ஆஷாபூர்ணா தேவி
ஆஷாபூர்ணா தேவி আশাপূর্ণা দেবী | |
---|---|
பிறப்பு | 8 சனவரி 1909 கொல்கத்தா |
இறப்பு | 12 சூலை 1995 (அகவை 86) கொல்கத்தா |
சிறப்புப் பணிகள் | Prothom Protishruti |
பாணி | புனைகதை |
விருதுகள் | ஞானபீட விருது |
ஆஷாபூர்ணா தேவி (பெங்காலி: আশাপূর্ণা দেবী ), புகழ்பெற்ற பெங்காலி நாவலாசியரும் கவிஞரும் ஆவார். இவர் 1909 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் நாள் கொல்கத்தாவில் பிறந்தார். 1976 ஆம் ஆண்டு ஞானபீட விருதும் பத்ம ஸ்ரீ விருதும் பெற்றார். இவர் எழுதிய பல்வேறு நூல்கள் குழந்தைகள், ஆண்- பெண் சமத்துவம் பற்றியே இருந்தது. 1995 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 13 ஆம் நாள் மறைந்தார்.
சுயசரிதை
[தொகு]வைதீகக் குடும்பத்தில் பிறந்த அவர் பள்ளிக்குச் சென்று படிக்கவில்லை. தனி ஆசிரியர்கள் வீட்டிற்கே வந்து அவருடைய சகோதரர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தனர். அதைப் பார்த்து கற்றுக்கொண்டார். அவர் தந்தை ஒரு ஓவியர். தாயார் புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் கொண்டவர். இதனால் ஆஷாபூர்ணா கதைகளையும், கவிதைகளையும் எழுத தூண்டியது. முறையான கல்வி இல்லாதவர். எனினும் இவர் புத்தகங்களைப் படித்து மிக பெரிய எழுத்தாளராக உருவானார். இவரின் படைப்புகள் விடுதலை புரட்சியை ஏற்படுத்தியது. 'வெளியிலிருந்து ஓர் அழைப்பு' என்ற பெயரில் தான் எழுதிய கவிதையைக் 'குழந்தைகள் நண்பன்' என்ற இதழுக்கு அனுப்பினார். அக்கவிதையின் மூலம் அவருடைய எழுத்துக்கு அங்கீகாரம் கிடைத்த மகிழ்ச்சியில் நிறைய எழுத ஆரம்பித்தார். திருமணத்திற்குப் பிறகு அவரால் எழுதும் வாய்ப்பு கிட்டவில்லை. பின், 1927 இல் எழுத்து பணியைத் தொடங்கினார். வங்காளத்தின் மிகச்சிறந்த எழுத்தாளராகப் போற்றப்படும் ஆஷாபூர்ண 242 நாவல்கள், 3000 சிறுகதைகள், 62 குழந்தைகள் நூல்கள் என்று எண்ணிலடங்காத எழுத்துக்கு சொந்தக்காரர். குழந்தைகளுக்கான கதைகளுக்கே முக்கியத்துவம் கொடுத்தார். ஆஷா. பெரியவர்களுக்கு அவர் எழுதிய பல்வேறு கதைகளும் ஆண்- பெண் சமத்துவம் பற்றியே இருந்தது. 1976 இல் பூர்ணவுக்கு ஞானபீட விருதும், பத்ம ஸ்ரீ விருதும் பெற்றார்.
விருதுகள்
[தொகு]- ஞானபீட விருது, பத்மஸ்ரீ - 1976
- விஷ்வ பாரதி பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட டெசிகோட்டம் விருது - 1989
- சாகித்ய அகாதமி விருது - 1994