பாவனா பாலகிருஷ்ணன்
பாவனா பாலகிருஷ்ணன் | |
|---|---|
| பிறப்பு | பாவனா பாலகிருஷ்ணன் மே 22, 1982 சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
| தேசியம் | இந்தியர் |
| படித்த கல்வி நிறுவனங்கள் | கிரேட் லேக்ஸ் மேலாண்மைக் கல்வி நிறுவனம் |
| பணி | நிகழ்ச்சித் தொகுப்பாளர், வர்ணனையாளர், பின்னணிப் பாடகர், நடனக் கலைஞர், காணொளித் தொகுப்பாளர், வானொலித் தொகுப்பாளர் |
| அறியப்படுவது | 2019 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் வர்ணனையாளர் |
| வாழ்க்கைத் துணை | நிகில் இரமேஷ் |
பாவனா பாலகிருஷ்ணன் (Bhavana Balakrishnan) வீ.ஜே. பாவனா (பிறப்பு 22 மே 1982) என்பவர் இந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளரும், துடுப்பாட்ட வர்ணனையாளரும், பின்னணிப் பாடகரும், நடனக் கலைஞரும் ஆவார்.[1] மாயந்தி இலாங்கருக்குப் பிறகு இந்தியாவில் மிகவும் பிரபலமான விளையாட்டுப் பத்திரிகையாளர்களில் ஒருவர் ஆவார். அவர் தற்போது ஸ்போர்ட்ஸின் ஒளிபரப்பாளராகப் பணிபுரிகிறார். இந்த அலைவரிசைக்காக பல நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார். 2019 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தின் போது கருத்து தெரிவித்த பெண்களில் பாவனா பாலகிருஷ்ணனும் ஒருவர்.[2][3][4]
தொழில்
[தொகு]பாவனா பாலகிருஷ்ணன் குறுகிய காலத்திற்கு வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் களம் இறங்கினார். பாவனா ராஜ் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகச் சேர்ந்தார். இவர் தொகுத்து வழங்கிய முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சி பீச் கேர்ள்ஸ் ஷோ ஆகும். பின்னர், விஜய் தொலைக்காட்சி அலைவரிசையில் சேர்ந்தார். பின்னர் 2011-ஆம் ஆண்டில் அலைவரிசையின் முழுநேரத் தொகுப்பாளராக ஆனார். விஜய் தொலைக்காட்சியில் இவரது முதல் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர் ஜூனியர் ஆகும். மேலும், 2018 வரை ஏர்டெல் சூப்பர் சிங்கரைத் தொகுத்து வழங்கினார். ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியின் "ஃபன் அன்லிமிடெட்" உட்பட அலைவரிசையின் மற்ற நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியுள்ளார்.[5]
2017-ஆம் ஆண்டில், விளையாட்டுப் பத்திரிகையாளராக ஸ்டார் ஸ்போர்ட்ஸில் சேர்ந்தார். இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்), புரோ கபடி கூட்டிணைவு ஆகியவற்றின் ஒளிபரப்புகளை வழங்கினார். 2018 ஐபிஎல் பருவத்தில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழின் வர்ணனையாளராகப் பணியாற்றினார். 2018 இந்தியன் பிரீமியர் லீக்கின் போது இரண்டு பெண் வழங்குநர்களில் ஒருவராக இருந்தார்.[6]
பாவனா பாலகிருஷ்ணன் 2018-ஆம் ஆண்டில் பாடகியாக அறிமுகமானார். தனது முதல் தனிப்பாடலான தி மாஷப் தொடரை வெளியிட்டார் .[7] 2020-ஆம் ஆண்டில், இசை இயக்குநர் தரனுக்காக தனது முதல் பின்னணிப் பாடலைப் பாடினார். "வீராதி வீரா" பாடல் யூடியூபில் ஐந்து இலட்சம் பார்வைகளைப் பெற்றுள்ளது.
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் நிகில் ரமேஷை மணந்து தற்போது மும்பையில் வசித்து வருகிறார்.[8]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ says, Devi J. (2016-03-24). "Bhavana Balakrishnan (Anchor) – Wiki, Biodata, Age, Profile, Biography". Scooptimes (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2019-10-09.
- ↑ "#WomenInFront will present the ICC Cricket World Cup 2019 on Star Sports Network!". Indian Television Dot Com (in ஆங்கிலம்). 2019-06-03. Retrieved 2019-10-09.
- ↑ "World Cup 2019: Women get an equal say in the commentary box". Forbes India (in ஆங்கிலம்). Retrieved 2019-10-09.
- ↑ Das, Ria (2019-06-04). "Sexism In World Cup No More, Women Commentators Standout". SheThePeople TV (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2019-10-09.
- ↑ "Dance reality show Jodi Fun Unlimited to premiere soon - Times of India". The Times of India (in ஆங்கிலம்). Retrieved 2019-10-09.
- ↑ "Bhavna joins Star Sports Tamil for IPL - Times of India". The Times of India (in ஆங்கிலம்). Retrieved 2019-10-09.
- ↑ "VJ Bhavna in a new avatar - Times of India". The Times of India (in ஆங்கிலம்). Retrieved 2019-10-09.
- ↑ "My husband doesn't watch my shows: Bhavna - Times of India". The Times of India (in ஆங்கிலம்). Retrieved 2019-10-09.