பிரபா ராவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பிரபா ராவ்
பிரபா ராவ் - வாசு
இராஜஸ்தான் ஆளுநர்களின் பட்டியல்
பதவியில்
2 திசம்பர் 2009 – 26 ஏப்ரல் 2010
முன்னவர் சைலேந்திர குமார் சிங்
பின்வந்தவர் சிவ்ராஜ் பாட்டீல்
இமாச்சலப் பிரதேசத்தின் 14ஆம் ஆளுநர்
பதவியில்
19 சூலை 2008 – 24 சனவரி 2010
முன்னவர் விஷ்ணு சதாசிவ் கோக்ஜே
பின்வந்தவர் ஊர்மிளா சிங்
தனிநபர் தகவல்
பிறப்பு மார்ச்சு 4, 1935(1935-03-04)
இறப்பு 26 ஏப்ரல் 2010(2010-04-26) (அகவை 75)
இருப்பிடம் செய்ப்பூர், ராஜஸ்தான்
சமயம் இந்து

பிரபா ராவ் (4 மார்ச் 1935 - 26 ஏப்ரல் 2010) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். தான் இறக்கும் போது ராஜஸ்தான் மாநில ஆளுநராக இருந்தார். சிம்லாவில் 25 சனவரி 2010 அன்று ஊர்மிளா சிங் பொறுப்பேற்ற பின்னர் இமாச்சலப் பிரதேச ஆளுநரிடமிருந்து இடமாற்றம் செய்யப்பட்ட பின்னர் இவர் ராஜஸ்தான் ஆளுநராக நியமிக்கப்பட்டார். [1] ஆரம்பத்தில் ராஜஸ்தான் ஆளுநர் எஸ். கே. சிங் இறந்ததைத் தொடர்ந்து,இவருக்கு ராஜஸ்தான் ஆளுநராக கூடுதல் பொறுப்பு கிடைத்தது, இமாச்சல பிரதேச ஆளுநரின் பொறுப்பும் கிடைத்தது. [2] இவர் 2008 சூலை 19 முதல் இமாச்சல பிரதேசத்தின் ஆளுநராக இருந்தார். இவர், மகாராட்டிரா காங்கிரசு கமிட்டியின் முன்னாள் தலைவராகவும் இருந்தார். இவர் வர்தாவைச் சேர்ந்தவர் ஆவார். இவருக்கு அருண் வாசு என்ற சகோதரர் உள்ளார்.

இவர் மகாராஷ்டிராவில் உள்ள வர்தாவிலிருந்து (மக்களவைத் தொகுதி) தேர்ந்தெடுக்கப்பட்டார். [3] 1972 ஆம் ஆண்டில் புல்கானில் இருந்து முதல் முறையாக மகாராட்டிரா சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவர் ஒரு முன்னாள் விளையாட்டு வீரர் மற்றும் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், தடைகள், தட்டு எறிதல் மற்றும் ஓட்டப்பந்தயத்தில் மகாராட்டிரா மாநிலம் சார்பாக விளையாடியிருந்தார். இவர் ஒரு இசைக்கலைஞராகவும் இருந்தார், மேலும் அரசியல் மற்றும் இசையில் முதுகலைப் பட்டம் பெற்றிருந்தார்.

புது தில்லியில் உள்ள ஜோத்பூர் வீட்டில் மாரடைப்பால் பிரபா ராவ் 26 ஏப்ரல் 2010 அன்று இறந்தார். இறக்கும் தருவாயில் ராஜஸ்தானின் இரண்டாவது ஆளுநராக இருந்தார். [4]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரபா_ராவ்&oldid=3077996" இருந்து மீள்விக்கப்பட்டது