சூப்பர் சிங்கர் ஜூனியர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சூப்பர் சிங்கர் ஜூனியர்
வேறு பெயர்சூப்பர் சிங்கர்
வகைபாடும் நிகழ்வு
வழங்கல்பாவனா (தற்போது)
நாடுஇந்தியா இந்தியா
மொழிதமிழ்
தயாரிப்பு
படப்பிடிப்பு தளங்கள்சென்னை
ஒளிபரப்பு
அலைவரிசைஸ்டார் விஜய்

சூப்பர் சிங்கர் ஜூனியர் (ஆங்கிலம்: Super Singer Junior) என்பது தமிழகத்தின் செல்லக் குரலுக்கான தேடல் இது ஸ்டார் நெட்வொர்க்கின் பிரபலமான தமிழ்த் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சி நடத்திய ஒரு ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஆகும்.[1] மேலும் இந்நிகழ்ச்சிக்கு பாரதி ஏர்டெல் நிதியுதவி செய்தது. இது 6 முதல் 14 வயதுடைய குழந்தைகளுக்கான பாடும் திறமையை கண்டறியும் ஒரு நிகழ்ச்சி ஆகும். இது 2006 இல் திரையிடப்பட்ட ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் அடுத்தப் பதிப்பாகும். இந்தியாவின் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் குரல் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சி மாநிலம் முழுவதிலுமிருந்து பல குழந்தைகளை ஈர்த்தது. மேலும் போட்டிக்கு போட்டியாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக கடுமையான பல-நிலை தேர்வு நடைமுறைகள் செய்யப்பட்டது..அதில் சிறந்த பாடகர்களை தேர்தெடுத்து அவற்றில் வெற்றி பெறுபவர்களுக்கு சூப்பர் சிங்கர் பட்டம் கொடுக்கப்பட்டது.

பருவம் 1[தொகு]

நிகழ்ச்சியின் முதல் பருவம் 2007 இல் திரையிடப்பட்டது. இதனை பிரபல பாடகி சின்மயி தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சிக்காக பதிவு செய்த பல குழந்தைகளில், 25 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இது பலவிதமான சுவாரஸ்யமான பல சுற்றுகளைக் கொண்டிருந்தது. இந்நிகழ்ச்சியின் நடுவர்களாக கே. எஸ். சித்ரா மற்றும் உஷா உதூப் ஆகியோர் செயல்பட்டனர். விக்னேசுடன் போடட்டி போட்ட கிருஷ்ணமூர்த்தி ஒரு கடினமான இறுதிப் போட்டிக்குப் பிறகு வெற்றியாளராக உருவெடுத்தார். நாட்டுப்புற இசையில் நன்கு பாடினார். மற்ற இறுதிப் போட்டியாளர்களான சாய்சரண் மற்றும் அபர்ணா (வைல்ட் கார்டு சுற்றில் "மதுமிதா ஷங்கருக்கு" எதிராக வென்றவர்) மிகவும் கடினமான போட்டியைக் கொடுத்தனர்.

நிகழ்ச்சியின் முடிவுக்குப் பிறகு, நிகழ்ச்சியின் முந்தைய பதிப்பின் 3 மற்றும் 4 ஆம் பருவங்களில் இறுதி வீரர் சாய்சரண் மற்றும் அரையிறுதி வீரர் மதுமிதா சங்கர் ஆகியோர் போட்டியிட்டனர். சாய்சரண் பின்னர் ஏர்டெல் சூப்பர் சிங்கரின் 3 பருவத்தின் வெற்றியாளராக முடிசூட்டப்பட்டார். மேலும் காட்பாதர், மனம் கொத்திப் பறவை மற்றும் சாட்டை ஆகிய படங்களில் பாட இசை இயக்குநர்கள் ஏ. ஆர். ரகுமான் மற்றும் டி. இமான் ஆகியோர் வாய்ப்பளித்தனர்.

இந்த பருவத்தின் முதல் நிகழ்ச்சி 15 ஜூலை 2009 அன்று திரையிடப்பட்டது, மேலும் ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழன் வரை இரவு 9:00 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டன.[2][3] விஜய் டிவியின் மேடையில் தங்கள் திறமையை வெளிப்படுத்த 6 வயது முதல் 14 வயது வரையிலான குழந்தைகள் அனுமதிக்கப்பட்டனர்.[2] இசைத் துறையில் பாராட்டப்படுவதற்கும் அங்கீகாரம் பெறுவதையும் தவிர, நிகழ்ச்சியின் முடிவில் அதன் வெற்றியாளருக்கு ரூ .25 லட்சம் ரொக்கப் பரிசாக வழங்கப்படும் என்று உறுதியளித்தது.[2] பின்னர், முதல் 25 செயல்திறன் சுற்றுகளின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் புரவலர்கள் பரிசுகளை வழங்கினர். அதன் 2 பருவ புரவலரான நவஷக்தி டவுன்ஷிப் மற்றும் டெவலப்பர்களிடமிருந்து ரூ .25 லட்சம் மதிப்புள்ள அனுக்ரஹா சேட்டிலைட் டவுனில் ஒரு வில்லாவை வழங்குவதாக அறிவித்தது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் தொடரின் தொகுப்பிலிருந்து விலகுவதாக பின்னணி பாடகர் சின்மயி எடுத்த முடிவைத் தொடர்ந்து,[4][5] பல்வேறு தொலைக்காட்சி தொகுப்பாளர்களான திவ்யதர்சினி, சிவகார்த்திகேயன், ஐஸ்வர்ய பிரபாகர், மற்றும் உமா பத்மநாபன் ஆகியோர் பல்வேறு இடைவெளிகளில் நிகழ்ச்சியை நடத்தி வந்தனர். பின்னணி பாடகி திவ்யா மிகவும் தவறாமல் தோன்றினார். குரல் பயிற்சியாளராக ஆனந்த் வைத்தியநாதன் இருந்தார். பின்னணி பாடகர் கே. எஸ். சித்ரா நிகழ்ச்சியின் நிரந்தர நடுவரானார். உஷா உதூப் நிகழ்ச்சியிலிருந்து விலகிய பிறகு அவருக்கு பதிலாக பின்னணி பாடகர்கள் மனோ, மற்றும் மால்குடி சுபா ஆகியோரும் நிரந்தர நடுவர்களாக இந்த நிகழ்ச்சியில் இணைந்தனர்.

பி. பி. ஸ்ரீனிவாஸ், பி. சுசீலா, ம. சு. விசுவநாதன், எஸ். ஜானகி, எல். ஆர். ஈஸ்வரி, Jஜென்சி, மாணிக்க விநாயகம், உண்ணிமேனன், சாதனா சர்கம், நித்யஸ்ரீ மகாதேவன், சுசித்ரா, ஹரிஷ் ராகவேந்திரா, மது பாலகிருஷ்ணன், சௌம்யா, அனுபமா, ஹரிசரண், புஷ்பவனம் குப்புசாமி, வீரமணி ராஜு, சாருலதா மணி, சுனிதா சாரதி, ரம்யா என்.எஸ்.கே., ஸ்ரீமதுமிதா, ஷாலினி, வினையா, திப்பு, மஹதி (பாடகி), மற்றும் பிரசாந்தினி உள்ளிட்ட பல பிரபல பின்னணி பாடகர்கள் மற்றும் இசை இயக்குநர்கள் வலரும் நடுவர்களாக இந்த பருவத்தில் தோன்றினர். இத பட்டியலில் முந்தைய பதிப்பில் பங்கேற்பாளாராகவும், நடுவர்களாகவும் இருந்த நரேஷ் ஐயர், அனிதா கார்த்திகேயன், நிகில் மேத்யூ, மற்றும் அஜீஸ், மற்றும் நிரந்தர நடுவர்களான பி. உன்னிகிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம் மற்றும் ஸ்ரீநிவாஸ் ஆகியோரும் அடங்குவர்.

ஸ்ரீநிவாஸ் 2011 ஆம் ஆண்டு வெளிவந்த "தி ட்ரெயின் என்ற மலையாள மொழித் திரைப்படத்தில் பின்னணி பாடகராக வெற்றியாளரான அல்கா அஜித்தை அறிமுகப்படுத்தினார். இறுதி போட்டியாளாரான் நித்யஸ்ரீ, அரையிறுதி வீரர்கள் ஸ்ரீனிஷா, மற்றும் பிரியங்கா ஆகியோர் 2011 ஆம் ஆண்டு வெளியான் தமிழ் மொழித் திரைப்படமான அவன் இவனில் பின்னணி பாடகர்களாக அறிமுகப்படுத்தப்பட்டனர்.

வெற்றியாளர்கள்[தொகு]

பாகம் 1[தொகு]

வெற்றிபெற்றவர் ::கிருஷ்ணமூர்த்தி

பாகம் 2[தொகு]

வெற்றிபெற்றவர் :அல்க அஜித்

பாகம் 3[தொகு]

வெற்றிபெற்றவர் :ஆஜித்
பாகம் மூன்றில் இரண்டாம் இடத்தை பிரகதியும், மூன்றாம் இடத்தை யாழினியும், நான்காம் இடத்தை சுகன்யாயாவும், ஐந்தாம் இடத்தை கெளதமும் வென்றனர்.

நடுவர்கள்[தொகு]

  1. மனோ
  2. சித்ரா
  3. மால்குடி சுபா

இவற்றைப் பார்க்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. "indya.com - STAR - VIJAY". Vijay.indya.com (12 June 1981). மூல முகவரியிலிருந்து 19 July 2011 அன்று பரணிடப்பட்டது.
  2. 2.0 2.1 2.2 "Super Singer Junior 2009". vijay.indya.com (26 December 2009). மூல முகவரியிலிருந்து 26 December 2009 அன்று பரணிடப்பட்டது.
  3. "Let the music begin!". தி இந்து. 15 May 2010. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/let-the-music-begin/article787481.ece. பார்த்த நாள்: 4 April 2015. 
  4. "Chinmayi wishes a normal childhood for prodigiesa". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 20 September 2014. http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/music/Chinmayi-wishes-a-normal-childhood-for-prodigies/articleshow/42991290.cms. பார்த்த நாள்: 4 April 2015. 
  5. "WhatToNameIt: And my last day on Airtel Super Singer". Chinmayi's official website (21 January 2009). பார்த்த நாள் 4 April 2015.

வெளி இணைப்புகள்[தொகு]