உள்ளடக்கத்துக்குச் செல்

புள்ளி மார்பு மரங்கொத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புள்ளி மார்பு மரங்கொத்தி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
பிசிபார்மிசு
குடும்பம்:
பேரினம்:
டென்ட்ரோகோபோசு
இனம்:
டெ. அனலிசு
இருசொற் பெயரீடு
டென்ட்ரோகோபோசு அனலிசு
(போனபர்தே, 1850)

புள்ளி மார்பு மரங்கொத்தி (Freckle-breasted woodpecker)(டென்ட்ரோகோபோசு அனலிசு) என்பது பிசிடே குடும்பத்தில் உள்ள ஒரு மரங்கொத்திப் பறவை சிற்றினம் ஆகும்.[2] இது இந்தோனேசியா, லாவோஸ், மியான்மர், தாய்லாந்து, கம்போடியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது.[3]

சமனேயா சமனின் கிளைகளில் உணவு தேடும் புள்ளி மார்பு மரங்கொத்தி. செமராங், இந்தோனேசியா.

விளக்கம்

[தொகு]

புள்ளி மார்பு மரங்கொத்தி, நடுத்தர அளவிலான, மரங்கொத்திப் பறவையாகும். இதன் மேல் பகுதி கருப்பாகவும், வெண்ணிறப் பெரிய பட்டைகளுடனும் காணப்படும். வாலின் கீழ்ப்பகுதி சிவப்பு நிறத்திலும், மார்பக மற்றும் வயிறு பக்க கோடுகளுடன் பட்டைகளுடன் காணப்படும். வெண்ணிற கன்னங்களில் ஓரளவிற்குக் கறுப்பு கோடுகள் விளிம்பில் காணப்படும். ஆரஞ்சு நிற நெற்றியுடன் கூடிய ஆணி பறவையில் சிவப்பு நிறக் கிரீடமும், பெண் பறவையில் இது கருப்பு நிறத்திலும் காணப்படும்.

வாழ்விடம்

[தொகு]

புள்ளி மார்பு மரங்கொத்தியின் இயற்கையான வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல உலர் காடுகள், மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ்நில காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 BirdLife International (2016). "Dendrocopos analis". IUCN Red List of Threatened Species 2016: e.T22726384A94920664. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22726384A94920664.en. https://www.iucnredlist.org/species/22726384/94920664. பார்த்த நாள்: 20 November 2021. 
  2. Fuchs, Jérôme; Ohlson, Jan I.; Ericson, Per G. P.; Pasquet, Eric (2007). "Synchronous intercontinental splits between assemblages of woodpeckers suggested by molecular data". Zoologica Scripta 36 (1): 11–25. doi:10.1111/j.1463-6409.2006.00267.x. பன்னாட்டுத் தர தொடர் எண்:0300-3256. 
  3. Sivaperuman, C.; Venkataraman, K. (2012). "Abundance and Species Distribution of Bird Communities in Ritchie's Archipelago, Andaman and Nicobar Islands". In Venkataraman, K.; Raghunathan, C.; Sivaperuman, C. (eds.). Ecology of Faunal Communities on the Andaman and Nicobar Islands. Berlin, Germany: Springer-Verlag. pp. 273–288. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1007/978-3-642-28335-2_18. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-642-28334-5.