உள்ளடக்கத்துக்குச் செல்

பில்லி சுபாசு சந்திர போசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பில்லி சுபாசு சந்திர போசு
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை
பதவியில் உள்ளார்
பதவியில்
20 ஜூன் 2020
தொகுதிஆந்திரப் பிரதேசம்
ஆந்திராவின் ஆறாவது துணை முதல்வர்
பதவியில்
8 ஜூன் 2019 – 19 ஜூன் 2020
துறைகள்வருவாய், பதிவு மற்றும் முத்திரைத் துறை
முன்னையவர்க. எ. கிருட்டிணமூர்த்தி, TDP
பின்னவர்தர்மன்னா கிருட்டிண தாசு
சமூக நலன்
பதவியில்
2007–2009
ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவையின் தலைவர்
பதவியில்
12 ஜூன் 2019 – 19ஜூன் 2020
முன்னையவர்எனமாலா ராம கிருஷ்ணுடு, தெலுங்கு தேசம் கட்சி
சட்டமன்ற உறுப்பினர்
for ராமசந்திராபுரம்
பதவியில்
2009–2012
முன்னையவர்தோட்டா திரிமூர்த்துலு
ராமசந்திராபுரம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2004–2009
முன்னையவர்தோட்டா திரிமூர்த்துலு
ராமசந்திராபுரம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1989–1994
முன்னையவர்மேதிசேட்டி வேர வெங்க ராமராவ்
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
இந்திய தேசிய காங்கிரசு (2013 க்கு முன்னர்)
வேலைஅரசியல்வாதி

பில்லி சுபாசு சந்திர போசு (Pilli Subhash Chandra Bose) ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக 2020 மாநிலங்களவைத் தேர்தலில் ஆந்திரப் பிரதேசத்திலிருந்துஇந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [1] [2]

ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வராகவும்]] பதவி வகித்தார். மேலும், ஆந்திர பிரதேச சட்ட மேலவை உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

அரசியல் வாழ்க்கை[தொகு]

ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் ராமசந்திராபுரம் சட்டப் பேரவைத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். எ. சா. ராஜசேகர் ரெட்டியின் குடும்பத்திற்கு விசுவாசமாக இருந்தார். [3]

ராஜசேகர ரெட்டியின் அமைச்சரவையில் இரண்டு முறை அமைச்சராகவும், முன்னாள் முதல்வர் கொனியேட்டி ரோசையாவின் அமைச்சரவையில் ஒருமுறை அமைச்சராகவும் இருந்துள்ளார். ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியில் சேர இவர் ராமச்சந்திரபுரத்தில் இருந்து உறுப்பினர் பதவியையும், அமைச்சரவையிலிருந்தும் வெளியேறினார். [4]

2019 ஆம் ஆண்டில், ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அமைச்சரவையில் ஆந்திரப் பிரதேசத்தின் ஐந்து துணை முதலமைச்சர்களில் ஒருவரானார். மேலும் இவருக்கு வருவாய், பதிவு மற்றும் முத்திரைத் துறை அமைச்சராகவும் பொறுப்பு வழங்கப்பட்டது. [5] [6]

ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவையை ரத்து செய்ய ஆந்திரப் பிரதேச அரசு முடிவெடுத்த பிறகு, ஆந்திரப் பிரதேச சட்ட மேலவை உறுப்பினராக இருந்ததால் இவரை மாநிலங்களவைக்கு அனுப்ப கட்சி முடிவு செய்தது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Parimal Nathwani among four elected to Rajya Sabha from Andhra Pradesh on YSR Congress tickets". P Pavan. Mumbai Mirror. 20 June 2020. பார்க்கப்பட்ட நாள் 20 June 2020.
  2. "All four Rajya Sabha seats in Andhra Pradesh go to YSRC while TDP secures just 17 votes". The New Indian Express. 20 June 2020. பார்க்கப்பட்ட நாள் 20 June 2020.
  3. PILLI SUBHASH CHANDRA BOSE. National Election Watch
  4. Andhra Pradesh Know Your Minister: Pilli Subhash Chandrabose. Sakshi. 8 June 2019.
  5. "Andhra Pradesh Ministers: Portfolios and profiles" (in en-IN). 8 June 2019. https://www.thehindu.com/news/national/andhra-pradesh/andhra-pradesh-ministers-portfolios-and-profiles/article27698301.ece. 
  6. Jagan Reddy appoints Dalit woman as home minister of Andhra Pradesh. Hindustan Times. 8 June 2019.