உள்ளடக்கத்துக்குச் செல்

சுனில் கங்கோபாத்யாயா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுனில் கங்கோத்யாயா
சுனில் கங்கோபாத்யாயா படிமம்
பிறப்பு(1934-09-07)செப்டம்பர் 7, 1934
பரீத்பூர், வங்காளம், பிரித்தானிய இந்தியா (தற்கால வங்காளதேசம்)
இறப்புஅக்டோபர் 23, 2012(2012-10-23) (அகவை 78)
கொல்கத்தா, மேற்கு வங்காளம்
புனைபெயர்நீல் லோகித், சனாதன் பதக், மற்றும் நீல் உபாத்யாயா[1]
தொழில்எழுத்தாளர்
மொழிவங்காளம்
தேசியம்இந்தியன்
குடியுரிமைஇந்தியன்
கல்விமுதுகலை பட்டம் (வங்காள இலக்கியம்)
கல்வி நிலையம்கொல்கத்தா பல்கலைக்கழகம் (1954)
காலம்1953–2012
குறிப்பிடத்தக்க படைப்புகள்முதல் ஒளி (பிரதம ஆலோ), அந்த நாட்கள் (செய் சமோய்)
குறிப்பிடத்தக்க விருதுகள்ஆனந்தா புரஸ்கார் (1972, 1989)
சாகித்திய அகாதமி விருது (1985)
துணைவர்
சுவாதி பண்டோபாத்யாயா (தி. 1967)
பிள்ளைகள்சௌவிக் கங்கோபாத்யாயா (பி. 1967)

சுனில் கங்கோபாத்யாயா (Sunil Gangopadhyay) அல்லது சுனில் கங்குலி (வங்காளம்: সুনীল গঙ্গোপাধ্যায় Shunil Gônggopaddhae, செப்டம்பர் 7, 1934  அக்டோபர் 23, 2012[1][2][3]) ஓர் இந்திய வங்காள மொழிக் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார்.[4] தற்போது வங்காள தேசத்தில் உள்ள ஃபரீத்பூரில் பிறந்த கங்கோபாத்யாயா வங்காள இலக்கியத்தில் கொல்கத்தா பல்கலைக்கழகத்திலிருந்து முதுகலைப் பட்டம் பெற்றவர். 1953இல் தம்முடைய சில நண்பர்களுடன் கிருத்திபாஸ் என்ற வங்காள கவிதை இதழ் ஒன்றை துவக்கினார். பின்னர் பல்வேறு பிரசுரங்களுக்கு தமது ஆக்கங்களை எழுதியுள்ளார்.

காகாபாபு என்ற கற்பனை கதாபாத்திரத்தை உருவாக்கி பல புதினங்களை தொடர்ந்து எழுதினார்; இத்தொடர்கள் சிறுவர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றன. அந்த நாட்கள் (செய் சமோய்) என்ற தமது புதினத்திற்கு 1985ஆம் ஆண்டில் சாகித்திய அகாதமி விருது பெற்றார்.[5] நீல் லோகித், சனாதன் பதக், மற்றும் நீல் உபாத்யாயா என்ற புனைபெயர்களில் அவர் எழுதி வந்தார்.[1]

சான்றுகள்

[தொகு]
  1. 1 2 3 "Bengali writer Sunil Gangopadhyay dies of a heart attack at 78". IBNLive. 23 October 2012 இம் மூலத்தில் இருந்து 23 அக்டோபர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121023225503/http://ibnlive.in.com/news/bengali-writer-sunil-gangopadhyay-dies-of-a-heart-attack-at-78/301744-40-103.html. பார்த்த நாள்: 23 October 2012.
  2. "Eminent Bengali writer Sunil Gangopadhyay passes away". Bengal Newz. 2008-02-20. Archived from the original on 2025-08-18. Retrieved 2012-10-23.
  3. "Eminent litterateur Sunil Gangopadhyay passes away at his Kolkata residence". Retrieved 23-10-2012. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "Sunil Gangopadhyay". LIbrary of Congress. Retrieved 23 October 2012.
  5. Ruth Vanita; Saleem Kidwai (22 September 2001). Same-Sex Love in India: Readings from Literature and History. Palgrave Macmillan. pp. 336–. ISBN 978-0-312-29324-6. Retrieved 23 October 2012.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுனில்_கங்கோபாத்யாயா&oldid=4586952" இலிருந்து மீள்விக்கப்பட்டது