பாம்பிக்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாம்பிக்சு
பாம்பிசு மோரி, பட்டுப்புழு.
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
லெப்பிடாப்பிடிரா
குடும்பம்:
பாம்பிசிடே
பேரினம்:
பாம்பிக்சு

மாதிரி இனம்
பாம்பிக்சு மோரி[2]
லின்னேயஸ், 1758
வேறு பெயர்கள்
  • தியோபிலா மூரே, 1862

பாம்பிக்சு (Bombyx) என்பது பட்டினை உற்பத்தி செய்யும் அந்துப்பூச்சிகள் அல்லது பாம்பிசிடே குடும்பத்தின் மல்பெரி பட்டு அந்துப்பூச்சிகளின் பேரினமாகும்., இது பட்டுப்புழுக்கள் என்றும் அழைக்கப்படுகிறது. இவை பட்டு அந்துப்பூச்சிகளின் இளம் உயிரிகள் அல்லது கம்பளிப்பூச்சிகளாகும். கரோலஸ் லின்னேயஸ் தனது 10வது பதிப்பான சிசுடமா நேச்சுரேவில் (1758) இந்த பேரினமானது துணை இனமாக அறிவிக்கப்பட்டது.[2]

சிற்றினங்கள்[தொகு]

  • பாம்பிக்சு கோர்சூபீல்டி (மூர், 1860)
  • பாம்பிக்சு குட்டோனி வெசுட்வுட், 1847
  • பாம்பிக்சு இன்காம்போசிதா வான் எக்கீ, 1929
  • பாம்பிக்சு லெமீபாயூலி லெம்யீ, 1950
  • பாம்பிக்சு மாண்டரினா (மூர், 1872) - காட்டுப் பட்டு அந்துப்பூச்சி
  • பாம்பிக்சு மோரி (லின்னேயஸ், 1758) - உள்நாட்டுப் பட்டு அந்துப்பூச்சி
  • பாம்பிக்சு ரோட்டுண்டாபெக்சு மியாடா & கிஷிடா, 1990
  • பாம்பிக்சு சினி பார்க் மற்றும் சோன், 2002

கலப்பினங்கள்[தொகு]

பகுதி-இயற்கையாகக் கலப்பின சிற்றினங்கள் இரண்டு அறியப்படுகின்றன:

  • பாம்பிக்சு கலப்பினம், ஆண் பா. மாண்டரினா மற்றும் பெண் பா. மோரி இடையே ஒரு கலப்பு
  • பாம்பிக்சு இரண்டாவது கலப்பு, ஆண் பா. மோரி மற்றும் பெண் பா. மாண்டரினா இடையே ஒரு கலப்பு

உணவு[தொகு]

கம்பளிப்பூச்சிகள் மொரேசியை, குறிப்பாக மல்பெரியினை (மோரசு சிற்றினங்கள்) உண்கின்றன. கொல்லைப்படுத்தப்பட்ட பட்டுப்புழுக்களுக்குச் செயற்கை மல்பெரி உணவை அளிக்கலாம்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Pitkin, Brian; Jenkins, Paul (November 5, 2004). "Bombyx Linnaeus, 1758". Butterflies and Moths of the World. Natural History Museum, London. பார்க்கப்பட்ட நாள் November 6, 2018.
  2. 2.0 2.1 ICZN (1957). "Opinion 450. Suppression under the Plenary Powers of the generic name Phalaena Linnaeus, 1758, and validation as of subgeneric status (a) as from 1758, of the Terms Bombyx, Noctua, Geometra, Tortrix, Pyralis, Tinea, and Alucita as used by Linnaeus for Groups of species of the genus Phalaena and (b) as from 1767 of the term Attacus similarly published by Linnaeus and matters incidental thereto (Class Insecta, Order Lepidoptera)". Opinions and Declarations Rendered by the International Commission on Zoological Nomenclature 15 (15): 254. https://www.biodiversitylibrary.org/page/34656607. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாம்பிக்சு&oldid=3762516" இலிருந்து மீள்விக்கப்பட்டது