புவியீர்ப்பு முடுக்கம்
இயற்பியலில், ஈர்ப்பு முடுக்கம் அல்லது புவியீர்ப்பு முடுக்கம் (gravitational acceleration) என்பது இழுவை ஏதுமற்ற வெற்றிடம் ஒன்றில் ஒரு பொருள் வீழ்ச்சி அடையும் போது அப்பொருளில் ஏற்படும் முடுக்கம் ஆகும். இது ஈர்ப்பு விசையால் ஏற்படுத்தப்படும் ஒரு நிலையான வேக அதிகரிப்பாகும். பொருட்களின் திணிவுகள் அல்லது கலவைகளைப் பொருட்படுத்தாமல், அனைத்துப் பொருட்களும் ஒரே விகிதத்தில் வெற்றிடத்தில் முடுக்கி விடப்படுகின்றன.[1]
மேற்பரப்பில் ஒரு நிலையான புள்ளியில், புவியின் ஈர்ப்பின் அளவு புவியீர்ப்பு மற்றும் புவியின் சுழற்சியின் மையவிலக்கு விசை ஆகியவற்றின் ஒருங்கிணைந்த விளைவால் விளைகிறது.[2][3] பூமியின் மேற்பரப்பில் வெவ்வேறு புள்ளிகளில், குத்துயரம், நிலநேர்க்கோடு, நிலநிரைக்கோடு ஆகியவற்றைப் பொறுத்து சுயாதீன வீழ்ச்சி முடுக்கம் 9.764 முதல் 9.834 மீ/செ2 (32.03 முதல் 32.26 அடி/செ2) வரை இருக்கும்.[4] ஒரு வழக்கமான நிலையான மதிப்பு சரியாக 9.80665 மீ/செ2 (32.1740 அடி/செ2) என வரையறுக்கப்படுகிறது. இந்த மதிப்பிலிருந்து குறிப்பிடத்தக்க மாறுபாட்டின் இடங்கள் புவியீர்ப்பு முரண்பாடுகள் என அழைக்கப்படுகின்றன. மேலுதைப்பு அல்லது இழுவை போன்ற பிற விளைவுகள் இங்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.
உலகளாவிய விதியுடனான தொடர்பு
[தொகு]நியூட்டனின் உலகளாவிய ஈர்ப்பு விதி எந்த இரண்டு பொருட்களுக்கிடையேயும் ஒரு ஈர்ப்பு விசை உள்ளது என்று கூறுகிறது. இதன் சமன்பாடு பின்வருமாறு:
இங்கு , என்பன இரண்டு பொருட்களின் திணிவுகள் ஆகும், என்பது ஈர்ப்பியல் மாறிலி, என்பது அவற்றின் இடைத்தூரம்.
பூமி, சூரியன், நிலா மற்றும் கோள்களின் ஒப்பீட்டு ஈர்ப்பு
[தொகு]பொருள் | புவியின் ஈர்ப்பின் பெருக்கம் |
மீ/செ2 | அடி/செ2 | குறிப்புகள் | 100மீ வீழ்ச்சிக்கு எடுக்கும் நேரமும் அதிகபட்ச வேகமும் | |
---|---|---|---|---|---|---|
ஞாயிறு | 27.90 | 274.1 | 899 | 0.85 செ | 843 km/h (524 mph) | |
புதன் | 0.3770 | 3.703 | 12.15 | 7.4 செ | 98 km/h (61 mph) | |
வெள்ளி | 0.9032 | 8.872 | 29.11 | 4.8 செ | 152 km/h (94 mph) | |
புவி | 1 | 9.8067 | 32.174 | [a] | 4.5 செ | 159 km/h (99 mph) |
நிலா | 0.1655 | 1.625 | 5.33 | 11.1 செ | 65 km/h (40 mph) | |
செவ்வாய் | 0.3895 | 3.728 | 12.23 | 7.3 செ | 98 km/h (61 mph) | |
சியரீசு | 0.029 | 0.28 | 0.92 | 26.7 செ | 27 km/h (17 mph) | |
வியாழன் | 2.640 | 25.93 | 85.1 | 2.8 செ | 259 km/h (161 mph) | |
ஐஓ | 0.182 | 1.789 | 5.87 | 10.6 செ | 68 km/h (42 mph) | |
ஐரோப்பா | 0.134 | 1.314 | 4.31 | 12.3 செ | 58 km/h (36 mph) | |
கனிமீடு | 0.145 | 1.426 | 4.68 | 11.8 செ | 61 km/h (38 mph) | |
கலிசுட்டோ | 0.126 | 1.24 | 4.1 | 12.7 செ | 57 km/h (35 mph) | |
சனி | 1.139 | 11.19 | 36.7 | 4.2 செ | 170 km/h (110 mph) | |
டைட்டன் | 0.138 | 1.3455 | 4.414 | 12.2 செ | 59 km/h (37 mph) | |
யுரேனசு | 0.917 | 9.01 | 29.6 | 4.7 செ | 153 km/h (95 mph) | |
டைட்டானியா | 0.039 | 0.379 | 1.24 | 23.0 செ | 31 km/h (19 mph) | |
ஒபெரோன் | 0.035 | 0.347 | 1.14 | 24.0 செ | 30 km/h (19 mph) | |
நெப்டியூன் | 1.148 | 11.28 | 37.0 | 4.2 செ | 171 km/h (106 mph) | |
டிரைட்டன் | 0.079 | 0.779 | 2.56 | 16.0 செ | 45 km/h (28 mph) | |
புளூட்டோ | 0.0621 | 0.610 | 2.00 | 18.1 செ | 40 km/h (25 mph) | |
ஏரிசு | 0.0814 | 0.8 | 2.6 | (அண்ணளவு) | 15.8 செ | 46 km/h (29 mph) |
குறிப்புகள்
[தொகு]- ↑ This value excludes the adjustment for centrifugal force due to Earth's rotation and is therefore greater than the 9.80665 m/s2 value of திட்ட புவியீர்ப்பு முடுக்கம்.
- ↑ Gerald James Holton and Stephen G. Brush (2001). Physics, the human adventure: from Copernicus to Einstein and beyond (3rd ed.). Rutgers University Press. p. 113. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8135-2908-0.
- ↑ Boynton, Richard(2001). "Precise Measurement of Mass". {{{booktitle}}}, Arlington, Texas:S.A.W.E., Inc.. பரணிடப்பட்டது 2007-02-27 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Hofmann-Wellenhof, B.; Moritz, H. (2006). Physical Geodesy (2nd ed.). Springer. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-211-33544-4. § 2.1: "The total force acting on a body at rest on the earth’s surface is the resultant of gravitational force and the centrifugal force of the earth’s rotation and is called gravity."
{{cite book}}
: CS1 maint: postscript (link) - ↑ Hirt, C.; Claessens, S.; Fecher, T.; Kuhn, M.; Pail, R.; Rexer, M. (2013). "New ultrahigh-resolution picture of Earth's gravity field". Geophysical Research Letters 40 (16): 4279–4283. doi:10.1002/grl.50838. Bibcode: 2013GeoRL..40.4279H.