அல்லா நானி
அல்லா நானி | |
---|---|
ஆந்திரப் பிரதேசத்தின் மூன்றாவது துணை முதல்வர் | |
பதவியில் 8 ஜூன் 2019 – 7 ஏப்ரல் 2022 | |
முன்னையவர் | என். சின்ன ராஜப்பா
க. எ. கிருட்டிணமூர்த்தி |
பின்னவர் | புட்டி முத்யாலா நாயுடு |
ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 23 மே 2019 | |
முன்னையவர் | படேட்டி புச்சி |
தொகுதி | ஏலூர் சட்டமன்றத் தொகுதி |
பதவியில் 2009–2014 | |
தொகுதி | ஏலூர் சட்டமன்றத் தொகுதி |
பதவியில் 2004–2009 | |
முன்னையவர் | அம்பிகா |
தொகுதி | ஏலூர் சட்டமன்றத் தொகுதி]] |
ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை | |
பதவியில் 2017–2019 | |
தொகுதி | சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்தெடுக்கப்பட்டவர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | அல்லா காளி கிருஷ்ண சிறீநிவாசன் திசம்பர் 30, 1969 |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி ( 2013 முதல்) |
பிற அரசியல் தொடர்புகள் | இந்திய தேசிய காங்கிரசு (2013க்கு முன்னர்) |
அல்லா காளி கிருஷ்ண சிறீநிவாசன் [1] (Alla Kali Krishna Srinivas) அல்லது அல்லா நானி என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியாவார். இவர், ஆந்திரப் பிரதேசத்தின் துணை முதலமைச்சராக இருந்துள்ளார்.
அரசியல் வாழ்க்கை
[தொகு]இந்திய தேசிய காங்கிரசு கட்சி உறுப்பினராக 2004 - 2013 க்கு இடையில் ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைக்கு ஏலூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து உறுப்பினராகத் தேர்தெடுக்கப்பட்டார். பின்னர் 2013 இல் காங்கிரசு கட்சியிலிருந்து வெளியேறி உறுப்பினர் பதவியை விட்டு விலகி ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். 2014 தேர்தலில் கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2017 இல் சட்டப் பேரவை மேலவை உறுப்பினரானார். 2019 தேர்தலில் ஏலூர் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு,[2] மீண்டும் சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் இவர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஆந்திர அமைச்சரவையில் துணை முதலமைச்சராகவும், சுகாதாரம் மற்றும் குடும்ப நலம், மருத்துவக் கல்வி அமைச்சராகவும் ஆனார். [3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Andhra Pradesh: Most deaths in Jangareddygudem due to natural reasons, says Jagan" (in en-IN). தி இந்து. 14 March 2022. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/news/national/andhra-pradesh/andhra-pradesh-most-deaths-in-jangareddygudem-due-to-natural-reasons-says-jagan/article65224203.ece.
- ↑ Special Correspondent (2012-06-01). "States / Andhra Pradesh : Nani quits seat, three MLAs meet Vijayamma". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2013-01-16.
- ↑ "Andhra Pradesh Ministers: Portfolios and profiles". 8 June 2019. https://www.thehindu.com/news/national/andhra-pradesh/andhra-pradesh-ministers-portfolios-and-profiles/article27698301.ece. பார்த்த நாள்: 15 April 2022.