்றிய கொள்கைகள் இல்லை. இது பற்றிய விவாதம் நடந்து பின் அதிகாரிகள், நிர்வாகிகள் மற்றும் பயனர்கள் சேர்ந்து எடுக்கும் முடிவிற்கு நான் கண்டிப்பாக கட்டுப்படுவேன். நீங்கள் என்னுடைய பயனர் பக்கத்தை தொகுக்க உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. மேலும் விக்கி கொள்கைகளை இத்துணை சரியாக கடைபிடிக்கும் நீங்கள் எங்களுடன் சேர்ந்து மிக நல்ல பங்களிப்பை செய்யலாம் தோழரே! எழுத இன்னும் பல லட்சம் கட்டுரைகள் உள்ளன......அன்புடன்--கார்த்திக் 13:51, 7 ஜூன் 2009 (UTC)
நன்றி பயனரே, என் கோரிக்கையை கொள்கை அளவில் ஒத்துக் கொண்டதற்கு. நான் இதை common sense பாயிண்டாகத் தான் கருதுகிறேன். எது விகி இல்லை என்பதன் விளக்கத்திற்கு http://en.wikipedia.org/wiki/Wikipedia:What_Wikipedia_is_not . குறிப்பாக ”Those promoting causes or events, or issuing public service announcements, even if noncommercial, should use a forum other than Wikipedia to do so. ”. மேலும் “Propaganda, advocacy, or recruitment of any kind, commercial, political, religious, or otherwise. ” அநத அளவில் பார்த்தால் உங்கள் இன அழிப்பு மறுப்பு விளம்பரமும் விகிக்கு புறம்பானது. அதை உங்கள் கவனத்திற்கு விட்டு விடுகிறேன்.--92.39.200.17 14:53, 7 ஜூன் 2009 (UTC)
நீங்கள் ‘தி ஹிந்து’ எதிர்ப்பு விளம்பரத்தை திருப்பி போட்டுவிட்டீர்களா, அதை பார்க்கவில்லை. விகிபீடியாவின் ‘ஐந்து தூண்கள்’ http://en.wikipedia.org/wiki/Wikipedia:Five_pillars சொல்கிறது "Wikipedia is not the place to insert personal opinions, experiences, or arguments. Original ideas, interpretations, or research cannot be verified, and are thus inappropriate. Wikipedia is not a soapbox; an advertising platform; a vanity press; " " Be bold in editing, moving, and modifying articles." அதனால்தான் அந்த விளம்பரத்தை எடுத்தேன்.--92.39.200.17 15:08, 7 ஜூன் 2009 (UTC)
கார்த்திக், பயனர் பக்கத்தில் உங்கள் கருத்துக்களை முன்வைக்க உங்களுக்கு பூரண உரிமை உண்டு. எந்த தயக்கமும் வேண்டாம். கட்டுரைப் பக்கத்திலேயே புறவய நோக்கில் எழுத வேண்டும். இல்லை என்றால் FireFox விளம்பரம் செய்கிறீர்கள் என்றும் பிறர் வந்து குற்றம் சாட்டலாம். --Natkeeran 15:14, 7 ஜூன் 2009 (UTC)
பெயரிலி, இன அழிப்பு விளம்பரம்....நால்லயிருக்கு உங்கள் மதிப்பீடு. --Natkeeran 15:16, 7 ஜூன் 2009 (UTC)
நீங்கள் கூறிய கொள்கைகள் எல்லாம் கட்டுரைகளில் தனிபட்ட பயனர் பக்கங்களில் அல்ல நண்பரே! என் பயனர் பக்கத்தின் மூலம் என் தனிபட்ட கருத்தை மட்டும் கூறகிறேன். என் தனிபட்ட கருத்துக்களை என் பயனர் பக்கத்தில் கூற எனக்கு முழு உரிமை உண்டு. இது என் பேச்சு சுதந்திரத்திற்கு சமம். நான் எழுதும் கட்டுரைகளில் ஒரு பக்க சார்பு அல்லது வேறு ஒருவரை/ஒரு குழுவை சேர்ந்தவரை சாடினால், அதை நீக்கவும் மற்றும் அதன் நடுநிலை தன்மையை ஆராயவும் உங்களுக்கு/எந்த விக்கிபீடியர்க்கும் முழு சுதந்திரம் உண்டு.
நீங்கள் ஏன் ஒரு பயனர் கணக்கைத் தொடங்கி பங்களிக்ககூடாது? எவ்வளவு அழகாக மேற்கொள்கள் காட்டி செய்திகள் விடுகிறீர்கள். அருமை. உங்களை போன்றவர்களின் பங்களிப்பு த.விக்கு கண்டிபாக தேவை.--கார்த்திக் 15:28, 7 ஜூன் 2009 (UTC)
பயனர், நீங்கள் ‘கட்டுரையையும்’ ’பயனர் பக்கத்தையும்’ தனியாக வைத்து, எது விகி இல்லை என்பதெல்லாம் ‘கட்டுரை’க்குதான் செல்லுபடி ஆகும் என்கிறீர்கள். விகிபீடியா நியதிகள் கட்டுரை, பயனர் பக்கம் இரண்டிற்கும் செல்லும்.Wikipedia is not a soapbox; an advertising platform; a vanity press என்றால், அது இரண்டு வகை பக்கத்திற்கும் பொருந்தும்.Propaganda, advocacy, or recruitment of any kind, commercial, political, religious, or otherwise.என்பது எப்பக்கத்திற்கும் பொருந்தும். உங்கள் விருப்பு, வெறுப்புகளை உங்கள் பிளாகில் எழுதி, அதற்கு சுட்டி கொடுக்கலாம்.--92.39.200.17 15:46, 7 ஜூன் 2009 (UTC)


சும்மா போட்டு குழப்பவேண்டாம். நான் இந்த இனத்தைச் சார்ந்தவன். இந்த மொழியைப் பேசுபவன். இந்த சமயத்தை சார்ந்தவன். எனக்கு இந்த அரசியல் நிலைப்பாடு உண்டு என்பது தெரிவிப்பது ஒன்றும் கபடத்தனாமனது அல்ல. தன்னை அடையாளம் காட்டாமல் ஒளிந்திருந்து ஒரு பக்க சார்பாக கருத்து தெரிவுப்பதை விட இது மேலானது. ஆ.வி இலும் பலரும் செய்வதுதான். எ.கா en:User:Magicalsaumy --Natkeeran 16:32, 7 ஜூன் 2009 (UTC)
நீங்கள் வேண்டுமென்றே வாதத்திற்கு tangential ஆக போகிறீர்கள். எந்த பயனரும் தங்களை பற்றி என்ன தகவலையும் கொடுக்கலாம். அதுக்கா நான் ஆட்சேபித்தேன்? ஹிந்துவை வாங்காதீர்கள் என்ற அந்த விளம்பரம், பல தமிழ் பிளாக்குகளில் இருக்கிறது. நான் இந்த அரசியல் நிலையை சார்ந்தவன் என்பதும் தகவல் தான். ஆனால் மற்றவர்களை இதை வாங்குங்கள், அதை வாங்காதீர்கள், என விளம்பரம் கொடுப்பது விகி நியதிகளுக்கு வெளிப்பட்டது. உங்களுக்கு ஆங்கிலம் சரியாக புரியவில்லை போலுள்ளது. பயனர் செய்யும் விளம்பரம் Propaganda, advocacy of political nature இல் வரும். மேலும் பயனர் செய்வது soapbox. நான் `சோஷலிஸ்ட், ரிபப்ளிகன், திமுக ஊழியர், தொழிலாளர் கட்சி` என்பது வெறும் தகவல். தகவலுக்கும், Propaganda, advocacy , advertising, soap-box முதலியவற்றுக்கும் உங்களுக்கு வித்தியாசம் புரியவில்லை. உங்களுக்கு அடையாளம் காட்டுவதற்க்கு யாரும், எந்த விதத்திலும் கடமைப் பட்டவர் இல்லர். நான் அடையாளம் காட்டாமல் இருப்பதில், நீங்கள் புண்படுவீர் ஆனால், அது உங்கள் சொந்த பிரச்சினை, அதைப் பற்றி யாரும் கவலைப் பட மாட்டார்கள்--92.39.200.17 17:24, 7 ஜூன் 2009 (UTC)
This user loves using Google Earth, This user prefers that the death penalty be used very sparingly. இப்படி ஆயிரக்கணக்கில் உள்ளன. எனவே பயனர் பக்கதில் கருத்து சொல்ல பூரண உரிமை உண்டு என்றுதான் கூற முடியும். en:User:SkinnerIJA. எனவே ஆ.வி சென்று, கொள்கை மாற்றிவிட்டு இங்கு வந்தால் நன்று. --Natkeeran 17:43, 7 ஜூன் 2009 (UTC)
உங்களுக்கு தகவலுக்கும் பிரச்சாரத்திற்க்கும் இன்னும் வித்தியாசம் புரியவில்லை. கார்த்திக்பாலா `எனக்கு ஹிந்து பிடிக்காது`அல்லது `எனது முக்கிய வெறுப்பு ஹிந்து` என சொல்லியிருந்தால் , அது தகவல். ஆனால் ஹிந்துவை (சில அரசியல் காரணங்களால்) வாங்காதிர்கள் என விசேஷ விளம்பரம் கொடுத்ததால், அது Propaganda, advocacy , advertising, soap-box ஆகும். பயனர் எனக்கு `கோகோ கோலா பிடிக்கும்` என்றால் அது தகவல், கோகோகோலா குடியுங்கள் என தனியாக படத்துடன் ஒரு விளம்பரம் கொடுத்தால் , அது Propaganda, advocacy , advertising, soap-box ஆகும்.--92.39.200.17 18:10, 7 ஜூன் 2009 (UTC)


உங்கள் கூற்றில் ஓரளவு உண்மை உண்டு. "சிங்கள ஆதரவு த இந்து வை எனக்கு பிடிக்காது" என்று கூறலாம். --Natkeeran 18:24, 7 ஜூன் 2009 (UTC)
எனக்கு பிடித்தவை / பிடிக்காதவை என் கனவுகள்/சிம்மசொப்பனனகள் என்ற தலைப்பில் என்ன வேண்டுமானலும் சொல்லலாம். அவை ஒரு நபர் பற்றிய தகவல் ஆகும்.--92.39.200.17 18:32, 7 ஜூன் 2009 (UTC)
கார்த்திக், மாற்று வார்ப்புரு ஒன்று இங்கே: {{த இந்துவைப் புறக்கணிப்பவர்}}--Natkeeran 18:46, 7 ஜூன் 2009 (UTC)
ஹிந்துவை வாங்காதீர்கள் என்று ஏன் படிமம் இடுகிறீர்கள். மற்றவர்களை ஹிந்துவை ஓசியில் படிக்க சொல்கிறீகளா? அல்லது லைப்ரரி போய் படிக்க சொல்கிறீகளா? அல்லது இண்டெர்நெட்டில் படிக்க சொல்கிறீகளா?--92.39.200.17 18:52, 7 ஜூன் 2009 (UTC)

நக்கீரன்க்கு: நக்கீரன் அருமையான வார்புரு :) :) :) :). இங்கு பல பேர் இப்படி இருப்பதால் தான் நம் சகோதர சகோதரிகள் கொத்துகொத்தாக மாய்ந்ததை எம்மால் தடுக்கமுடியவில்லை--கார்த்திக் 19:22, 7 ஜூன் 2009 (UTC)

அருமைக்குரிய திரு 92.39.200.17 அவர்களே! தற்போது எனது பயனர் பார்க்கவும். நீங்கள் இத்தகைய விவாதங்களில் பங்களிப்பதை விட பங்களிக்கலாம். இதற்குமேல் இவ்விவாதத்தில் காலவிரயம் செய்ய நான் தயாரக இல்லை. நீங்கள் த விக்கு பங்களிப்பதில் உதவி ஏதேனும் தேவையெனில் தயங்காமல் கேட்கவும்.--கார்த்திக் 19:22, 7 ஜூன் 2009 (UTC)

அருமைக்குரிய திரு கார்த்திக், நீங்கள் தி ஹிந்துவை புரக்கணித்து, அதன் வேலை விளம்பரங்களையும், விவாக விளம்பரங்களையும், அரசு காண்ட்ரேக்டுகளையும் நிச்சமாக உதாசீனம் செய்வீர்கள் என நம்புகிறேன். அதே சமயம், ஏன் ஹிந்து மட்டும் புரக்கணிக்கிறீர்கள். ஹிந்து ஒரு தனியார் பத்திரிக்கைதானே? இலங்கை அரசுக்கு போர் ஆதரவாக அரசியல், தளவாட ஆதரவு தந்த இந்திய அரசையும், அதற்கு உறுதுணையாக நின்ற தமிழ்நாடு அரசையும் புரக்கணிப்பிர்கள் என நம்புகிறேன். இந்திய/தமிழக அரசில் வேலை வாய்ப்பு தேட மாட்டீர்கள், இந்திய பாஸ்போர்டை வாங்கமாட்டீர்கள், தமிழக அரசு உதவிகொடுக்கும் பல்கைகழகங்களில் படிக்க மாட்டீர்கள் என நம்புகிறேன். வெறுமனே ஹிந்துவை புரக்கணிப்பது கோழையின் வீம்பு.--92.39.200.17 20:37, 7 ஜூன் 2009 (UTC)
தனிநபர் தாக்குதல் இங்கு தேவையற்றது. "கோழையின் வீம்பு" போன்ற அடைமொழிகள் இங்கு தேவை இல்லை. --Natkeeran 20:59, 7 ஜூன் 2009 (UTC)

பாராட்டுகள்

[தொகு]

கார்த்திக், மிக அருமையாக செந்நாய் என்னும் கட்டுரையை வளர்த்தெடுத்துள்ளீர்கள். நெஞ்சார்ந்த பாராட்டுகள்--செல்வா 21:39, 21 ஜூன் 2009 (UTC)

நல்வாழ்த்துகள்

[தொகு]

(என் பேச்சுப்பக்கத்தில் இட்ட மறுமொழியின் படி) கார்த்திக் உங்கள் முனைவர் ஆய்வுரையை இன்னும் ஒரு மாதத்திற்குள் சமர்ப்பித்து விடுவீர்கள் என்று அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி. இன்னும் சிறிது காலத்தில் முனைவர் கார்திக் பாலா, டாக்டர் கார்த்திக் பாலா என்று அழைக்கலாம்! எல்லாம் ஒளிவீசும் நல் வெற்றியாக அமைய நல்வாழ்த்துகள். நீல்கை (Nilgai) என்பது Bovidae (ஆவின் குடும்பம்) என்பதால் நீலா எனலாம். அல்லது நீலமான் எனலாம். பொதுவாக ஆன் என்றால் மான், மாடு ஆகியவற்றின் பெண் என்று அகராதி கூறும், ஆனால் காளை மாட்டிற்கும் ஆன் என்று பெயர் உண்டு. ஆகவே நீலான் (நீல ஆன்) என்றும் கூறலாம். மறுமொழி தர காலம் தாழ்ந்து விட்டதற்கு மன்னிக்கவும். --செல்வா 00:56, 25 ஜூன் 2009 (UTC)--செல்வா 17:26, 28 ஜூன் 2009 (UTC)

நன்றி

[தொகு]

முதற்பக்க இன்றைப்படுத்தலை செய்ய முன்வந்தமைக்கு நன்றி. ஓரளவு பூரணமான கட்டுரைகளை தேர்வு செய்வது நன்று (சற்று தேட வேண்டும்). அவ்வப்போது பெரிய கட்டுரைகள் மாட்டும் போது விக்கிப்பீடியா:முதற்பக்கம் இன்றைப்படுத்தல் ஒழுங்கமைவு குறித்து வைத்தல் நன்று.


உங்கள் பேச்சுப் பக்கத்தில் உள்ள முந்திய உரையாடல்களை இவ்வாறு தொகுத்தால் நன்று. பயனர் பேச்சு:Karthickbala/தொகுப்பு01 --Natkeeran 23:46, 29 ஜூன் 2009 (UTC)

இந்திய பாலூட்டிகள்

[தொகு]

ஆம் கார்த்திக். முதலில் தமிழ்நாட்டில் அறியப்பட்ட உயிரினங்களுக்கு முன்னுரிமை தரலாம். அதிலும் மூங்கில் அணத்தான், ஆசிய யானை, இந்திய காண்டாமிருகம் (மூக்குக்கொம்பன்), வரையாடு, வெளிமான், சோலைமந்தி, நாய், நீலான் போன்ற சில கட்டுரைகள் ஏற்கனவே இருப்பது நன்று. பாலூட்டிகளன்றிப் பொதுவாக காட்டுயிர்களை எடுத்துக் கொண்டால் கானமயில் போன்ற மற்ற சில கட்டுரைகளையும் இணைக்கலாம். -- சுந்தர் \பேச்சு 14:16, 8 ஜூலை 2009 (UTC)

விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/சூலை 12, 2009

[தொகு]

விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/சூலை 12, 2009 தொகுத்துள்ளேன். --Natkeeran 14:47, 12 ஜூலை 2009 (UTC)

விக்கித் திட்டம் உயிரியல்

[தொகு]

வணக்கம்....கார்த்திக் கணிதம், கணினியியல், கட்டிடக்கலை, இயற்பியல், இலத்திரனியல் போன்ற துறைகள் தமிழ் விக்கிப்பீடியாவில் ஒப்பீட்டளவில் வளர்ச்சி பெற்றவை. உயிரியல் துறையில் தற்போது ஆழமான தலைப்புகளில் பங்களிக்கக்கூடிய குறைந்தது 4 பயனர்கள் உள்ளார்கள். நீங்கள், மகிழ்நன், ரவி, கலை. முடிந்தால், நீங்கள் நால்வரும் கூட்டாக ஒரு விக்கித் திட்டம் உயிரியல் தொடங்கலாம். கணினியியலில் நல்ல தமிழில் கட்டுரைகள் எழுத அங்கு பரந்த பயன்பாட்டில் இருக்கும் (http://www.tcwords.com/) கலைச்சொற்கள் துணை புரிகின்றன. அது போல, பல அடிப்படைத் தலைப்புகள்/கலைச்சொற்கள் கொண்ட ஒரு விரிவான பட்டியலைத் தொடங்குவது ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும். பல பட்டியல்களின் கூட்டுகாக் கூட இது இருக்கலாம். பாக்க: தலைப்புகள் பட்டியல்களின் பட்டியல் --Natkeeran 15:22, 19 ஜூலை 2009 (UTC)

கட்டாயம் இணைந்து பணியாற்றுவேன், கார்த்திக். இத்திட்டத்தைத் தூண்டிவிட்ட நற்கீரனுக்கும் நன்றி. கார்த்திக், மோசோவும் உயிரினங்களின் எச்சங்கள், படிவளர்ச்சிக் கொள்கை, தொன்மா போன்றவற்றின் மீது ஆர்வம் கொண்டவர். அவரையும் அழைத்துப் பாருங்கள். -- சுந்தர் \பேச்சு 17:11, 19 ஜூலை 2009 (UTC)


நன்றி கார்த்திக் ... உங்கள் ஊக்கம் மென் மேலும் நம் தமிழுக்கு வளம் சேர்க்கும்... உதவி வேண்டும் என்றால், தயங்கமால் கேட்கிறேன்..

நன்றி --Munaivar. MakizNan 20:58, 19 ஜூலை 2009 (UTC)

இன்றைப்படுத்தல்

[தொகு]

விக்கிசெய்திகள்

[தொகு]

பார்க்க: Wikinews:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள். நன்றி.--Kanags \பேச்சு 10:29, 27 ஜூலை 2009 (UTC)


கார்த்திக் பாலா உங்களின் கட்டுரைகள் அருமை. எனக்கும் விலங்கு நடத்தையியல் ஆர்வம் மிகுதி. முதுஅறிவியல் படிக்கும்போது அதை பற்றி படித்துள்ளேன். மேலும் மூன்று முதல் நான்கு மாதங்கள் மதுரை பல்கலைகழகத்தில் நடத்தையியல் துறையில் சேர்ந்து வவ்வால்களை பற்றி ஆய்வு செய்தேன். நீங்கள் தற்போது ஆய்வு செய்யும் துறையில் எனது நண்பன் ரகுராம் உள்ளான். மேலும் உங்கள் துறையில் உள்ள கடேகர் பற்றி அறிந்துள்ளேன், அவர் எழுதிய நூல் ஒன்றை படித்துள்ளேன். உங்கள் பணி சிறக்க எனது வாழ்த்துகள். உங்கள் பயனர் முகப்பில் சே படம் உள்ளது. நீங்கள் புரட்சிகர எண்ணங்கள் கொண்டவரா? அப்படி என்றால் மிகவும் மகிழ்ச்சி. என்னுடைய மின்னஞ்சல் முகவரி makizhventhan@gmail.com pandi@wisc.edu my real name is gopal... by chance if u talk with raghuram, use my real name.

viraivil santhipom...

makizNan

விக்கித்திட்டம் இந்தியத்துணைக்கண்டப் பாலூட்டிகள்

[தொகு]

தெரிவித்தமைக்கு நன்றி கார்த்திக். கருத்துக்களைப் பிறகு தெரிவிக்கிறேன்.--சிவக்குமார் \பேச்சு 20:24, 3 ஆகஸ்ட் 2009 (UTC)

முதற்பக்க கட்டுரைப் பரிந்துரைகள்

[தொகு]

--Natkeeran 19:47, 9 ஆகஸ்ட் 2009 (UTC)

பிறந்தநாள் குழுமத்தின் வரவேற்பு

[தொகு]
வணக்கம்! Karthickbala அவர்களே! பிறந்தநாள் குழுமம் தங்களை அதன் புதிய உறுப்பினராக ஏற்றுகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறது! ஏதேனும் சந்தேகம் எழுந்தால் என்னைத் தொடர்பு கொள்ளலாம்! நன்றி!

Vatsan34 06:17, 14 அக்டோபர் 2009 (UTC)[பதிலளி]

வாழ்த்துகளுக்கு நன்றி

[தொகு]

உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி கார்த்திக்பாலா! உங்களைப் போன்றவர்களின் அன்புடனும் அரவணைப்புடனும் சிறப்பாக பணியாற்ற முயல்வேன்.--மணியன் 06:32, 8 நவம்பர் 2009 (UTC)[பதிலளி]

பிறந்த தின நல்வாழ்த்துகள்

[தொகு]

கார்த்திக்! உங்கள் ஆய்வுப்பணியும் விக்கி பணியும் மென்மேலும் வளர்ந்து சிறப்பிக்க பலப்பல பிறந்த தினங்களைக் கண்டு மகிழ என் வாழ்த்துக்கள்! -- பரிதிமதி 11:10, 16 நவம்பர் 2009 (இந்திய நேரம்)

விடுமுறை முடியுது...

[தொகு]

ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும், ஒரு மீளாய்வும் செய்து, அடுத்த ஆண்டு தொடர்பாக ஒரு திட்டமிடல் செய்வோம். 2010 இல் தமிழ் விக்கிப்பீடியாவின், தமிழ் விக்கித் திட்டங்களில் செயற்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பான உங்கள் எண்ணக்கருக்களை பகிர்ந்தால் உதவியாக இருக்கும். குறிப்பான செயற்படுத்தக்கூடிய பரிந்துரைகளாக இருந்தால் நன்று.

விக்கிப்பீடியா:2009 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2009 Tamil Wikipedia Annual Review
விக்கிப்பீடியா பேச்சு:2009 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2009 Tamil Wikipedia Annual Review

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தால் நன்று. நன்றி.

--Natkeeran 03:26, 19 டிசம்பர் 2009 (UTC)

மீண்டும் வருக!

[தொகு]

கார்த்திக், கொலராடோ பல்கலையில் இருக்கின்றீர்களா!! பலே, பலே! எங்கே உங்களை நெடுநாட்களாகக் காணோம் என்று நினைத்தேன். மீண்டும் வருக, வருக! --செல்வா 14:41, 7 பெப்ரவரி 2010 (UTC)

தேவைப்படும் கட்டுரைகள்

[தொகு]

விக்கிப்பீடியா:கூகுள் கட்டுரை மொழிபெயர்ப்புத் திட்ட ஒருங்கிணைப்பு/தேவைப்படும் கட்டுரைகள் பக்கத்தில் உயிரியல் குறித்த சில தலைப்புகளையாவது உடனடியாகச் சேர்க்க முடியுமா? நன்றி--ரவி 19:14, 19 பெப்ரவரி 2010 (UTC)

சிறு தொகுப்பு

[தொகு]

புதுப்பயனர் வரவேற்பு போன்றவற்றைச் சிறு தொகுப்புகளாக குறித்தால் அண்மைய மாற்றங்கள் பக்கத்தில் நெரிசல் குறையுமே? நன்றி--ரவி 16:37, 5 மார்ச் 2010 (UTC)

தமிழில் தலைப்பு

[தொகு]

தாங்கள் வலைவாசல்:கட்டுரைப்போட்டி/தலைப்புகள் பட்டியல்‎ பக்கத்தில் உள்ளீடு செய்துள்ள தலைப்புகள் ஆங்கிலத்தில் இருக்கின்றன. தலைப்பைத் தமிழில் கொடுத்து அடைப்புக்குறிக்குள் ஆங்கிலத்தில் கொடுங்கள்.--Theni.M.Subramani 08:25, 7 மார்ச் 2010 (UTC)

தமிழாக்கம்

[தொகு]

ஐயா கூகிள் உதவியோடு ஆங்கில கட்டுரைகளை தமிழாக்கம் செய்வது எப்படி?--Msudhakardce 09:52, 9 மார்ச் 2010 (UTC)

Disney

[தொகு]

What is the Tamil titles of Dumbo, The Rescuers, The Fox and the Hound, and Charlotte's Web? Also, why is the பாண்டசிய(திரைப்படம்) article vandalized and can you restore the other vandalized one before it was vandalized? 68.220.162.147 19:27, 28 மார்ச் 2010 (UTC)

கருத்து வேண்டல்

[தொகு]

விக்கிப்பீடியா_பேச்சு:தானியங்கிகள்#மெல்லுடலிகள் தானியங்கி முன்னீட்டைப் பற்றிய உங்கள் கருத்தை வேண்டுகிறேன். -- சுந்தர் \பேச்சு

வார்ப்புரு:தமிழ் எழுத்து மாற்றத்தை எதிர்க்கிறேன்

[தொகு]

இந்தப் பயனர் 72 தமிழ் எழுத்துக்களின் (29%) வடிவத்தை மாற்றி அமைக்க சிலர் எடுக்கும் முயற்சிகளை எதிர்க்கிறார்.


--Natkeeran 17:25, 9 மே 2010 (UTC)[பதிலளி]

சிங்களாந்தபுரம்

[தொகு]

கார்த்திக் பாலா அவர்களுக்கு வணக்கம். தங்களின் பெயரை படிக்கும் போது எனக்கு உடன் நினைவுக்கு வருவது --- என்னுடைய மதிப்பிற்குறிய ஆசிரியர் --- T.M.பால சுப்பிரமணியன் அவர்களே. தாங்கள் தங்களை கொஞ்சம் அடையாளம் காட்ட முடியுமா ? நானும் சிங்களாந்த புரத்தைச் சேர்ந்தவனே. தொடர்பு கொள்ள --- ppnindia@gmail.com

Thank you -----திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 04:47, 10 மே 2010 (UTC)[பதிலளி]

முதற்பக்க அறிமுகம்

[தொகு]

வணக்கம் கார்த்திக். உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தர விரும்புகிறோம். உங்களைப் பற்றிய சிறு குறிப்பை விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/கார்த்திக் பாலா பக்கத்தில் சேர்க்க முடியுமா? விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் உள்ள அறிமுகங்களை எடுத்துக்காட்டாக கொள்ளலாம்.--ரவி 05:48, 25 மே 2010 (UTC)[பதிலளி]

கார்த்திக்கின் ஒப்புதலுடன், அவரைப் பற்றிய அறிமுகம் சேர்க்கப்பட்டுள்ளது--இரவி (பேச்சு) 08:58, 14 சூலை 2012 (UTC)[பதிலளி]

சிகப்புப் பட்டியல்

[தொகு]

கார்த்திக்! வணக்கம். IUCN RedList - இன் 2001-ஆம் ஆண்டு பதிப்பு 3.1 இங்கே கண்டேன். [1] இது புதிய பதிப்பா அல்லது பழைய பதிப்பா எனத் தெரியவில்லை. இப்பதிப்பில் ஏழு பிரிவுகள் கொடுக்கப்பட்டுள்ளன: LC, NT, VU, EN, CR, EW, EX. தயந்து தெளிவாக்கவும்.[ [பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியம்]] என்ற தலைப்பையும் IUCN - இற்கு அளித்துள்ளேன். உங்கள் அமெரிக்க வாசம் சிறப்பாக உள்ளதா? --பரிதிமதி 08:17, 26 மே 2010 (UTC)[பதிலளி]

கிரிவலம் கட்டுரை

[தொகு]

கிரிவலம் கட்டுரையின் எந்தப்பகுதியும் நீக்கப்படாமல் அவை அனைத்துமே திருவண்ணாமலை கட்டுரையில் உள்ளது. மேலும் கிரிவலம் கட்டுரை தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும் பகுப்பில் இடம் பெற்று இருந்தது. ஒரேகட்டுரை இரு பெயரில் இருப்பது தேவையில்லை எனக்கருதி வழிமாற்றினேன். நன்றி.ஹிபாயத்துல்லா14:05, 6 ஜூன் 2010 (UTC)

உதவி வேண்டும்

[தொகு]

அன்புடைய கார்த்திக் அண்ணா அவர்களே, பிரச்சனை என்ற தமிழ் சொல்லிற்கு இணையான செந்தமிழ் வார்த்தை என்ன என்பதை கூற இயலுமா?--Jenakarthik 09:16, 12 ஜூன் 2010 (UTC)

பாராட்டுக்கள்

[தொகு]

கார்த்திக், நீங்கள் ஒரு புதிய கண்டுப்பிடிப்பைச் செய்திருப்பது பற்றியும் அதற்கு தமிழில் பெயரிட்டிருப்பதை அறிந்தும் மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள். தொடர்க உங்களுடைய நற்பணி.--சிவக்குமார் \பேச்சு 18:23, 21 ஜூலை 2010 (UTC)

கார்த்திக், உங்கள் ஆய்வுப் பணிகள் மென்மேலும் தொடர எனது வாழ்த்துகள்.--Kanags \உரையாடுக 21:14, 21 ஜூலை 2010 (UTC)
கார்த்திக் பாலாவுக்கு வணக்கம். தங்களது புதிய கண்டுபிடிப்பிற்கும், அதற்கு தமிழ் பெயர் இட்டதற்கும் எனது பாராட்டுக்கள், நல்வாழ்த்துக்கள். --திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 00:39, 22 ஜூலை 2010 (UTC)
வணக்கம்! தாங்கள் புதியதோர் இருகலப்பாசி கண்டறிந்து தமிழன்னைக்குப் பெருமை சேர்த்தமை அறிந்து அகம் மிக மகிழ்ந்தேன். தங்கள் வெற்றிகள தொடர என் வாழ்த்துகள்! - Karthi.dr 01:15, 22 ஜூலை 2010 (UTC)
மீண்டும் எனது பாராட்டுகள், கார்த்தி. தமிழின் மங்காப்புகழுக்கு இன்னுமோர் அணி செய்துள்ளீர்கள். -- சுந்தர் \பேச்சு 02:33, 22 ஜூலை 2010 (UTC)

புதிய கண்டுபிடிப்புக்கும் அதற்கு தமிழ் பெயர் சூட்டியமைக்கும் இரட்டை வாழ்த்துகள் கார்த்தி --குறும்பன் 02:36, 22 ஜூலை 2010 (UTC)

கார்த்திக், மகிழ்ச்சி. மிக்க மகிழ்ச்சி. மென்மேலும் உங்கள் வெற்றிகள் தொடரட்டும். உங்கள் கண்டுபிடிப்பு பற்றிய சிறு குறிப்பு அளித்திட முடியுமா? --பரிதிமதி 03:04, 22 ஜூலை 2010 (UTC)
மிகவும் அருமை கார்த்திக்! வாழ்த்துக்கள். சீக்கிரம் உங்கள் tamilensis கட்டுரையை எதிர்பார்க்கின்றேன்.--அராபத்* عرفات 05:09, 22 ஜூலை 2010 (UTC)
என்னை பாராட்டி ஊக்கப்படுத்து அனைத்து சகோதரர்களுக்கும் மிக்க நன்றி. தற்பொழுதுதான் அக்கட்டுரையை ஒரு சஞ்சிகைக்கு சமர்ப்பித்துள்ளேன். கட்டுரை பிரசுரமானதும் உங்களுடன் கட்டாயம் பகிர்ந்துகொள்வேன். இன்னும் பல புதிய தமிழ் பெயர்களுடன் கட்டுரைகளை எழுதி வருகிறேன், அவை வளர்ந்தவுடன் தெரிவிக்கிறேன். நன்றி--கார்த்திக் 05:16, 22 ஜூலை 2010 (UTC)

கடமா

[தொகு]

கார்த்திக், கடமா தகவல் பக்கம் உயிர்ப்பு பெற்று சிறப்பாக வருகின்றது; ஆய்வுப்பணியுடன் விக்கிப்பணியைத் தொடருவதில் உள்ளபடியே மகிழ்ச்சி.--பரிதிமதி 18:04, 27 ஜூலை 2010 (UTC)

Thanks Brother

[தொகு]

Hey Karthik,Thanks for the information,Yeah I have heard about the same book through my research,to add more I have a list of Books by same Author,Vishwanath shri. Khaire,For your info.

  1. Adagula MaDagula (Its Kind of Lullaby word.)
  2. Maratti Bhasheche Mool (Roots of Marathi Language:According to Sammat Siddhanta)
  3. Dravid Maharashtra

I am trying to get these books soon,once I read this I will definitely get back to you,to throw more light on relations and connections ok,by the way I wish to start Marathi-Tamil & Viceversa Wiktionary project soon.I am sure friend like you will help me in this regard.Currently I am learning Tamil through a book called "Tamil Shika"(Learn Tamil)in which these books are mentioned by the author and even the author has the same opinion as that of Shri.KHaire.ok.Thank you brother,With regards,Prasannakumar 20:06, 12 ஆகஸ்ட் 2010 (UTC)

  • You know even in Marathi its said like "Marhattmoli"-मर्‍हाटमोळी (pronounced like மராட்டுமொழி)-Means related to Marathi Language.

மீண்டும் விக்கிப் பணிக்கு வர வேண்டுகோள்

[தொகு]

வணக்கம் கார்த்திக்பாலா. நலமா? கடந்த சில மாதங்களாகத் தமிழ் விக்கிப்பீடியா நன்கு வளர்ந்து வருகிறது. மூன்றே வாரங்களில் புதிதாக ஆயிரம் கட்டுரைகளை எழுதுகிறோம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் :) விரைவில் 50,000+ கட்டுரைகள் என்ற இலக்கை முன்வைத்து உழைக்க விரும்புகிறோம். இந்நேரத்தில் ஏற்கனவே தமிழ் விக்கியில் ஈடுபாடு காட்டிய உங்களைப் போன்ற பலரும் அவ்வப்போதாவது மீண்டும் வந்து விக்கிப்பணியில் இணைந்து கொண்டால் உற்சாகமாக இருக்கும். உங்களால் பங்கு கொள்ள இயலாவிட்டாலும், உங்கள் நண்பர்கள் வட்டத்தில் தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றி எடுத்துச் சொல்லி புதிய பங்களிப்பாளர்களை ஈர்க்க உதவ இயலுமா? நன்றி--இரவி 13:10, 2 மே 2011 (UTC)[பதிலளி]

நிர்வாக அணுக்கம் - நன்றி

[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவின் நிர்வாக அணுக்கப் பணிக்கு நடைபெற்ற வாக்கெடுப்பில் எனக்கு வாக்களித்து உதவிய தங்களுக்கு என் இதயப்பூர்வமான நன்றிகள்...--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 01:54, 28 சூன் 2011 (UTC)[பதிலளி]

இந்திய விக்கி மாநாடு -- மும்பை -- நவம்பர் 18-20 2011


வணக்கம் Karthickbala,

முதல் இந்திய விக்கி மாநாடு மும்பையில் 2011 நவம்பர் 18 முதல் 20 வரை நடைபெறவுள்ளது.

மாநாட்டு உரலிகள்: மாநாட்டு இணையபக்கம், ஃபேசுபுக் நிகழ்ச்சி பக்கம் , உதவித் தொகை விண்ணப்பம்(கடைசி : ஆகஸ்ட் 15) மற்றும் ஆய்வுக் கட்டுரை சமர்பிக்க (கடைசி : ஆகஸ்ட் 30).

மாநாட்டுக்கான 100 நாள் பரப்புரை தொடங்கவுள்ளது.

நீங்கள் தமிழ் விக்கி சமூகத்தின் அங்கத்தினராக இருப்பதால், மாநாட்டிற்கு வருகை தந்து உங்களின் விக்கி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம். உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி.

உங்களை 18-20 நவம்பர் 2011 இல், மும்பையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

Invite to WikiConference India 2011

[தொகு]

Hi Karthickbala,

The First WikiConference India is being organized in Mumbai and will take place on 18-20 November 2011.
You can see our Official website, the Facebook event and our Scholarship form.

But the activities start now with the 100 day long WikiOutreach.

Call for participation is now open, please submit your entries here. (last date for submission is 30 August 2011)

As you are part of Wikimedia India community we invite you to be there for conference and share your experience. Thank you for your contributions.

We look forward to see you at Mumbai on 18-20 November 2011

மீண்டும் வருக

[தொகு]

கார்த்திக்கு, மீண்டும் வருக! சிறு இடைவெளிக்குப் பிறகுதான் எனினும், சில உயிரியல் கட்டுரைகளை எழுதும் பொழுதும் திருத்தும் பொழுதும், உங்களை நினைத்தேன். வருக!--செல்வா 17:04, 24 பெப்ரவரி 2012 (UTC)

குதிரை

[தொகு]

பல்வேறு விலங்கினங்கள் பற்றி ஆர்வமுடைய நீங்கள் இவ்வார கூட்டு முயற்சிக் கட்டுரையான குதிரையை மேம்படுத்தி உதவினால் நன்றாக இருக்கும். விலங்குகள் / பறவைகள் பற்றிய ஒரு வலைவாசல் தொடங்கினாலும் நன்றாக இருக்கும். நன்றி--இரவி (பேச்சு) 15:09, 21 மே 2012 (UTC)[பதிலளி]


உங்களுக்குத் தெரியுமா அறிவிப்பு

[தொகு]Photo usage

[தொகு]

Hi, I've been working on a small game built around animal quizzes and I wanted to let you know I've used one of your pictures.

I found your picture here: http://en.wikipedia.org/wiki/File:Nasikabatrachus_sahyadrensis.jpg

And I attributed the picture like this: Karthickbala at ta.wikipedia with this link: http://ta.wikipedia.org/wiki/User:Karthickbala and also added a link to the license: http://creativecommons.org/licenses/by-sa/3.0/deed.en

I hope you're happy with it, please let me know if this is not the case. You can find the game here: http://apps.facebook.com/animalalbum Or through here: http://www.facebook.com/pages/AnimalAlbum/156339584490672

Kind regards, Garfunkel Jansen (பேச்சு) 20:49, 28 சூன் 2012 (UTC)[பதிலளி]

P.S. Thanks for taking the picture and making it available.

கூகுள் கட்டுரை துப்புரவு உதவி தேவை

[தொகு]

கார்த்தி, சில மாதங்களாகவே முதற்பக்கத்தில் உயிரினங்களின் நடமாட்டம் குறைவாக உள்ளது :( எனவே, விலங்குகள் - தாவரங்கள் - சுற்றுச்சூழல் குறித்த கூகுள் கட்டுரைகளைத் துப்புரவு செய்ய உங்கள் தேவை. பல நல்ல தலைப்புகள் மூன்று ஆண்டுகளாகத் தேங்கி உள்ளன. துப்புரவு செய்வதன் மூலம் முதற்பக்கக் கட்டுரை ஆக்கலாம். --இரவி (பேச்சு) 13:12, 12 சூலை 2012 (UTC)[பதிலளி]

ரவி கண்டிப்பாக செய்ய ஆரம்பிக்கிறேன். --கார்த்திக் (பேச்சு) 13:17, 12 சூலை 2012 (UTC)[பதிலளி]

நன்றி, கார்த்தி. நீங்கள், சிவா, செல்வா முனைப்பாக இருந்த காலத்தில் முதற்பக்கத்தில் நிறைய விலங்கினங்கள், பறவைகள் பற்றிய கட்டுரைகள் வரும். விரும்பிப் படித்திருக்கிறேன். வசந்த காலம் மீண்டும் வர வேண்டும் :) --இரவி (பேச்சு) 13:26, 12 சூலை 2012 (UTC)[பதிலளி]

பிறந்த நாள் வாழ்த்துகள்

[தொகு]
வணக்கம் Karthickbala அவர்களே , விக்கிப்பீடியா:பிறந்தநாள் குழுமம் சார்பாக இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !
இந்நாள் உங்களுக்கு இனிய நாளாக அமையட்டும்  !
--மதனாகரன் (பேச்சு) 09:57, 16 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் Karthickbala! -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 10:27, 16 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

முதற்பக்க அறிமுகம்

[தொகு]

கார்த்திக், அடுத்து வரும் இரண்டு வாரங்களுக்கு தமிழ் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களைப் பற்றிய அறிமுகம் இடம்பெறுகிறது. தமிழ் விக்கிப்பீடியாவில் தவளைகள், மான்கள் மற்றும் இன்ன பிற விலங்கினங்கள் உலவி ஆண்டுக்கணக்காகிறது. மீண்டும் உலவ விட்டு மிரட்ட வருக வருக :)--இரவி (பேச்சு) 13:14, 24 சனவரி 2013 (UTC)[பதிலளி]

பாராட்டுகள்

[தொகு]

வணக்கம் கார்த்திக் பாலா. முதற்பக்க அறிமுகம் கண்டேன். நம்ப அண்டை வீட்டுக்காரர்தான் நீங்க!!!!!!!!!!!!!!! மகிழ்ச்சி. விக்கியில் உங்களது பங்களிப்பு மேலும் சிறக்க வாழ்த்துகள்...-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 14:19, 24 சனவரி 2013 (UTC)[பதிலளி]

தமிழ் விக்கிக் கூடலுக்கான வருகை விருப்பப் பதிவு

[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு நிறைவை ஒட்டி செப்டம்பர் மாதம் சென்னையில் தமிழ் விக்கிப்பீடியா கூடல் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்யலாமா என்று உரையாடி வருகிறோம். இதில் நீங்கள் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும். ஏனெனில், இது தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டுகளில் பலரையும் ஒரே இடத்தில் சந்தித்து உரையாடக்கூடிய அபூர்வ வாய்ப்பு. போனால் வராது :) கலந்து கொள்வதற்கான உங்கள் விருப்பம், தேவைகளைத் தெரிவித்தீர்கள் என்றால், அதன் அடிப்படையில் முடிவெடுத்துச் செயற்பட முடியும். குறிப்பாக, வெளிநாடு அல்லது வெளியூரில் இருந்து கலந்து கொள்வோருக்கான பயண உதவித் தொகை, தங்குமிடத் தேவை குறித்து அறிந்து கொண்டால் தான் அதற்கு ஏற்ப நிதி ஏற்பாடு செய்ய முடியும். உங்கள் விருப்பத்தை இங்கு தெரிவியுங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 11:50, 24 சூன் 2013 (UTC)[பதிலளி]

தல, பத்தாண்டு நிறைவு நிகழ்ச்சியில் நீங்கள் கலந்து விரும்புவது கண்டு மகிழ்ச்சி. ஆனால், நிகழ்ச்சி செப்டம்பர் இறுதியில் அல்லவா நடைபெறுகிறது? உங்கள் பயணத்தைக் கொஞ்சம் ஒத்திப் போட முடியுமா? நிகழ்ச்சியின் தேதியை ஒரு வாரம் முன்பு வைத்தால் வேறு சிலருக்கு இடிக்கக்கூடும்.--இரவி (பேச்சு) 05:31, 5 சூலை 2013 (UTC)[பதிலளி]

பண்பாட்டுச் சுற்றுலாவுக்கான அழைப்பு

[தொகு]

வணக்கம். தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான பண்பாட்டுச் சுற்றுலாவில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன். தங்கள் வருகையை திட்டப்பக்கத்தில் உறுதிப்படுத்தி விடுங்கள். இது "அழைப்புள்ளவர்களுக்கு மட்டும்" என்ற வகையில் ஏற்பாடு செய்யப்படும் சுற்றுலா. எனவே, உங்கள் நண்பர்கள், உறவினர்கள் முதலியோரை அழைத்து வருவதைத் தவிர்க்கலாம். நன்றி.--இரவி (பேச்சு) 20:07, 18 செப்டம்பர் 2013 (UTC)

வேண்டுகோள்...

[தொகு]

வணக்கம்! தமிழ் விக்கிப்பீடியாவில் தங்களின் பங்களிப்பை மகிழும்வகையில் ‘பாராட்டுச் சான்றிதழ்’ வழங்க திட்டமிட்டுள்ளோம். பத்தாண்டுக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இத்திட்டம் உள்ளது. இங்கு தங்களின் விவரங்களை இற்றைப்படுத்த வேண்டுகிறோம். மிக்க நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:17, 27 செப்டம்பர் 2013 (UTC)

முதற்பக்கக் கட்டுரை அறிவிப்பு

[தொகு]பொதுவகத்தில் உங்கள் படிமம்

[தொகு]

தங்களது இந்தப் படிமம் தற்போது இங்கு பொதுவகத்தில் தரவேற்றப்பட்டுள்ளது. நன்றி --NeechalBOT (பேச்சு) 02:07, 30 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

குறுங்கட்டுரை விரிவாக்க வேண்டுகோள்

[தொகு]

நீக்கல் வேண்டுகோளை எதிர்கொள்ளும் அசம்பு கட்டுரையை விரிவாக்கியோ தகுந்த பக்கத்தில் ஒன்றிணைத்தோ உதவ முடியுமா? நன்றி.--இரவி (பேச்சு) 04:09, 21 மே 2014 (UTC)[பதிலளி]

விக்கித் திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு

[தொகு]
அனைவரும் வருக
அனைவரும் வருக

வணக்கம் Karthickbala!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.

--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 07:51, 30 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]

கட்டுரை நீர்நிலைகள்

[தொகு]
தமிழ் எப்படி விரிவுபடுத்தப்படவேண்டும் என்பதை விளக்கும் முன்னோட்டக் கட்டுரை.
இதனைத் தொடங்கி வழிகாட்டும் தங்களுக்குக் கடப்பாடு. --Sengai Podhuvan (பேச்சு) 22:51, 6 பெப்ரவரி 2015 (UTC)

உதவித்தொகை பெற, ஆதரவு கோரிக்கை

[தொகு]

விக்கிப்பீடியா:உதவித்தொகை#Info-farmer_(தகவலுழவன்) என்ற பக்கத்தில் உதவித்தொகை பெற விண்ணபித்துள்ளேன். ஆதரவு தரக் கோருகிறேன். வணக்கம்.--உழவன் (உரை) 17:53, 4 சூலை 2015 (UTC)[பதிலளி]

விக்கி மாரத்தான் 2016 - பங்கேற்க அழைப்பு

[தொகு]

வணக்கம்!

சூலை 31, 2016 அன்று நடக்கவிருக்கும் தமிழ் விக்கி மாரத்தான் 2016 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

சென்ற ஆண்டு மாரத்தானில் 65 பயனர்கள் கலந்து கொண்டு 24 மணி நேரத்தில் 2370 தொகுப்புகள் ஊடாக 178 கட்டுரைகளை உருவாக்கினோம். தமிழ் விக்கிப்பீடியாவின் இந்தத் தனிச்சிறப்பு மிக்க முயற்சிக்கு, இந்த ஆண்டு சில இலக்குளை முன்வைத்துள்ளோம்.

  • பஞ்சாப் மாதம் தொடர்பான தொகுப்புகள். தமிழில் தகவல் தேடுபவர்கள், போட்டித் தேர்வுக்குத் தயாராகிறவர்கள் இந்தியா பற்றிய பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. அடுத்தடுத்து தகுந்த வேளைகளில் இது போல் ஒவ்வொரு மாநிலம் குறித்தும் தகவல்களைக் குவிக்கலாம். தற்போது, பஞ்சாப் மாதத் தொடர் தொகுப்பு முயற்சியில் இந்திய அளவில் கூடுதல் தகவலைச் சேர்ப்பதில் ஆங்கில விக்கிப்பீடியாவுடன் போட்டியிட்டுச் செயற்பட்டு வருகிறோம். நீங்களும் இணைந்தால் தமிழ் விக்கிப்பீடியாவுக்கான கேடயம் வெல்லலாம் :)
  • கோயில்கள் தொடர்பான சொற்பட்டியல், மாதிரிக் கட்டுரைகளை இறுதியாக்கி தானியக்கப் பதிவேற்றம் நோக்கி நகர்வது. இதன் மூலம் 40,000+ கட்டுரைகளை உருவாக்கலாம்.
  • கூகிள் தமிழாக்கக் கட்டுரைகளைச் சீராக்குதல்

இது போக, வழமை போல தங்களுக்கு விருப்பமான தொகுப்புகளிலும் ஈடுபடலாம். நெடுநாளாக விக்கியில் செய்ய நினைத்துள்ள பணிகளை நிறைவேற்றுவதற்கு இது ஒரு நல்ல நாள் :)

தங்களின் விருப்பத்தை இவ்விடத்தில் பதிவு செய்யுங்கள்; நன்றி!

-- இரவி

விக்கிமீடியா வியூகம் 2017

[தொகு]

தமிழ் விக்கிப்பீடியா, விக்சனரி, விக்கிமூலம், விக்கிச் செய்திகள், விக்கிமேற்கோள், விக்கி நூல்கள் உட்பட்ட திட்டங்கலை முன்னெடுக்கி விக்கிமீடியா நிறுவனம் தனது தொலைநோக்குச் செயற்பாடுகளை ஒழுங்கமைக்கும் வண்ணம் உள்ளீடுகளைக் கேட்டுள்ளது. தமிழ் விக்கியில் இருந்து உள்ளீடுகளைத் தொகுப்பதற்கான இந்தப் பக்கத்தை தொடங்கி உள்ளேம். அப் பக்கத்தின் பேச்சுப் பக்கத்தில் உங்கள் எண்ணங்களை, கருத்துரிப்புக்களை பகிருங்கள். விக்கிப்பீடியா:விக்கிமீடியா வியூகம் 2017. இதன் முதற்கட்டம் ஏப்பிரல் 15 இல் முடிவடைகிறது. நன்றி. --Natkeeran (பேச்சு) 20:30, 10 ஏப்ரல் 2017 (UTC)

துப்புரவுப் பணிக்கான அவசர அழைப்பு

[தொகு]

வணக்கம். இது அனைத்து நிருவாகிகளுக்குமான பொதுவான அவசரச் செய்தி. எனவே, இது தொடர்பான பணிகளில் ஏற்கனவே நீங்கள் ஈடுபட்டிருந்தாலும் இந்த அறிவிப்பைக் காண நேரிடும்.

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மூலமாக தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்கான மாநிலம் தழுவிய 3 நாள் விக்கிப்பீடியா பயிலரங்குகள் நடைபெறுகின்றன. மே 10,11,12 ஆகிய தேதிகளில் மட்டும் 22 மாவட்டங்களில் இருந்து 2000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களும் இன்னும் பலரும் மாதம் முழுவதும் விக்கிப்பீடியாவில் பங்களிக்க ஊக்குவிக்கப்படுவார்கள். எனவே, பெருமளவில் வரும் புதுப்பயனர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு விக்கிப்பீடியா துப்புரவிலும் இவர்களுக்கு வழிகாட்டவும் கூடுதல் உடனடி உதவி தேவைப்படுகிறது. இது பற்றிய மேலதிக விவரங்கள் இங்கு உள்ளன. துப்புரவுப் பணிகள் பற்றி அங்கு உள்ள குறிப்புகளைக் கவனித்து மேம்படுத்துங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் சேவை உடனடியாகத் தேவை :) இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தமிழக ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பற்றிய நட்பான நல்ல அறிமுகத்தைத் தருவதுடன் அவர்களைத் தொடர்ந்து நல்ல பங்களிப்பாளர்களாகத் தக்க வைக்கும் நோக்குடன் அரவணைத்துச் செயற்படுவோம். நன்றி. --17:05, 9 மே 2017 (UTC)

Your administrator status on ta.wikipedia

[தொகு]

Hello. A policy regarding the removal of "advanced rights" (administrator, bureaucrat, etc.) was adopted by community consensus in 2013. According to this policy, the stewards are reviewing activity on wikis with no inactivity policy.

You meet the inactivity criteria (no edits and no log actions for 2 years) on the wiki listed above. Since that wiki does not have its own rights review process, the global one applies.

If you want to keep your rights, you should inform the community of the wiki about the fact that the stewards have sent you this information about your inactivity. If the community has a discussion about it and then wants you to keep your rights, please contact the stewards at m:Stewards' noticeboard, and link to the discussion of the local community, where they express their wish to continue to maintain the rights.

If you wish to resign your rights, you can reply here or request removal of your rights on Meta.

If there is no response at all after approximately one month, stewards will proceed to remove your administrator and/or bureaucrat rights. In ambiguous cases, stewards will evaluate the responses and will refer a decision back to the local community for their comment and review. If you have any questions, please contact the stewards. Rschen7754 02:39, 13 சூன் 2017 (UTC)[பதிலளி]

துப்புரவுப் பணிக்கான அவசர அழைப்பு

[தொகு]

வணக்கம். இது அனைத்து நிருவாகிகளுக்குமான பொதுவான அவசரச் செய்தி. எனவே, இது தொடர்பான பணிகளில் ஏற்கனவே நீங்கள் ஈடுபட்டிருந்தாலும் இந்த அறிவிப்பைக் காண நேரிடும்.

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மூலமாக தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்கான மாநிலம் தழுவிய 3 நாள் விக்கிப்பீடியா பயிலரங்குகள் நடைபெறுகின்றன. சூன் 21 தொடங்கி சூலை 06 வரை மூன்று கட்டங்களாக நடக்கும் இப்பயிற்சிகளில் 32 மாவட்டங்களில் இருந்து 900க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களும் இன்னும் பலரும் மாதம் முழுவதும் விக்கிப்பீடியாவில் பங்களிக்க ஊக்குவிக்கப்படுவார்கள். எனவே, பெருமளவில் வரும் புதுப்பயனர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு விக்கிப்பீடியா துப்புரவிலும் இவர்களுக்கு வழிகாட்டவும் கூடுதல் உடனடி உதவி தேவைப்படுகிறது. இது பற்றிய மேலதிக விவரங்கள் இங்கு உள்ளன. துப்புரவுப் பணிகள் பற்றி அங்கு உள்ள குறிப்புகளைக் கவனித்து மேம்படுத்துங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் சேவை உடனடியாகத் தேவை :) இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தமிழக ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பற்றிய நட்பான நல்ல அறிமுகத்தைத் தருவதுடன் அவர்களைத் தொடர்ந்து நல்ல பங்களிப்பாளர்களாகத் தக்க வைக்கும் நோக்குடன் அரவணைத்துச் செயற்படுவோம். நன்றி. -- இரவி, 21 சூன் 2017. 20:58 இந்திய நேரம்.

துப்புரவுப் பணிக்கான அவசர அழைப்பு

[தொகு]

வணக்கம். இது அனைத்து நிருவாகிகளுக்குமான பொதுவான அவசரச் செய்தி. எனவே, இது தொடர்பான பணிகளில் ஏற்கனவே நீங்கள் ஈடுபட்டிருந்தாலும் இந்த அறிவிப்பைக் காண நேரிடும்.

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மூலமாக தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்கான மாநிலம் தழுவிய 3 நாள் விக்கிப்பீடியா பயிலரங்குகள் நடைபெறுகின்றன. சூன் 21 தொடங்கி சூலை 06 வரை மூன்று கட்டங்களாக நடக்கும் இப்பயிற்சிகளில் 32 மாவட்டங்களில் இருந்து 900க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களும் இன்னும் பலரும் மாதம் முழுவதும் விக்கிப்பீடியாவில் பங்களிக்க ஊக்குவிக்கப்படுவார்கள். எனவே, பெருமளவில் வரும் புதுப்பயனர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு விக்கிப்பீடியா துப்புரவிலும் இவர்களுக்கு வழிகாட்டவும் கூடுதல் உடனடி உதவி தேவைப்படுகிறது. இது பற்றிய மேலதிக விவரங்கள் இங்கு உள்ளன. துப்புரவுப் பணிகள் பற்றி அங்கு உள்ள குறிப்புகளைக் கவனித்து மேம்படுத்துங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் சேவை உடனடியாகத் தேவை :) இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தமிழக ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பற்றிய நட்பான நல்ல அறிமுகத்தைத் தருவதுடன் அவர்களைத் தொடர்ந்து நல்ல பங்களிப்பாளர்களாகத் தக்க வைக்கும் நோக்குடன் அரவணைத்துச் செயற்படுவோம். நன்றி. -- இரவி, 21 சூன் 2017. 20:58 இந்திய நேரம்.

கட்டுரைப் போட்டியில் பங்கேற்க அழைப்பு

[தொகு]

அன்புள்ள பாலா,

உடன் பங்களிப்பவன் என்ற முறையில், இது நான் உங்களுக்கும் மற்ற தமிழ் விக்கிப்பீடியர்களுக்கு எழுதும் தனிப்பட்ட மடல்.

2005ல் இருந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறேன். அப்போது தோராயமாக 600 கட்டுரைகள் இருந்தன. இப்போது 1,15,000 கட்டுரைகள் உள்ளன. மலைப்பாக இருக்கிறது. மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அதே வேளை, கடந்து வந்த பாதையையும் எண்ணிப் பார்க்கிறேன்.

இது ஒரு நெடும் பயணம். பல பேருடைய பல மணிக்கணக்கான உழைப்பைக் கொட்டிய பயணம். ஆங்கில விக்கிப்பீடியா 2001 தொடங்கி 2004 வரை அடைந்த வளர்ச்சியைக் கூட நமது 15 ஆண்டுகளில் நாம் இன்னும் எட்டிப் பிடிக்க முடியவில்லை! அப்படி என்றால், இன்னும் செல்ல வேண்டிய தொலைவோ மிக அதிகம். ஆங்கிலத்தில் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய அறிவின் அளவும் தரமும் தமிழர்களுக்குக் கிடைப்பது எப்போது? தமிழர்களின் சமூக வரலாற்று, அரசியல் சூழலுக்கு உட்பட்டு, உடனடியாக கட்டற்ற அறிவைப் பெற வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.

அதற்கு நாம் புதிய வழிமுறைகளையும் பெரும் திட்டங்களையும் தீட்ட வேண்டியுள்ளது. அப்படிச் செய்ய வேண்டுமானால் நாம் அதற்கு வலுவானவர்கள் என்று உறுதிபட நிறுவ வேண்டிய தேவை உள்ளது. ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன்:

தமிழ் விக்கிமூலத்தில் 2000 நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களைச் சேர்த்துள்ளோம். இவை பல இலட்சம் பக்கங்கள் உள்ளன. இவற்றை மனித முறையில் சரிபார்ப்பது என்றால் பல பத்தாண்டுகள் ஆகலாம். ஆனால், இயந்திரம் மூலம் சரி பார்க்க முடியுமா? அதற்குப் பல மென்பொருளாளர்களை முழு நேரமாக ஈடுபடச் செய்ய முடியுமா? பெருமெடுப்பில் தன்னார்வலர்களை முழு நேரமாக ஈடுபடுத்த முடியுமா? (இப்படிச் செய்வதற்குச் சமூகத்தின் ஒப்புதலும் விக்கிமீடியா அறக்கட்டளையின் ஒப்புதலும் தேவைப்படும் என்பதைக் கவனிக்க!) அதனால், இதனை ஒரு எடுத்துக்காட்டாக மட்டுமே குறிப்பிடுகிறேன்.

நாம் ஏற்கனவே சிறப்பாகச் செயற்படுத்திய சில திட்டங்களுக்கான எடுத்துக்காட்டுகள்:

இத்தகைய வலுவான திட்டங்களின் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு என்று ஒரு நற்பெயரைப் பெற்றுள்ளோம். நாம் அடுத்து கோரும் திட்டங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

வெகு அரிதாகவே விக்கிப்பீடியாவையும் தமிழ் கட்டற்ற அறிவுச் சூழலையும் வெளியாட்கள் புரிந்து கொள்கிறார்கள். புரிந்து கொள்ளும் ஆட்களால் நமக்கு உதவ முடிவதில்லை. உதவ முடிகிற ஆட்களோ நம்மைப் புரிந்து கொள்வதில்லை.

வயிறு பசிக்கும் மாணவனால் பள்ளிக்கு வர முடியாது என்பதை உணர்ந்து ஒரு நூற்றாண்டு முன்பே இலவச மதிய உணவுத் திட்டம் கொண்டு வந்தவர்கள் நாம். ஆனால், பில் கேட்சு போன்றவர்களே கூட இன்னும் இது பயனுள்ளது தானா என்று சில ஆப்பிரிக்க நாடுகளில் ஆய்வு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய உலகச் சூழலில், நமக்கு என்ன தேவை என்று அறிந்து திட்டங்களை வகுக்க முடிகிற நம்முடன், மற்றவர்கள் இணைந்து கொள்ள பல ஆண்டுகள் ஆகிறது.

2010க்கு முன்பே தகவல் உழவனுக்கு நமது தனிப்பட்ட முயற்சியில் கணினி உதவி அளித்தோம். அதன் பிறகு தமிழ்க் குரிசிலுக்கு இணைய உதவி அளித்தோம். இத்திட்டங்கள் இந்தியாவுக்கே முன்னோடியாக அமைந்து இன்னும் பல இந்திய விக்கிப்பீடியர்களுக்கு உதவியது. தற்போது, இதன் நன்மையைப் புரிந்து கொண்டு விக்கிமீடியா அறக்கட்டளையும் கூகுளும் இணைந்து நூற்றுக் கணக்கானவர்களுக்கு இலவசமாக இணையத்தையும் கணினியையும் வழங்குகிறது. இத்திட்டம் பயனுள்ளது தானா என்று இன்னும் கூட சிலருக்கு ஐயமாக இருக்கலாம். ஆனால், பயன் மிக்கது என்பதில் நான் உறுதியாக இருக்கிறோம். திட்டம் முடிந்து விளைவுகளை அலசும் போது, இத்திட்டம் உலக நாடுகள் பலவற்றுக்கும் விரிவுபடுத்தப்பட்டு இன்னும் பல நாட்டு விக்கிப்பீடியருக்கு உதவும். இந்திய அளவில், உலக அளவில் இது போன்ற திட்டங்கள் எப்படி வகுக்கப் படுகின்றன என்று அருகில் இருந்து பார்த்த முறையில் சொல்கிறேன்: மாற்றம் மிகக் கடினமாக உள்ளது. நமக்கு என்ன தேவை என்று தெரிந்தும், அதனைப் பெற்று வருவது மிகச் சிரமமாக உள்ளது. நாம் இத்தகைய திட்டங்களைச் செயற்படுத்தக் கூடியவர்கள் தானா என்று ஐயுறும் போக்கு உள்ளது.

அதனால், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கு உதவும் இத்திட்டம் வெற்றியடையுமா, எந்த அளவு வெற்றியடையும், தமிழ் விக்கிப்பீடியா இதில் செலுத்தப் போகும் பங்கு என்ன என்பது நம் கையிலேயே உள்ளது.

இத்திட்டத்தின் முதற்பகுதியாக கணினி, இணைய உதவி வழங்கினோம். இரண்டாம் பகுதியாக கட்டுரைப் போட்டி தொடங்கியுள்ளது. கவனிக்க: இது வழமை போல் அனைவரும் பங்கு கொள்ளக்கூடிய போட்டியே. கணினி, உதவி பெற்றோருக்கு மட்டுமான போட்டி அன்று.

ஏற்கனவே, பல தமிழ் விக்கிப்பீடியா முன்னோடித் திட்டங்களில் சிறப்பாகப் பங்களித்தவர் என்ற முறையில் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் முனைப்புடன் பங்களித்து மாபெரும் வெற்றியடையைச் செய்ய உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ் விக்கிப்பீடியர் 50 பேர் மாதம் 15 கட்டுரைகளை எழுதினாலும் 2000 கட்டுரைகள் என்ற இலக்கை இலகுவாக அடைந்து விடலாம். எனவே. உங்களுடைய வழக்கமான விக்கி பங்களிப்பு ஆர்வத்துக்கு இடையே இந்தப் போட்டியிலும் பங்கு பெறக் கோருகிறேன். உங்கள் ஒவ்வொருவராலும் பரிசுகள் வெல்ல முடியாது. அது நம் நோக்கமும் இல்லை. இங்கு பரிசு என்பது ஊக்கம் மட்டுமே. ஆனால், தனிப்பட்ட பரிசுகளைத் தாண்டி அதிகம் கட்டுரைகளை எழுதும் விக்கிப்பீடியாவுக்குச் சமூகப் பரிசு உண்டு. இது சுமார் 10,00,000 இந்திய ரூபாய் மதிப்பில் இலங்கை, இந்தியாவைச் சேர்ந்த 40 தமிழ் விக்கிப்பீடியர்களுக்குத் திறன்கள் பயிற்சி அளிக்கும் வாய்ப்பாக அமையும். இந்த வாய்ப்பைத் தட்டிச் செல்வது நமது திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும் மீண்டும் ஒரு முறை அனைவரும் கண்டு மகிழவும் வாய்ப்பாக அமையும்.

இந்த ஒவ்வொரு தலைப்பும் தமிழர்களுக்கு உடனடித் தேவை தானா என்று கூட உங்களுக்கு ஐயம் இருக்கலாம். ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த 2000 தலைப்புகள் பெரிதும் திரைப்படங்கள், நடிகர்கள், பாடகர்கள் போன்ற பரவலான ஈடுபாடுடையை தலைப்புகளை மட்டும் கொண்டிருந்தன என்பதைக் கவனத்தில் கொண்டு தற்போது கூடுதலாகப் பல புதிய தலைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. இப் புதிய பட்டியலில் பெண்கள், உடல்நலம், அறிவியல் மற்றும் நுட்பம், வரலாறு மற்றும் புவியியல், கலை மற்றும் அறிவியல் போன்ற துறைகளுக்கு முன்னுரிமை தந்து தொகுத்துள்ளோம். இவை தமிழகப் பகுதியில் இருந்து அதிகம் படிக்கப்படும் ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைகள். ஆனால், இவை தமிழில் இல்லை (அல்லது போதுமான விரிவு/தரத்துடன் இல்லை). தமிழகத்தில் இருந்தாலும் ஆங்கிலம் அறிந்தால் மட்டுமே இவ்வறிவைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நிலையை மாற்றி தமிழிலேயே இவ்வறிவைத் தரும் முயற்சியே இக் கட்டுரைப் போட்டி. இத்தலைப்புகள் உங்களுக்கு ஆர்வமூட்டும் அதே வேளை சமூகத்துக்கும் பயனுடையதாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். இது வரை கிடைத்துள்ள தரவின் அடிப்படையில் இத்தலைப்புகளின் கீழ் எழுதப்படும் கட்டுரைகள் வழமையான கட்டுரைகளைக் காட்டிலும் சராசரியாக நான்கு மடங்கு வாசகர்களைப் பெற்றுத் தருவதை அறிய முடிகிறது. உங்கள் ஆர்வத்தின் அடிப்படையில் இவ்விரண்டு பட்டியல்களில் இருந்தும் கட்டுரைகளை எழுதலாம். இந்தக் கூட்டுழைப்பு நிச்சயம் ஒரு அறிவுச் சமூகமாக நம்மை அடுத்த தளத்துக்கு இட்டுச் செல்லும்.

வழமை போல் எத்தனையோ வகையான பங்களிப்புகளில் ஈடுபடும் தாங்கள், இப்போட்டியில் கலந்து கொண்டு இத்திட்டத்தை வெற்றியடையச் செய்வீர்கள் என்றால் அதன் விளைவுகள் மிகவும் தொலைநோக்கானவையாக அமையும். தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு எங்களுக்குக் கூடுதல் திட்டங்களைச் செயற்படுத்தித் தாருங்கள் என்று கேட்டு வாங்கும் வலுவான இடத்தில் நம்மை அமர்த்தும். இது வரை நான் இப்படி உங்களுக்குக் கடிதம் எழுதியது இல்லை. இப்போது எழுதுகிறேன் என்றால், கட்டுரைப் போட்டியில் உங்கள் பங்களிப்பு இப்போது தேவை என்று உரிமையோடு கேட்டுக் கொள்ளவே. ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின் தமிழ் விக்கிப்பீடியாவுக்குத் தக்க பங்களிப்பு அளிக்க விரும்புவீர்கள் எனில், இது ஒரு சரியான வாய்ப்பு. ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின் தமிழ் விக்கிப்பீடியாவில் மீண்டும் முனைப்பாக பங்களிக்க விரும்புவீர்கள் எனில், இது ஒரு நல்ல வாய்ப்பு.

இத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் தயங்காது கேளுங்கள்.

நன்றி.--இரவி (பேச்சு) 15:47, 24 மார்ச் 2018 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Karthickbala&oldid=3656269" இலிருந்து மீள்விக்கப்பட்டது