உள்ளடக்கத்துக்குச் செல்

புத்தேரி

ஆள்கூறுகள்: 8°13′00″N 77°25′58″E / 8.216800°N 77.432900°E / 8.216800; 77.432900
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புத்தேரி
Putheri
புத்தேரி Putheri is located in தமிழ் நாடு
புத்தேரி Putheri
புத்தேரி
Putheri
புத்தேரி, நாகர்கோவில் (தமிழ்நாடு)
ஆள்கூறுகள்: 8°13′00″N 77°25′58″E / 8.216800°N 77.432900°E / 8.216800; 77.432900
நாடு இந்தியா
மாநிலம்Tamil Nadu தமிழ்நாடு
ஏற்றம்
49 m (161 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
629 001
தொலைபேசி குறியீடு+914652xxxxxx
வாகனப் பதிவுTN-74 yy xxxx
அருகிலுள்ள ஊர்கள்நாகர்கோவில், பூதப்பாண்டி, தோவாளை, இறச்சகுளம், திருப்பதிசாரம், தேரேகால்புதூர் மற்றும் வடசேரி
மாநகராட்சிநாகர்கோவில் மாநகராட்சி
மக்களவைத் தொகுதிகன்னியாகுமரி மக்களவைத் தொகுதி
சட்டமன்றத் தொகுதிநாகர்கோவில் (சட்டமன்றத் தொகுதி)
மக்களவை உறுப்பினர்விஜய் வசந்த்
சட்டமன்ற உறுப்பினர்எம். ஆர். காந்தி
இணையதளம்https://kanniyakumari.nic.in

புத்தேரி (ஆங்கில மொழி: Putheri) என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1][2] காலஞ்சென்ற கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் மனைவி புத்தேரி ஊரைச் சேர்ந்தவர்.[3]

கடல் மட்டத்திலிருந்து சுமார் 49 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள புத்தேரி பகுதியின் புவியியல் ஆள்கூறுகள், 8°13′00″N 77°25′58″E / 8.216800°N 77.432900°E / 8.216800; 77.432900 (அதாவது, 8°13'00.5"N, 77°25'58.4"E) ஆகும். நாகர்கோவில், பூதப்பாண்டி, தோவாளை, இறச்சகுளம், திருப்பதிசாரம், தேரேகால்புதூர் மற்றும் வடசேரி ஆகியவை புத்தேரி பகுதிக்கு அருகிலுள்ள முக்கிய புறநகர்ப் பகுதிகளாகும்.

போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, சுமார் ரூ. 21.40 கோடியில், புத்தேரியில் இரயில்வே மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டுள்ளது.[4]

புத்தேரியில் பெரிய குளம் ஒன்று உள்ளது. இதில் படகு சவாரி செய்யவும், இதன் கரையை அழகுபடுத்தி, நடைபாதை வசதிகள் ஏற்படுத்துதல், இருசக்கர வாகனங்கள் செல்ல வசதிகள் செய்தல் போன்ற சேவைகளை வழங்கி, நவீனப்படுத்தவும் மாநகராட்சி சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது.[5]

புத்தேரியிலுள்ள நயினார் யோகீஸ்வரமுடையார் கோயில்,[6][7] கிருஷ்ணசுவாமி கோயில்,[8] இரவி விநாயகர் கோயில்,[9] வீரகாளியம்மன் கோயில்,[10] மற்றும் மரகத விநாயகர் கோயில்[11] ஆகியவை தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகின்றன.

புத்தேரி பகுதியானது, நாகர்கோவில் (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். இதன் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக 2021-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றவர் எம்.ஆர். காந்தி ஆவார். மேலும் இப்பகுதி, கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி சார்ந்தது. இதன் மக்களவைத் தொகுதி உறுப்பினராக விஜய் வசந்த், 2019-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றார்.

மேற்கோள்கள்

[தொகு]
 1. Kisan World (in ஆங்கிலம்). Sakthi Sugars, Limited. 1994.
 2. மாலை மலர் (2022-10-07). "வடசேரி-புத்தேரி சாலையில் போக்குவரத்து மாற்றம் அமல்". www.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-02-06.
 3. தினத்தந்தி (2018-07-27). காலத்தை வென்ற கவிஞர் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை.
 4. "புத்தேரி ரயில்வே மேம்பாலம் கட்டுமானப் பணி". பார்க்கப்பட்ட நாள் 2023-02-07.
 5. தினத்தந்தி (2022-11-19). "புத்தேரி பெரிய குளத்தில் படகு சவாரி விட ஏற்பாடு". www.dailythanthi.com. பார்க்கப்பட்ட நாள் 2023-02-06.
 6. "Arulmigu Nainar Yogeeswaramudaiyar Temple, Putheri - 629001, Kanyakumari District [TM038317].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-02-07.
 7. "Yogeeswarar Temple : Yogeeswarar Yogeeswarar Temple Details". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-02-06.
 8. "Arulmigu Krishnaswamy Temple, Putheri - 629001, Kanyakumari District [TM038315].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-02-07.
 9. "Arulmigu Iravi Vinayagar Temple, Putheri, Nagercoil - 629002, Kanyakumari District [TM038450].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-02-07.
 10. "Arulmigu Veerakaliamman Temple, Putheri - 629001, Kanyakumari District [TM041949].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-02-07.
 11. "Arulmigu Maragatha Vinayagar Temple, Putheri - 629001, Kanyakumari District [TM041991].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-02-07.

வெளி இணைப்பு

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=புத்தேரி&oldid=3860051" இலிருந்து மீள்விக்கப்பட்டது