இறச்சகுளம்

ஆள்கூறுகள்: 8°13′45″N 77°25′50″E / 8.229100°N 77.430600°E / 8.229100; 77.430600
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இறச்சகுளம்
Erachakulam
புறநகர்ப் பகுதி
இறச்சகுளம் Erachakulam is located in தமிழ் நாடு
இறச்சகுளம் Erachakulam
இறச்சகுளம்
Erachakulam
ஆள்கூறுகள்: 8°13′45″N 77°25′50″E / 8.229100°N 77.430600°E / 8.229100; 77.430600
நாடு இந்தியா
மாநிலம்Tamil Nadu தமிழ்நாடு
ஏற்றம்55 m (180 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்629 902
தொலைபேசிக் குறியீடு+914652xxxxxx
வாகனப் பதிவுTN-74 yy xxxx
அருகிலுள்ள ஊர்கள்நாகர்கோவில், பூதப்பாண்டி, தோவாளை, புத்தேரி, திருப்பதிசாரம், தேரேகால்புதூர் மற்றும் வடசேரி
மாநகராட்சிநாகர்கோவில் மாநகராட்சி
மக்களவைத் தொகுதிகன்னியாகுமரி மக்களவைத் தொகுதி
மக்களவை உறுப்பினர்விஜய் வசந்த்
இணையதளம்https://kanniyakumari.nic.in

இறச்சகுளம் (ஆங்கில மொழி: Erachakulam) என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1][2][3]

கடல் மட்டத்திலிருந்து சுமார் 55 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இறச்சகுளம் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள், 8°13′45″N 77°25′50″E / 8.229100°N 77.430600°E / 8.229100; 77.430600 (அதாவது, 8°13'44.8"N, 77°25'50.2"E) ஆகும். நாகர்கோவில், பூதப்பாண்டி, தோவாளை, புத்தேரி, திருப்பதிசாரம், தேரேகால்புதூர் மற்றும் வடசேரி ஆகியவை இறச்சகுளம் பகுதிக்கு அருகிலுள்ள முக்கிய புறநகர்ப் பகுதிகளாகும்.

இறச்சகுளம் பகுதியில் அமிர்தா கல்வி நிறுவனங்களின் ஓர் அலகான அமிர்தா பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி அமைந்துள்ளது.[4] இறச்சகுளம் பகுதியில் அரசினர் உயர்நிலைப் பள்ளி ஒன்று உள்ளது. இப்பள்ளியில், 2023-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ஆம் நாள், அப்பகுதியிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலுமுள்ள இயலாக் குழந்தைகளின் நலனுக்காக மருத்துவ முகாம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.[5]

இறச்சகுளம் பகுதியில் அமைந்துள்ள சந்தனமாரியம்மன் கோயில், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது.[6] மேலும், உதய மார்த்தாண்டேஸ்வரர் கோயில், முப்பிடாதியம்மன் கோயில், அழகிய மன்னார்சாமி கோயில் ஆகியவை இங்குள்ள முக்கியமான கோயில்களாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Palanithurai, G.; Ragupathy, Varadarajan (2006) (in en). Functional Efficiency of Gram Sabha in Tamil Nadu. Concept Publishing Company. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-8069-254-3. https://books.google.co.in/books?id=FhePM613xGkC&pg=PA67&dq=Erachakulam&hl=en&newbks=1&newbks_redir=0&source=gb_mobile_search&ovdme=1&sa=X&ved=2ahUKEwiG76bru_v8AhXbwTgGHeFHBEMQ6AF6BAgCEAM#v=onepage&q=Erachakulam&f=false. 
  2. India. Director of Census Operations, Tamil Nadu (1972) (in en). District Census Handbook. Series 19: Tamil Nadu: Kanyakumari. https://books.google.co.in/books?id=ohNSAQAAMAAJ&q=Erachakulam&dq=Erachakulam&hl=en&newbks=1&newbks_redir=0&source=gb_mobile_search&ovdme=1&sa=X&ved=2ahUKEwiG76bru_v8AhXbwTgGHeFHBEMQ6AF6BAgHEAM#Erachakulam. 
  3. Madras (India : State) (1964) (in en). Fort Saint George Gazette. https://books.google.co.in/books?id=cgt-SqH3YxUC&q=Erachakulam&dq=Erachakulam&hl=en&newbks=1&newbks_redir=0&source=gb_mobile_search&ovdme=1&sa=X&ved=2ahUKEwiG76bru_v8AhXbwTgGHeFHBEMQ6AF6BAgIEAM#Erachakulam. 
  4. "Amrita Institutions". www.amrita.edu.in. பார்க்கப்பட்ட நாள் 2023-02-06.
  5. மாலை மலர் (2023-01-27). "இயலாக் குழந்தைகளின் நலன் காக்க சிறப்பு மருத்துவ முகாம்கள்". www.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-02-06.
  6. "Arulmigu Sandhanamariamman Temple, Pechankulam, Erachakulam - 629902, Kanyakumari District [TM042089].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-02-06.

வெளி இணைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இறச்சகுளம்&oldid=3710434" இலிருந்து மீள்விக்கப்பட்டது