புவனா நடராஜன்
புவனா நடராஜன், தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மொழிபெயர்ப்பாளரும் சிறுகதை எழுத்தாளருமாவார். கிட்டத்தட்ட இருபதிற்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்பு மற்றும் சிறுகதை புத்தகங்களை எழுதியுள்ள இவர், வங்க மொழியில் ஆஷாபூர்ணதேவி எழுதிய நாவலை 'முதல் சபதம்' என்ற பெயரில் மொழிபெயர்த்ததையடுத்து 2009 ம் ஆண்டில் சாகித்ய அகாடமி மொழிபெயர்ப்பு விருதினைப் பெற்றுள்ளார். [1] இவரது பல சிறுகதைகள் கல்கி, மங்கையர் மலர் , சாவி, சுமங்கலி, ஞான பூமி, இதயம் பேசுகிறது, கோகுலம் ஆகிய தமிழ் இதழ்களில் பல்வேறு காலகட்டங்களில் வெளிவந்துள்ளது. அவர் தமிழ், பெங்காலி, ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் படிக்கவும், எழுதவும், உரையாடவும் தெரிந்தவர் மற்றும் சமஸ்கிருதத்தில் பணிபுரியும் அறிவைப் பெற்றிருந்தார். நாற்பத்து மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக கல்கத்தாவிலும் பின்னர் சென்னையில் வாழ்ந்தார்.
1995 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில், பாரதி தமிழ்ச் சங்கம், கல்கத்தா சார்பில் பார்வையாளராகப் பங்கேற்றுள்ளார்.
விருதுகள்
[தொகு]- 2007 ஆம் ஆண்டிற்கான பெங்காலியிலிருந்து தமிழுக்கு சிறந்த மொழிபெயர்ப்புக்கான நல்லி திசை எட்டும் விருது;
- 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் தமிழ்ச் சங்க விருது;
- 2009 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி மொழிபெயர்ப்பு பரிசு - பெங்காலியிலிருந்து தமிழுக்கு (முதல் சபதம்) மொழிபெயர்ப்பதற்காக (ஆஷாபூர்ணா தேவியின் அசல் படைப்பு).[2]
படைப்புகள்
[தொகு]ஞானபீட விருது பெற்ற ஆஷாபூர்ணா தேவியால் பெங்காலி மொழியில் எழுதப்பட்ட முதல் சபதம் அல்லது ப்ரோதோம் ப்ரோதிஷ்ருதி (பெங்காலியில்), இதே புதினம் பின்னர் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டுள்ளது.
அசல் படைப்புகள்
[தொகு]- அன்னை தெரசா
- ராஜா ராம் மோகன் ராய்
- நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- வங்காள சிறுகதைகள் - சிறுகதைகள் ஆஷபூர்ணா தேவி
- சோழ மண்ணைத்தேடி – தஸ்லிமா நஸ்ரீன்
- கான தேவதா – தாராசங்கர் பந்தோபாத்யாய் (ஞானபீட விருது பெற்றவர்)
- தேவதாஸ் – சரத் சந்திர சாட்டர்ஜி
- அந்தக்காலம் – சுனில் கங்கோபாத்யாய்
- ஜக்மோஹனின் மரனம் – மஹாஸ்வேதா தேவி
- கருப்பு சூரியன் - ஆஷபூர்ணா தேவி
- தர்மமும் அதர்மமும் - பல்வேறு (சிறுகதைத் தொகுப்பு)
- என் தாய்க்கு என் கடைசி நமஸ்காரங்கள் - சந்தோஷ் குமார் கோஷ்
- போரட்டம் - சுனில் கங்கோபாத்யாய்
- வங்க மொழி சிறுகதைத்தொகுப்பு - பிபூதிபூஷண் பந்தோபாத்யாய்
- ஓரு ஒலியின் மரணம் - பல்வேறு (சிறுகதைத் தொகுப்பு)
- மகிசம்னு மானம் - பல்வேறு (சிறுகதைத் தொகுப்பு)
- கணதேவதா - தாராசங்கர் பந்தோபாத்யாய்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Grand culmination". The Hindu. 19 March 2010. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/Grand-culmination/article15693608.ece. பார்த்த நாள்: 2018-03-02.
- ↑ http://tamilonline.com/thendralnew/auth.aspx?aid=6927&p=f