பியர் கிரில்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எட்வர்ட் மைக்கெல் கிரில்ஸ்
Bear Grylls 2.jpg
பிறப்பு7 சூன் 1974 (1974-06-07) (அகவை 48)
வடக்கு அயர்லாந்து
இருப்பிடம்தேம்ஸ் நதியில் உள்ள பாட்டர்சீ பாலத்திற்கு அருகில் மிதந்து கொண்டிருக்கும் ஒரு மிதவைப் படகு,[1] மற்றும் வடக்கு வேல்ஸில் உள்ள அபர்சாச்சுக்கு அருகில் லின் தீபகற்பத்தில் ஒரு தீவு[2]
பணிசாகசப் பயணி,
எழுத்தாளர்,
உற்சாகமூட்டும் பேச்சாளர்,
தொலைக்காட்சி தொகுப்பாளர்
தலைமை சாரணர்
பெற்றோர்சர் மைக்கெல் கிரில்ஸ்
அவரின் துணைவியார் (கன்னிப்பெயர் சாரா ஃபோர்டு)
வாழ்க்கைத்
துணை
ஷாரா கேன்னிங்ஸ் நைட்[3]
பிள்ளைகள்ஜெஸ்ஸி, மர்மடுகே,[4] மற்றும் ஹக்கிள்பெர்ரி[5]
வலைத்தளம்
BearGrylls.com

எட்வர்ட் மைக்கேல் கிரில்ஸ் , செல்லமாக பியர் என்றழைக்கப்படும் இவர், (ஜூன் 7, 1974 -இல் பிறந்தவர்). இவர் பிரிட்டன் நாட்டைச் சார்ந்தவர், சாகச விரும்பி, எழுத்தாளர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆவார். இவர் தன்னுடைய தொலைக்காட்சி தொடரான, பார்ன் சர்வைவர் என்பதன் மூலம் பிரபலமடைந்தார், அந்த நிகழ்ச்சி மேன் வெர்சஸ் வைல்ட் என்று அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் அறியப்படுகிறது. மிக இளவயதில் எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்ட பிரிட்டிஷ் நபர்களில் இவர் ஒருவராவார், இந்த சாதனையை 23 வயதில் செய்தார். ஜூலை 2009 -இல், தன்னுடைய 35 வயதில், தலைமை சாரணராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரே இதுவரையில் இந்த பதவியில் இருந்தவர்களில் மிக இளவயது நபராவார்.

சொந்த வாழ்க்கை[தொகு]

வடக்கு அயர்லாந்தில்[சான்று தேவை] உள்ள டோனாகாடீ என்ற இடத்தில் கிரில்ஸ் வளர்ந்தார், அவருக்கு நான்கு வயதானபோது, அவரின் குடும்பம் வீட் தீவில் உள்ள பெம்பிரிட்ஜ் என்ற இடத்திற்கு சென்றது.[6][7] கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த, காலஞ்சென்ற சர் மைக்கேல் கிரில்ஸ் மற்றுல் லேடி கிரில்ஸ் (கன்னிப்பெயர் சாரா ஃபோர்டு) ஆகியோருக்கு மகனாக பிறந்தார்.[8] இவருடைய தாய்வழி தாத்தா பாட்டிகளானோர் பேட்ரிஷியா ஃபோர்டு,[9] இவர் அல்ஸ்டர் யூனியனிஸ்ட் கட்சி எம்.பி ஆவார் மற்றும் நிவெல்லி ஃபோர்டு இவர் முதல்தர கிரிக்கெட் வீரர் ஆவார். இவருடைய ஒரே சகோதரி—இவருக்கு மூத்தவர், லாரா ஃபாசெட், இவர் கார்டியோ டென்னிஸ் கோச்சாக இருக்கிறார். வில் ஃபெர்ரல் என்ற ஹாலிவுட் நடிகர் தோன்றிய ஒரு மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியின் ஒரு அத்தியாயத்தில், தன் சகோதரி ஒரு வாரக் குழந்தையாக இருந்தபோதே தன்னை "கரடி(பியர்)" என்று புனைப்பெயரைத் தனக்கு தந்ததாக கூறினார்.

ஈட்டன் ஹவுஸைச் சேர்ந்த, லுட்க்ரோவ் பள்ளி, ஈட்டன் கல்லூரி ஆகியவற்றில் கல்வி பயின்றார், மற்றும் பிர்க்பெக், லண்டன் பல்கலைக்கழகத்தில்,[10] பட்டம் பெற்றார், பின்னர் 2002 -ஆம் ஆண்டில் ஹிஸ்பானிக் படிப்பை பகுதிநேரமாக படித்து வந்தார். சிறுவயதிலேயே தன்னுடைய தந்தையிடமிருந்து, மரமேறுவதற்கும் மற்றும் படகில் செல்லவும் கற்றுக்கொண்டார். பதின்பருவத்தினராக இருந்தபோது, ஷாடோகான் கராத்தேவில் டான் ப்ளாக்பெல்டைப் பெற்றார். தற்போது அவர் யோகா மற்றும் நிஞ்சுட்சூ ஆகியவற்றைப் பயிற்சி செய்து வருகிறார். ஒரு சிறுவயது சாரணணாக எட்டு வயதிலேயே சாரணர் இயக்கத்தில் சேர்ந்தார்.[11] ஆங்கிலம், ஸ்பானிஷ், ஃபிரஞ்சு ஆகிய மொழிகளைப் பேசக்கூடியவர்.[12] கிரில்ஸ் ஒரு கிறிஸ்தவர், தன்னுடைய வாழ்க்கையின் "முதுகெலும்பே" அவருடை மத நம்பிக்கைதான் என்று கூறுவார்.[12]

ஷாரா கிரில்ஸை (கன்னிப்பெயர் கேன்னிங்ஸ் நைட்) 2000 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார்.[3][9] அவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர்: ஜெஸ்ஸீ, மராமடுகே,[13] மற்றும் ஹக்கிள்பெர்ரி (இந்த குழந்தை ஜனவரி 15, 2009 இல் அவருடைய ஹவுஸ்போட்டில் இயற்கையான குழந்தைப்பிறப்பின் மூலமாக பிறந்தது).[5]

டிசம்பர் 2008 -இல், அண்டார்டிகாவில் உள்ள ஒரு பெயரற்ற சிகரத்தில் ஏற முயற்சித்தபோது, பெரிய பனிக்கட்டியைக் கடக்க முயற்சித்தபோது, கைட் ஸ்கீயிங்கில் கிரில்ஸின் தோள்பட்டை எலும்பு உடைந்தது. மணிக்கு 50 கிமீ (30மைல்) வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்தபோது, ஒரு ஸ்கீயானது பனிக்கட்டியில் மோதியது, இதனால் அவர் வானத்தில் தூக்கி எறியப்பட்டு, கீழே விழுந்தபோது தோள்பட்டை எலும்பு உடைந்தது.[14]

துணை ராணுவ சேவை[தொகு]

பள்ளிக்கல்வி முடிந்தவுடன், கிரில்ஸ் இந்திய ராணுவத்தில்[15] சேரவேண்டும் என்று நினைத்தார், இதற்காகவே அவர் பல மாதங்கள் சிக்கிம் மற்றும் மேற்கு வங்காளம், அஸ்ஸாம் போன்ற மாநிலங்களில் இமயமலைகளில் ஹைக்கிங் செய்து வந்தார். 1994 முதல் 1997 வரை, யுனைடெட் கிங்டம் சிறப்பு படைகள் தேர்வில் தேர்வு பெற்றவுடன், பகுதி நேரமாக யுனைடெட் கிங்டம் சிறப்பு படைகள் ரிசர்வ் படைகளில், 21 ரெஜிமண்ட் சிறப்பு வான் சேவை, 21 SAS(R), ட்ரூப்பர் ஆகவும், சர்வைவல் இன்ஸ்டரக்டராகவும், பேட்ரோல் மெடிக்காகவும் பணியாற்றி வந்தார்.[16] வட ஆப்பிரிக்காவில் இரண்டு முறை சேவையாற்றி உள்ளதாக இவர் கூறுகிறார்.[13] 1996 ஆம் ஆண்டில், இவர் கென்யாவில் ஃப்ரீஃபால் பாராசூட் நிகழ்ச்சியில் விபத்தைச் சந்தித்தார் . அவருடைய பாராசூட்டின் மேற்பகுதியானது, 1,600 அடியில் (500 மீ) கிழிந்து விட்டது, இதனால் ஒரு பகுதி திறந்து கொண்டு, அவரை கீழே விழ செய்தது, அவருடைய பாராசூட் அவர் மேல் விழுந்தது, இதனால் அவருடைய முதுகெலும்பில் மூன்று எலும்புகள் (vertebra) உடைந்தன.[17] இது பற்றி பின்னர் கிரில்ஸ் குறிப்பிட்டது: "நான் முதன்மை பாராசூட்டை துண்டித்து விட்டு ரிசர்வில் இருந்ததைப் பயன்படுத்தியிருக்க வேண்டும், ஆனால் பிரச்சனையை சரி செய்ய இன்னும் நேரமிருப்பதாக நினைத்துக் கொண்டேன்".[18] இவருக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவரின் கருத்துப்படி, கிரில்ஸ், வாழ்நாள் முழுவதும் முடமாக மாறுவதிலிருந்து "மயிரிழையில்" தப்பித்துள்ளார், நாங்கள் முதலில் இவரால் மீண்டும் நடக்க முடியுமா என்று சந்தேகப்பட்டோம் என்கிறார். அடுத்த 18 மாதங்கள் வரை, ஹெட்லி கோர்ட்டில்[18] உள்ள ராணுவ மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார், அங்கிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வெளியே வந்தவுடனே அவருடைய குழந்தைக் கால இலட்சியமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதற்கான முயற்சிகளில் ஈடுபடத் தொடங்கினார்.

முன்னாள் SAS ராணுவ வீரர் கிறிஸ் ரியான் என்பவர், ஆஃப்பிரிக்காவில், SAS நடவடிக்கையின் காரணமாக, கிரில்ஸ் தன்னுடைய முதுகெலும்பை உடைத்துக் கொண்டதை நம்பவில்லை என்றும், தன்னுடைய ராணுவ நடவடிக்கைகளைப் பற்றி கிரில்ஸ் மிகைப்படுத்தப்பட்ட கதைகளைக் கூறுகிறார் என்றும் கூறுகிறார். ரியான் கூறுவதாவது: "பியர் கிரில்ஸ் தன்னுடைய ஆஃப்பிரிக்க நடவடிக்கைகளைப் பற்றி தொடர்ந்து கூறிவருகிறார். அவர் ஒரு நடவடிக்கையின்போது, தன்னுடைய முதுகெலும்பை உடைத்துக் கொண்டதாக தொடர்ந்து கூறிவருகிறார், ஆனால் ஆஃப்பிரிக்காவில் அப்படி எந்த இடத்தில் அவ்வாறு ஒரு நடவடிக்கையில் ஈடுபட்டார் என்று எனக்கு தெரியவில்லை. ரெஜிமண்டில் செர்ஜண்ட் மேஜர்களாக உள்ள பல நபர்களோடும், ரெஜிமண்டல் SAS வழிகாட்டிகளாக இருப்போரிடமும் நான் பேசிவிட்டேன், ஆனால் அவர்களில் யாருக்கும் இந்த நடவடிக்கையைப் பற்றி தெரியவில்லை என்கிறார்கள்."[19]

2004 -ஆம் ஆண்டில், கிரில்ஸுக்கு ராயல் நேவல் ரிசர்வ் படைக்கு லெப்டினன்ட் கமாண்டராக கவுரவப் பதவி வழங்கப்பட்டது.[20]

எவரெஸ்ட்[தொகு]

மே 16, 1998 -இல், கிரில்ஸ் தன்னுடைய குழந்தைக்கால கனவை நிஜமாக்கினார் (எட்டு வயதில் அவருடைய தந்தை எவரெஸ்டின் படமொன்றை தந்தது முதல் இருந்து வந்த இலட்சியம்) மேலும் இந்த சாதனையைச் செய்யும் மிக இளவயது பிரிட்டோன் நபராகவும் தன்னுடைய 23 வயதில் இதை செய்தார், இதனை, தன்னுடைய முதுகெலும்பு உடைந்த பதினெட்டு மாதங்களுக்கு பிறகு செய்தார். ஆனாலும், ஜேம்ஸ் ஆலன் என்ற நபர், ஆஸ்திரேலியா/பிரிட்டிஷ் ஆகிய இருநாட்டின் குடியுரிமையையும் பெற்ற மலை ஏறுபவர், 1995 -இல் ஆஸ்திரேலிய குழுவுடன் சேர்ந்து, இந்த சாதனையை முறியடித்தார், அவர் 22 வயதில் இதனை செய்து முடித்தார்.[21] இந்த சாதனையானது, ஜேக் மேயர், மற்றும் 19 வயதில் ராப் கவுன்ட்லெட் ஆகியோரால் முறியடிக்கப்பட்டுள்ளது. 2001 -ஆம் ஆண்டில், நேபாள நாட்டைச் சேர்ந்த டெம்பா ட்ஷெரி என்பவர் இந்த சிகரத்தை 16 வயதில் எட்டிப்பிடித்தார்.

கிரில்ஸின் சாகசப்பயணத்தின்போது, கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் எவரெஸ்டின் தென்கிழக்கு பகுதியில் தங்கியிருந்தார்: அவருடைய முதல் தகவலறியும் பயணத்தின்போது, அவர் ஒரு மலைப்பிளவில் விழுந்து மயக்கமடையும் அளவுக்கு காயமுற்றார், அவருக்கு மீண்டும் நினைவு வந்தபோது, கயிறின் முனையில் தொங்கி கொண்டிருப்பதை அறிந்தார், பின்னர் பலவாரங்கள் பயிற்சியும் தட்பவெப்பத்துக்கு பழகிக்கொள்ளும் விதமுமாக தென் பகுதியில் ஏறி இறங்கி வந்து கொண்டிருந்தார். அதில் கும்பு என்ற பனிப்பொழிவு (உறைந்த ஆறு), மேற்கு பகுதியில் Cwm என்ற நகரும் பனிப்பாறை மற்றும் 5000 அடி உயரமான லோட்செ முகம் என்றழைக்கப்படும் பனிச்சுவர் ஆகியவற்றை அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இந்த மலையேறும் கடினப் பணிக்கு இவருடன் முன்னாள் SAS வீரர் நீல் லாஃப்டன் இருந்தார். பல மணிநேரம் இரவுகளில் மலையேறினார்கள், இதனால் மிக மோசமான வானிலை, சோர்வு, உடலில் நீரிழிப்பு, கடைசிநேர உடல்நலக்குறைபாடு, தூக்கமின்மை மற்றும் கிட்டத்தட்ட முற்றிலும் ஆக்சிஜன் இல்லாத சூழ்நிலை, கடல்மட்டத்தை விட மூன்றுமடங்கு ஆக்சிஜன் குறைவாக இருக்கும் மரணப் பகுதி (death zone) ஆகியவற்றை எதிர்கொண்டார்கள்.

இமய மலைகளின் அந்த உயரமான சிகரங்களில் ஏறுவதற்கு பயிற்சி பெற, 1997 -இல், கிரில்ஸ் அமா டாப்லாம் என்ற சிகரத்தில் ஏறினார், இதில் ஏறிய மிக இளவயது பிரிட்டோன் நபர் இவராவார். இந்த சிகரத்தை சர் எட்மண்ட் ஹிலாரி "ஏறமுடியாத சிகரம்" என்று குறிப்பிட்டிருந்தார்.

பிற சாகசப்பயணங்கள்[தொகு]

யுகேவை சுற்றி வருதல்[தொகு]

2000 -ஆம் ஆண்டில், தனிநபர் வாட்டர்கிராஃப்ட் அல்லது ஜெட் ஸ்கீ மூலமாக யுகேவைச் சுற்றிவரும் முதல் குழுவுக்கு கிரில்ஸ் தலைமை தாங்கினார், இதை செய்து முடிக்க சுமார் 30 நாட்களானது, ராயல் நேஷனல் லைஃப்போட் இன்ஸ்டிட்யூஷன் (RNLI) என்ற அமைப்புக்கு நிதி திரட்ட இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மலையேறும்போது ஏற்பட்ட விபத்து ஒன்றில் இரண்டு கால்களையும் இழந்த நண்பர் ஒருவருக்கு நிதிதிரட்டுவதற்காக, வீட்டில் உருவாக்கிய ஒரு பாத் டப்பின் மூலமாக தேம்ஸ் நதியில் 22 மைல்கள் தூரம் நிர்வாணமாக படகு வலித்து சென்றார்.[22]

வட அட்லாண்டிக் கடலைத் தாண்டுதல்[தொகு]

மூன்று ஆண்டுகளுக்கு பின்னர், அவர் ஐந்து பேர்களைக் கொண்ட ஒரு குழுவுக்கு தலைமை தாங்கி சென்று உதவி ஏதும் இல்லாமல் வட அட்லாண்டிக் ஆர்க்டிக் பெருங்கடலை ஒரு திறந்த உறுதியான இன்ஃப்ளாட்டபிள் படகில் தாண்டினார். இந்த குழுவில் இவருடைய பால்ய நண்பரும், SAS கூட்டாளியும் எவரெஸ்ட் சிகரத்துக்கு கூட மலையேறியவருமாகிய மிக் க்ரோஸ்வெயிட் என்பவரும் இருந்தார். ஃபோர்ஸ் 8 காலே காற்றுகள், ஹைப்போதெர்மியா, பனிப்பாறைகள் மற்றும் பனிப்புயல்கள் ஆகியவற்றை எதிர்த்து, பதினோரு மீட்டர் நீளமுள்ள படகில், உலகிலேயே மிகவும் ஆபத்தான கடல்பகுதிகளுக்குள் இவர்கள் சென்றனர். இதில் லேப்ரடார் கடல், டென்மார்க் ஜலசந்தி ஆகியவையும் அடங்கும். இந்த சாதனையானது தி பர்ஃபெக்ட் ஸ்ட்ரோம் என்பதால் பிரபலமாக்கப்பட்டது, கிரில்ஸ் மற்றும் அவருடைய குழுவினர் ஹாலிபேக்ஸ், நோவா ஸ்காட்டியா முதல் ஜான் ஓ க்ரோட்ஸ் என்ற ஸ்காட்லாந்தில் இருக்கும் இடம் வரை பயணம் செய்தனர். இந்த சாதனையின் காரணமாக இவருக்கு, ராயல் நேவியில் கவுரவ லெப்டினன்ட்-கமாண்டர் என்ற பதவி தரப்பட்டது.[சான்று தேவை]

ஏஞ்சல் அருவியில் பாராமோட்டாரிங்[தொகு]

2005 -இல், உலகிலேயே மிகவும் உயரமான அருவியான வெனிசுலாவில் உள்ள ஏஞ்சல் அருவியின் சமவெளி காடுகளை பாராமோட்டார் மூலம் முதன்முதலாக கடந்து செல்லும் குழுவுக்கு கிரில்ஸ் தலைமை வகித்தார். இந்த குழுவானது, மிகவும் உயரமான, மற்றும் இதுவரை யாரும் சென்றிடாத மலைமுகடுகளை எட்ட முயற்சி செய்தது.

உயரமான இடத்தில் இரவு உணவு பார்ட்டி[தொகு]

2005 ஆம் ஆண்டில், பலூனிஸ்ட்டும் மலையேறுபவருமான டேவிட் ஹெம்ப்ளெமேன்-ஆடம்ஸ் என்பவர் மற்றும் ராயல் நேவியின் ஃப்ரீஃபால் பாராசூட் டிஸ்ப்ளே அணியின் தலைவர் லெப்டினன்ட் கமாண்டர் ஆலன் வியல் ஆகியோருடன் இணைந்து, உலகிலேயே மிகவும் உயரமான இடத்தில், வெட்டவெளியில் முறையான இரவு உணவு பார்ட்டியை கிரில்ஸ் நடத்தி சாதனை புரிந்தார். இந்த சாதனையை அவர்கள், சூடான பலூனில் 25,000 அடி உயரத்தில் செய்தனர், முழுவதுமாக உணவு விடுதி ஆடையும் ஆக்சிஜன் முகமூடிகளும் அணிந்திருந்து இதனை செய்து முடித்தனர். இந்த நிகழ்ச்சிக்கு பயிற்சி பெறுவதற்காக இவர், 200 -க்கும் மேற்பட்ட முறைகள் பாராசூட்டில் குதித்துள்ளார். இந்த நிகழ்ச்சியானது, தி டியூக் ஆஃப் எடின்பர்க் விருது மற்றும் தி பிரின்ஸ் ட்ரஸ்ட் ஆகியவற்றுக்கு உதவுவதற்காக நடத்தப்பட்டது.

இமயமலையில் பாராமோட்டாரிங்[தொகு]

2007 -இல், பாராஜெட் பாராமோட்டார் மூலமாக இமயமலையில் பறந்து, எவரெஸ்ட் சிகரத்தை விடவும் அதிக உயரத்தில் பறந்து புதிய உலக சாதனையைப் படைத்துள்ளதாக கிரில்ஸ் கூறினார்.[23] 14,500 அடி உயரத்தில், மலைக்கு 8 மைல்கள் தெற்கு பகுதியிலிருந்து கிரில்ஸ் பறக்கத் தொடங்கினார். இந்த சாதனை பயணத்தின்போது, மலைச் சிகரத்தை கீழே பார்த்ததாகவும், −60 °C குளிரை சமாளித்ததாகவும் கூறினார். ஆபத்தான அளவுக்கு மிகக்குறைவான ஆக்சிஜன் நிலைகளைத் தாண்டி, மெல்ல மெல்ல 29,500 அடி உயரத்தை எட்டினாராம், இது முந்தைய சாதனையான 20,019 அடிகளை விட கிட்டத்தட்ட 10,000 அடிகள் அதிகமானது. இந்த சாதனை முயற்சியானது, உலகெங்கும் டிஸ்கவரி சேனலுக்காகவும் யு.கேவில் சேனல் 4க்காகவும் படம்பிடிக்கப்பட்டது.[24][24]

ஆரம்பத்தில், கிரில்ஸ் எவரெஸ்டை மட்டுமே கடப்பதற்கு திட்டமிருந்தார், எவரெஸ்டுக்கு தெற்கு பகுதியில் பறக்க மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது, சீன வான் எல்லையை மீறும் ஆபத்தை செய்து எவரெஸ்டுக்கு குறுக்காக அவர் பறக்கவில்லை.[25]

மிகஉயரத்திலிருந்து உள்ளரங்கு ஃப்ரீஃபால்[தொகு]

கிரில்ஸும், இரண்டும் கைகளும் இழந்த அல் ஹோட்க்ஸனும், ஸ்காட்லாந்தை சேர்ந்த, ஃப்ரெடி மேக்டோனால்டு என்பவரும் இணைந்து, 2008 -ஆம் ஆண்டில் மிகவும் நீளமான தொடர்ச்சியான உள்ளரங்க ஃப்ரீஃபாலைச் செய்து கின்னஸ் சாதனை புரிந்தனர்.[26] இதற்கு முந்தய சாதனையானது, 1 மணிநேரம் 36 நிமிடங்களாகும், இது ஒரு அமெரிக்க குழுவினரால் செய்யப்பட்டது. கிரில்ஸ், ஹோட்க்ஸன், மெக்டோனால்டு ஆகியோர், மில்டன் கீயென்னஸ் என்ற இடத்தில் செங்குத்தான விண்ட் டனலைப் பயன்படுத்தி, முந்தைய சாதனையை ஒரு சில விநாடிகள் இடைவெளியில் முறியடித்தனர். இந்த முயற்சியானது க்ளோபல் ஏஞ்சல்ஸ் என்ற கருணை அமைப்பை ஆதரிக்க நடத்தப்பட்டது.

ஊடகங்கள்[தொகு]

ஷுவர் என்ற டியோடரண்டுக்காக ஒரு விளம்பரத்தில் கிரில்ஸ் முதன்முதலில் தொலைக்காட்சியில் தோன்றினார். இதில் அவர் எவரெஸ்ட் மலையில் ஏறுவது காண்பிக்கப்பட்டது. ஃப்ரைடே நைட் வித் ஜோனதான் ரோஸ் , தி ஒபெரா வின்ஃப்ரே ஷோ , லேட் நைட் வித் கோனான் ஓ'ப்ரெய்ன் , தி டுனைட் ஷோ வித் ஹே லேனோ , அட்டாக் ஆஃப் தி ஷோ , தி லே ஷோ வித் டேவிட் லெட்டர்மேன் , ஜிம்மி கிம்மள் லைவ்! போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு கிரில்ஸ் விருந்தினராக அழைக்கப்பட்டிருக்கிறார் மற்றும் ஹேரி ஹில்ஸ் டிவி பர்ப் என்ற நிகழ்ச்சிக்கும் அழைக்கப்பட்டிருந்தார். போஸ்ட்ஸ் ட்ரெய்ல் மிக்ஸ் கிரஞ்ச் சீரியலுக்காக கிரில்ஸ் இரண்டு விளம்பரங்களில் நடித்திருந்தார், இது அமெரிக்காவில் ஜனவரி 2009 -இல் ஒளிபரப்பாகியது. மேலு அவர், டாஸ் ஈக்விஸ்ஸின் "சர்வைவல் இன் தி மாடர்ன் எரா" என்ற அத்தியாயத்தில் தோன்றினார். காட்டுப்பகுதியில் வாழ்வதற்கான வழிமுறைகளை விளக்கும், ஐந்து பகுதியைக் கொண்ட ஒரு வலைத்தொடரில் அவர் தோன்றினார். அதில் கிரில்ஸ் காட்டிலிருந்து நாட்டுக்கு செல்வது காண்பிக்கப்பட்டது. ஆல்ஃபா கோர்ஸ் எனப்படும் கிறிஸ்தவ அடிப்படை நம்பிக்கைகளைக் கற்றுத்தரும் ஒரு பாடத்திட்டத்தையும் இவர் விளம்பரப்படுத்தினார். க்ளாஷ் ஆஃப் தி டைட்டன்ஸ் என்ற திரைப்படத்தின் மறுஆக்கத்தில் நடிக்குமாறு வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் கிரில்ஸைக் கேட்டது.[சான்று தேவை]

கிரில்ஸின் புத்தகங்கள் மிகவும் அதிகமாக விற்பனை ஆகக்கூடியவையாக உள்ளன. கிரில்ஸின் முதல் புத்தகமான ஃபேசிங் அப் என்பது, யுகேவின் சிறந்த 10 புத்தகங்களின் பட்டியலில் இடம்பெற்றது, இந்த புத்தகம் அமெரிக்காவில் தி கிட் வூ கிளைம்ப்ட் எவரெஸ்ட் என்ற பெயரில் வெளியிடப்பட்டது. இந்த புத்தகம் இவர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியது பற்றிய சாகசப் பயணம் மற்றும் சாதனைகளை விவரித்தது. கிரில்ஸின் இரண்டாம் புத்தகம் ஃபேசிங் தி ஃப்ரோசன் ஓஷன் என்பதாகும், இது 2004 ஆம் ஆண்டுக்கான, வில்லியம் ஹில் ஸ்போர்ட்ஸ் புக் ஆஃப் தி இயர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. இவருடைய மூன்றாம் புத்தகம், பார்ன் சர்வைவர்: பியர் கிரில்ஸ் என்ற தொடருடன சம்பந்தப்பட்டதாக எழுதப்பட்டது. (ஏப்ரல் 2008 -இல் அமெரிக்காவில் மேன் வெர்சஸ் வைல்டு டிஸ்கவரி டெலிவிஷன் நிகழ்ச்சியுடன் இணைத்து வெளியிடப்பட்டது) இதில், உலகிலேயே மிகவும் மோசமான இடங்களிலிருந்து அறியப்பட்ட வாழுவதற்கான திறன்கள் காண்பிக்கப்பட்டன. இந்த புத்தகம் சண்டே டைம்ஸ் இதழின் சிறந்த 10 புத்தகங்களின் பட்டியலில் இடம்பெற்றது.

மிஷன் சர்வைவல்: கோல்டு ஆஃப் தி காட்ஸ் மற்றும் மிஷன் சர்வைவல்: வே ஆஃப் தி வுல்ஃப் போன்ற சிறுவர் சாகச புத்தகங்களையும் வெளியிட்டுள்ளார். சமீபத்தில் இவர் வெளியிட்ட, பியர் கிரில்ஸ் அவுட்டோட் அட்வெஞ்சர்ஸ் என்ற புத்தகம் வெளிப்புற சாகசங்களுக்கு மிகச்சிறந்த வழிகாட்டியாகும்.

எஸ்கேப் டூ தி லீஜெய்ன்[தொகு]

2005 -ஆம் ஆண்டில் எஸ்கேப் டூ தி லீஜெய்ன் என்ற நான்கு பகுதி தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் படம்பிடித்தார், இதன் பின்னர், கிரில்ஸ் மற்றும் பதினோரு மற்ற யுகே "ரிக்ரூட்"களும் ஃப்ரெஞ்சு ஃபாரீன் லீஜெய்ன்னின் அடிப்படை பாலைவன பயிற்சியை சஹாரா பாலைவனத்தில் மீண்டும் உருவாக்க தொடங்கினார்கள். இந்த நிகழ்ச்சி யுகேவில் சேனல் 4 இலும்,[27] அமெரிக்காவில் மிலிட்டரி சேனலிலும் ஒளிப்பரப்பப்பட்டது.[28] 2008 ஆம் ஆண்டில், இந்த நிகழ்ச்சி யுகேவில் ஹிஸ்டரி சேனலில் மறுஒளிபரப்பு செய்யப்பட்டது.[29]

பார்ன் சர்வைவர்/மேன் வெர்சஸ் வைல்டு[தொகு]

சேனல் 4 தொலைக்காட்சிக்காக, பார்ன் சர்வைவர்: பியர் கிரில்ஸ் என்ற நிகழ்ச்சியை கிரில்ஸ் வழங்கி வருகிறார், இந்நிகழ்ச்சி ஆஸ்திரேலியா, கனடா மற்றும் அமெரிக்காவில் மேன் வெர்சஸ் வைல்டு என்ற பெயரில் ஒளிபரப்பாகி வருகிறது, மேலும் ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா ஆகியவற்றில் டிஸ்கவரி சேனலில் அல்டிமேட் சர்வைவல் என்ற பெயரிலும் ஒளிபரப்பாகி வருகிறது. வாழத் தகுதியற்ற இடங்களில் கிரில்ஸ் தனியாக விடப்பட்டு, அந்த இடத்தில் எவ்வாறு வாழ்வது என்று கிரில்ஸ் கற்று தருவது இந்த நிகழ்ச்சியில் காண்பிக்கப்படுகிறது. ஜூன் 15, 2007 -இல் இந்நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகியது, மூன்றாவது சீசன் நவம்பர் 2007-இல் ஒளிபரப்பாகியது, நான்காவது மே 2008 -இல் ஒளிபரப்பாகியது. தற்போது கிரில்ஸ் ஐந்தாவது சீசனைப் படம்பிடித்து வருகிறார்.

இந்த நிகழ்ச்சியில், கிரில்ஸ் மலைச்சரிவுகளில் ஏறுவது, ஹெலிகாப்டர்களிலிருந்து பாராசூட்களில் குதிப்பது, பலூன்கள் மற்றும் விமானங்கள், பாராகிளைடிங், ஐஸ் கிளைம்பிங், காட்டுத்தீயில் ஓடுவது வேகமான ஆற்றுநீரில் நீந்துவது, பாம்புகளை உண்பது, பாலைவன சூட்டிலிருந்து தப்பிக்க, அவருடைய சிறுநீரால் நனைத்த டி-ஷர்ட்டைத் தலையில் சுற்றிக் கொள்வது, சாரைபாம்பின் தோலில் சேமிக்கப்பட்ட சொந்த சிறுநீரைக் குடிப்பது, யானையின் சாணத்தில் உள்ள கழிவு நீரைக் குடிப்பது, முதலைகளுடன் சண்டையிடுவது, உயிரற்ற ஒட்டகத்தின் உடலைக் கிழித்து, அதிலுள்ள தண்ணீரைக் குடிப்பது, பல்வேறு வகையான "ஊரும் உயிரினங்களை" [பூச்சிகள்] உண்பது, ஒரு இறந்த ஆட்டின் உடலை உறங்குவதற்கான பையாகவும், மிதக்கும் பொருளாகவும் பயன்படுத்துவது, உதவி ஏதுமின்றி அருவிகளின் மேல் ஏறுவது போன்ற பல சாகசங்கள் காண்பிக்கப்படுகின்றன. தனித்துவமான சாகசக்கதைகள் அல்லது முழுக்க முழுக்க காட்டுத்தனமான நிகழ்ச்சிகள் போன்றவற்றை கிரில்ஸ் தனது பார்வையாளர்களுக்கு வழங்குகிறார்.

விமர்சனம்[தொகு]

மேன் வெர்சஸ் வைல்டு / பார்ன் சர்வைவர் நிகழ்ச்சியில், கிரில்ஸ் சிக்கிக்கொள்ளும் சில சூழ்நிலைகள் செயற்கையாக உருவாக்கபடுவதாக விமர்சிக்கப்படுகிறது. 2006 -ஆம் ஆண்டில், காட்டில் தன்னந்தனியாக கிரில்ஸ் விடப்படுகிறார் என்ற தவறான கருத்தை பார்வையாளர்களிடையே பார்ன் சர்வைவர் நிகழ்ச்சி உருவாக்கியது, ஆனால் உண்மையில் அவ்வாறு நடக்கவில்லை, இதனால் சேனல் 4 இந்த நிகழ்ச்சியை சில வாரங்களுக்கு நிறுத்தியிருந்தது.[30] அமெரிக்காவைச் சேர்ந்த சர்வைவல் ஆலோசகரான, மார்க் வியனெர்ட் என்பவரால், காட்சிகள் சித்தரிக்கப்படுகின்றன என்ற சிக்கல் எழுப்பப்பட்டது. யுகேவைச் சேர்ந்த, சண்டே டைம்ஸ் பத்திரிகைக்கு இவர் அளித்த பேட்டியில், பாலைவன தீவு ஒன்றில் தன்னந்தனியாக விடப்பட்டிருந்தாக அவர் கூறிய நாளில், உண்மையில் கிரில்ஸ் ஹவாய் தீவில் ஒரு மோட்டலில் இரவுகளில் தங்கியிருந்தார் என்று கூறினார். குழுவினரால் கட்டுமரமானது, முதலில் ஒன்றாக வைப்பார்கள், பின்பு கிரில்ஸ் அதனை கட்டுவது போல படம்பிடிப்பார்கள் என்றும் திரு. வியனெர்ட் குற்றம் சாட்டினார்.[31]

 • "காட்டுக்" குதிரைகளை கிரில்ஸ் ஓட்டுவதாக காண்பிக்கப்பட்டது, ஆனால் அவை உண்மையில் மிகவும் பயந்தவையாக இருந்தன, பெரும்பாலும் அருகிலிருந்த ட்ரெக்கிங் ஸ்டேஷனிலிருந்து வாடகைக்கு எடுக்கப்பட்டவையாகவே இருந்தன.
 • பசிஃபிக் பெருங்கடலில் உள்ள ஒரு சிறிய தீவில் எடுக்கப்பட்டதாக கூறப்பட்ட ஒரு அத்தியாயமானது, உண்மையில் ஹாலிவுட் ஷூட்டிங்கிற்கு பயன்படும் ஹவாயில் உள்ள ஒரு தீபகற்பமே என்பதை பின்னர் சேனல் 4 ஒத்துக்கொண்டது.

இந்த நிகழ்வுகள் சேனல் 4 நிகழ்ச்சியால் உறுதிப்படுத்தப்பட்டன, இதனைப் பற்றி தெரிவிக்கும் போது சேனல் 4, 'இவை டாகுமென்டரிகள் அல்ல, மாறாக "எப்படி வாழ்வது" என்பதைக் கற்றுத்தரும் ஒரு வழிகாட்டி நிகழ்ச்சியாகும், இதில் இந்த சூழலுடன் ஒத்துப்போகும் காட்சிகளும் அடங்கும் என்பது விளங்குகிறது' என்று கூறியது.[32][33][34][35] மிகவும் அதிகமாக திட்டமிடப்பட்ட கூறுகள், மற்றும் தெளிவான பின்னணி குரல் மற்றும் "இந்த பகுதி பார்வையாளருக்கு எப்படி வாழ்வது என்று கற்றுத்தர" என்பது போன்ற சூழல்களை அகற்றி விட்டும் மீண்டும் தொகுத்து டிஸ்கவரியும் சேனல் 4 -உம் அத்தியாயங்களை ஒளிபரப்பின.

சர்வைவல் நிபுணர் ரே மியர்ஸ் என்பவர், கிரில்ஸை ஒரு "சிறுவனான சாரணன்" என்றும் தன்னுடைய நிகழ்ச்சியான பார்ன் சர்வைவரில் ,[19] தொலைக்காட்சி தந்திரங்களைப் பயன்படுத்தும் ஒரு "ஷோமேன்" என்றும் குறிப்பிட்டார், என்றாலும் அவர் தலைமை சாரணராக இருப்பதால், ஆதரவையும் அளித்தார், "கிரில்ஸ் தலைமை சாரணராக இருக்கிறார், அது உண்மையில் மிகவும் நல்ல விஷயம்" என்று அவர் குறிப்பிடுகிறார்".[36]

தலைமைச் சாரணர்[தொகு]

மே 17, 2009 இல், சாரணர் அமைப்பானது, அதன் தலைமை சாரணர் பீட்டர் டங்கனின் ஐந்தாண்டு பொறுப்பு ஜூலை 2009 -இல் முடிவடைவதைத் தொடர்ந்து அந்த பொறுப்பில் கிரில்ஸ் அமர்த்தப்படுவார் என்று அறிவித்தது.[37] கில்வெல் 24 என்ற இடத்தில் ஜூலை 11, 2009 -இல் அவர் அதிகாரப்பூர்வமாக தலைமை சாரணராக பொறுப்பேற்றுக் கொண்டார். அந்த நிகழ்ச்சியில் 3,000 க்கும் மேற்பட்ட எக்ஸ்ப்ளோரர் ஸ்கவுட்ஸ் முன்னிலையில் பீட்டர் டங்கனிடமிருந்து இவரைப் பொறுப்பைப் பெற்றுக் கொண்டார். 1920 ஆம் ஆண்டு ராபர்ட் பேடன் பவுல் என்பவருக்காக இந்த பொறுப்பு உருவாக்கப்பட்டது முதல், இந்த பொறுப்பை வகிக்கும் பத்தாவது நபரும், மிக இளவயது நபரும் இவரே ஆவார்.[38][39]

கருணைப் பணிகள்[தொகு]

கிரில்ஸின் எல்லா சாகசப்பயணங்களும், சுற்றுலாக்களும் கருணை அமைப்புகளுக்கு நிதி திரட்டி தர உதவுகின்றன.[சான்று தேவை] யுனைடெட் கிங்டமில் இளைஞர்களுக்கு, பயிற்சி, நிதி உதவி மற்றும் நடைமுறை உதவிகளை அளித்து வரும், தி பிரின்ஸ் ட்ரஸ்ட் என்ற அமைப்பிற்கு கிரில்ஸ் தூதுவராக இருக்கிறார்.[13] தி ஜோல்ட் ட்ரஸ்ட் (The JoLt Trust) என்ற சிறிய கருணை அமைப்பின் துணைத் தலைவராகவும் இவர் இருக்கிறார். இந்த அமைப்பு, உடல் ஊனமுற்றோர், குறைபாடுடையோர், தவறான வழியில் சென்றோர் அல்லது புறக்கணிக்கப்பட்ட இளைஞர்களை பலமாத காலம் சவால் நிறைந்த சுற்றுலாக்களுக்கு அழைத்து செல்கிறது.

2007 ஆம் ஆண்டில், திறனளிக்கப்பட்ட பாராகிளைடர் மூலமாக எவரெஸ்டை விட உயரமாக பறப்பதற்கு இவர் செய்த முயற்சியின் பலனடைபவர்களாக, க்ளோபல் ஏஞ்சல்ஸ், என்ற யுகேவைச் சேர்ந்த கருணை அமைப்பு இருந்தது, அந்த அமைப்பு, உலகெங்கும் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவ முயற்சிக்கிறது. 25,000 அடி உயரத்தில், இரவு உணவு பார்ட்டியை தி டியூக் ஆஃப் எடின்பர்க்ஸ் அவார்ட் திட்டம் என்பதற்கு உதவுவதற்காக நடத்தினார், பின்னர் அந்த விருதுகளின் 50 -ஆம் ஆண்டுவிழாவைத் தொடங்கி வைத்தார். பிரிட்டனை, ஜெட் ஸ்கீஸ் மூலமாக சுற்றி பறந்துவர இவர் செய்த முயற்சியானது, ராயல் நேஷன்ல் லைஃப்போட் அமைப்பு என்பதற்கு நிதி திரட்டித்தரப் பயன்பட்டது. SSAFA ஃபோர்சஸ் ஹெல்ப் என்ற அமைப்பிற்கு உதவும் நோக்கத்துடன் கிரில்ஸ் எவரெஸ்ட் சிகரத்தை ஏறும் முயற்சியை மேற்கொண்டார், பிரிட்டிஷைச் சேர்ந்த இந்த அமைப்பு, முன்னாள் மற்றும் நடப்பில் பிரிட்டிஷ் ராணுவப் படைகளில் பணிபுரியும் வீரர்கள், அவர்களின் குடும்பங்கள் அவர்களை சார்ந்திருப்போர் ஆகியோருக்கு உதவும் நோக்குடன் செயல்படும் ஒரு அமைப்பாகும். 2003 -ஆம் ஆண்டில், ஆர்க்டிக் கடலில் இவர் மேற்கொண்ட சாகசப் பயணம், ஃபேசிங் தி ஃப்ரோசன் ஓஷன் என்ற புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளது, இது தி பிரின்ஸ் ட்ரஸ்டின் உதவியால் நிகழ்ந்தது. 2005 -இல், ஏஞ்சல் அருவியை பாராமோட்டார் மூலமாக பறந்து கடக்க இவர் செய்த முயற்சியானது, ஹோப் அண்ட் ஹோம்ஸ் ஃபார் சில்ட்ரன் என்ற கருணை அமைப்பிற்கு உதவும் நோக்குடன் செய்யப்பட்டது.[40]

இதர பணிகள்[தொகு]

தொலைக்காட்சியைத் தவிர, கிரில்ஸ் சில நேரங்களில் ஊக்கமூட்டும் பேச்சாளராகவும் பணிபுரிந்து வருகிறார்.[41] கிராக்ஹோப்பர்ஸ் என்ற பிரிட்டிஷ் நிறுவனம் தயாரிக்கும், சொந்த வெளிப்புற ஆடைகளை கிரில்ஸ் பயன்படுத்துகிறார்.

இதையும் பாருங்கள்[தொகு]

 • ரூடிகெர் நீபெர்க், ஜெர்மன் எழுத்தாளர் மற்றும் வாழ்வியல் நிபுணர்
 • ப்ரூஸ் பேர்ரி, பிரிட்டிஷ் சாகசப்பயணி
 • லெஸ் ஹிட்டின்ஸ், ஆஸ்திரேலிய வாழ்வியல் நிபுணர்
 • லெஸ் ஸ்ட்ரௌட், கனடிய சர்வைவல் நிபுணார்
 • ராணுல்ப் பியென்னெஸ், பிரிட்டிஷ் சாகசப்பயணி
 • எட் ஸ்டாஃப்போர்ட், பிரிட்டிஷைச் சேர்ந்த எக்ஸ்ப்ளோரர்
 • ரே மியர்ஸ், ஆங்கில வாழ்வியல் நிபுணர்
 • ரிச்சர்ட் ப்ரோயென்கே, அமெரிக்காவைச் சேர்ந்த வாழ்வியல் நிபுணர்

குறிப்புதவிகள்[தொகு]

 1. "Who dares wins". The Echo. thisisdorset.net. 2004-04-17. 2008-07-14 அன்று பார்க்கப்பட்டது.
 2. Hastie, Jenny, "This is where we hide from the world" பரணிடப்பட்டது 2011-08-08 at the வந்தவழி இயந்திரம் homesandgardens.com, July 2005
 3. 3.0 3.1 "Out of the Wild: Bear Grylls survives the urban jungle". mensvogue.com. 2008-03-16 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2008-07-14 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 4. "Bear Grylls : Man vs. Wild". Discovery Channel. 2008-07-14 அன்று பார்க்கப்பட்டது.
 5. 5.0 5.1 Bear Grylls Welcomes Son Huckleberry Celebrity Baby Blog, 15 January 2009
 6. "Born Survivor: Bear Grylls — Ireland". Discovery Channel UK. 3 June 2009 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |dateformat= ignored (உதவி)
 7. "மை லைஃப் இன் ட்ராவல்: பியர் கிரில்ஸ்" பரணிடப்பட்டது 2010-05-15 at the வந்தவழி இயந்திரம் Independent.co.uk , ஏப்ரல் 17, 2004
 8. "இரங்கல்: சர் மைக்கெல் கிரில்ஸ்" Telegraph.co.uk , பிப்ரவரி 13, 2001
 9. 9.0 9.1 "Person Page 24749". thePeerage.com. 2008-07-14 அன்று பார்க்கப்பட்டது.
 10. "History of Birkbeck: 1900s". Birkbeck. 3 December 2007 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |dateformat= ignored (உதவி)
 11. <url=http://scouts.org.uk/news_view.php?news_id=185 பரணிடப்பட்டது 2013-10-23 at the வந்தவழி இயந்திரம்>
 12. 12.0 12.1 "பியரிடம் உங்கள் கேள்விகளைக் கேளுங்கள்" பரணிடப்பட்டது 2010-03-04 at the வந்தவழி இயந்திரம் BearGrylls.com
 13. 13.0 13.1 13.2 "வாழ்க்கை வரலாறு" பரணிடப்பட்டது 2011-07-30 at the வந்தவழி இயந்திரம் GearGrylls.com
 14. "டயரி: ஃப்ரம் பியர்" பரணிடப்பட்டது 2008-12-06 at the வந்தவழி இயந்திரம் JourneyAntarctica2008.com , டிசம்பர் 6, 2008
 15. கிரில்ஸ், எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய சிறுவன் (The Kid Who Climbed Everest) , 11
 16. "Bear Grylls – Mountaineer & Motivational Speaker". City Speakers International. 2008-02-08 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2008-07-14 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 17. "Escape to the Legion". Channel4.com. 2008-07-14 அன்று பார்க்கப்பட்டது.
 18. 18.0 18.1 Petty, Moira (2007-04-24). "Adventurer Bear Grylls' battle with back pain and high cholesterol". Mail Online. 2008-07-14 அன்று பார்க்கப்பட்டது.
 19. 19.0 19.1 லையன்ஸ், ரிக், "ஏன் SAS ஹீரோவாக பியர் கிரில்ஸ் இல்லை (Why SAS hero cannot bear Grylls)" டெய்லி ஸ்டார் , மே 14, 2009 பிழை காட்டு: Invalid <ref> tag; name "DS140509" defined multiple times with different content
 20. "News and Events: Royal Navy – Honorary Officers of the RNR". The Royal Navy. 2006. 17 ஏப்ரல் 2009 அன்று மூலம் பரணிடப்பட்டது. 19 May 2007 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Unknown parameter |dateformat= ignored (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 21. சம்மிட் இதழ் #40, வின்டர் 2005, பக்கம் 12
 22. ப்ளூண்டெல், ஜோவன்னா, "ஏ பாய்ஸ் ஓன் அட்வெஞ்சர்" Telegraph.co.uk , ஏப்ரல் 7, 2003
 23. "Latest News". Bear Grylls. 2 September 2007 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |dateformat= ignored (உதவி)
 24. 24.0 24.1 கிரில்ஸ், பியர், "ஃப்ளையிங் இன்டூ எ ட்ரீம்" பரணிடப்பட்டது 2008-04-09 at the வந்தவழி இயந்திரம் Telegraph.co.uk மே 19, 2007
 25. மார்டின், நிகோலே, "எக்ஸ்ப்ளோரர் ஹிட்ஸ் ஹைட்ஸ் வித் ஹிமாலயன் ரெக்கார்ட்" பரணிடப்பட்டது 2008-03-13 at the வந்தவழி இயந்திரம் Telegraph.co.uk மே 16, 2007
 26. "Bear Grylls breaks Guinness World Record at Airkix Milton Keynes". MiltonKeynes.com. 2008. 2009-07-12 அன்று பார்க்கப்பட்டது.
 27. "எஸ்கேப் டூ தி லீஜெய்ன்" Channel4.com
 28. "Military Channel: TV Listings: Escape to the Legion". The Military Channel. 2007. 26 மே 2007 அன்று மூலம் பரணிடப்பட்டது. 19 May 2007 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Unknown parameter |dateformat= ignored (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 29. "ESCAPE TO THE LEGION: Escape To The Legion – Part 4". The HistoryChannel.co.uk. 2008-03-24. 2009-05-25 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2008-07-14 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 30. டேகான், மைக்கெல், "ஹவ் எ நைன்டித் செஞ்சுரி ஸ்காட் கான்குயர்ட் தி அவுட்பேக்" Telegraph.co.uk , மே 30, 2008
 31. "கிரில்ஸ் சீரிஸ் டூ பி ட்ரான்ஸ்பரன்ட்'" BBC.co.uk , ஜூலை 24, 2007
 32. "How Bear Grylls the Born Survivor roughed it – in hotels". Mail Online. 2007-07-23. http://www.dailymail.co.uk/pages/live/articles/news/news.html?in_article_id=470155&in_page_id=1770. பார்த்த நாள்: 2008-07-14. 
 33. பூத், ராபர்ட், மற்றும் காட்ஹெர், டிபேஷ், "போலியான கிரில்ஸ் படத்திற்கான ‘கோல் டிப்ட் இன்டூ வேல்கனோ’" TimesOnline.co.uk , 12 August 2007
 34. பூத், ராபர்ட், "டிவி, 'சர்வைவல் கிங்' ஓட்டல்களில் தங்கியிருந்தார்" TimesOnline.co.uk , ஜூலை 22, 2007
 35. "எரிமலையின் நச்சுப்புகையை, புகை எந்திரத்தின் மூலம் போலியாக தயாரித்தார், பியர் கிரில்ஸ்' புதிய பார்ன் சர்வைவர் போலி நிகழ்ச்சிகள்" DailyMail.co.uk , ஆகஸ்ட் 12, 2007
 36. புஷ்கிராஃப்ட் மற்றும் சோர்வற்ற ஒளிபரப்பாளர்கள் பற்றி ரே மியர்ஸ், டெய்லி டெலிகிராஃப்
 37. புக், ஆலிவர், "கிரில்ஸின் புதிய சுழற்சி, புதிய சவாலை எதிர்கொள்கிறார் (Grylls puts on his woggle and scouts out a new challenge)" பரணிடப்பட்டது 2010-05-20 at the வந்தவழி இயந்திரம் Independent.co.uk , மே 18, 2009
 38. குயின், பென், "சாகசப்பயணி பியர் கிரில்ஸ் புதிய தலைமை சாரணர் (Survivalist Bear Grylls named as new chief Scout)" Guardian.co.uk , மே 17, 2009
 39. "பியர் கிரில்ஸ் புதிய தலைமை சாரணராக அறிவிக்கப்பட்டுள்ளார்" (Bear Grylls announced as new Chief Scout) Scouts.org.uk , மே 17, 2009
 40. Murray Norton (2005). "Fancy An Adventure". Webchats.tv. 16 ஆகஸ்ட் 2007 அன்று மூலம் பரணிடப்பட்டது. 19 May 2007 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Unknown parameter |dateformat= ignored (உதவி); Unknown parameter |month= ignored (|date= suggested) (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 41. "பேச்சாளார்: பியர் கிரில்ஸ்" பரணிடப்பட்டது 2010-03-24 at the வந்தவழி இயந்திரம் CitySpeakersInternational.co.uk

வெளி இணைப்புகள்[தொகு]


The Scout Association
முன்னர்
Peter Duncan
Chief Scout of the United Kingdom
and Overseas Territories

2009 – present
பதவியில் உள்ளார்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பியர்_கிரில்ஸ்&oldid=3360396" இருந்து மீள்விக்கப்பட்டது