ஈர்ப்பியல் மாறிலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நியூட்டனுடைய ஈர்ப்பு பற்றிய விதியில் ஈர்ப்பியல் மாறிலி G ஒரு முக்கிய மாறிலியாகும்.

ஈர்ப்பியல் மாறிலி என்பது இரு பொருட்களுக்கிடையிலான ஈர்ப்பு விசையைக் கணிப்பிடுவதற்காகப் பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய இயற்பியல் மாறிலியாகும். இதனை G எனும் ஆங்கில எழுத்தால் குறிப்பர் (சிறிய ஜி g புவியீர்ப்பு ஆர்முடுகலைக் குறிக்கிறது.). ஈர்ப்பியல் மாறிலியின் அளவு கிட்டத்தட்ட 6.67×10−11 N·(m/kg)2 ஆகும்.

விதிகளில் பயன்பாடு[தொகு]

இரு பொருட்களுக்கிடையில் காணப்படும் ஈர்ப்பு விசையை அளப்பதற்கான சூத்திரத்தில் ஈர்ப்பியல் மாறிலி பயன்படுத்தப்படுகின்றது. இச்சூத்திரத்தில் m1, m2 என்பன இரு பொருட்களின் திணிவுகளைக் குறிக்கின்றன. r என்பது இரு பொருட்களுக்கிடையிலான தூரத்தையும், G என்பது ஈர்ப்பு மாறிலியையும் குறிக்கின்றது.

இம்மாறிலியை மிகத் துல்லியமாக இன்னமும் அளக்க முடியவில்லை. கிட்டத்தட்ட 1.2×10−4 எதிர்பார்க்கப்படும் வழுவோடு அளக்கப்பட்ட அளவீடு வருமாறு.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈர்ப்பியல்_மாறிலி&oldid=2226167" இருந்து மீள்விக்கப்பட்டது