பரகுவை தேசிய காற்பந்து அணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பராகுவே தேசிய காற்பந்து அணி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
பராகுவை
Shirt badge/Association crest
அடைபெயர்லாசு குரானியசு
லா அல்பிரோயா (வெள்ளையும் சிவப்பும்)
கூட்டமைப்புபராகுவை காற்பந்துச் சங்கம் (அசோசியேசன் பராகுவா டெ புட்பால்) (APF)
கண்ட கூட்டமைப்புதென்னமெரிக்க கால்பந்துக் கூட்டமைப்பு
தலைமைப் பயிற்சியாளர்ரமன் டியாசு
அணித் தலைவர்ஜஸ்டோ வில்லார்
Most capsபவுலோ டி சில்வா (135)
அதிகபட்ச கோல் அடித்தவர்ரோக்கே சான்ட்டா குரூசு (32)
தன்னக விளையாட்டரங்கம்எசுடேடியோ டிபென்சோரெசு டெல் சாக்கோ
பீஃபா குறியீடுPAR
பீஃபா தரவரிசை39 Straight Line Steady.svg (5 மே 2016)
அதிகபட்ச பிஃபா தரவரிசை8 (மார்ச் 2001)
குறைந்தபட்ச பீஃபா தரவரிசை103 (மே 1995)
எலோ தரவரிசை32 (28 மே 2016)
அதிகபட்ச எலோ4 [1] (21 பெப்ரவரி 1954)
குறைந்தபட்ச எலோ43 [1] (12 ஆகத்து 1962, 5 மார்ச் 2014, 31 மார்ச் 2015)
உள்ளக நிறங்கள்
வெளியக நிறங்கள்
முதல் பன்னாட்டுப் போட்டி
  1–5 அர்கெந்தீனா 
(அசுன்சியோன், பரகுவை; 11 மே 1919)
பெருத்த வெற்றி
  7–0 பொலிவியா 
(இரியோ டி செனீரோ, பிரேசில்; 30 ஏப்ரல் 1949)
 ஆங்காங் 0–7 பரகுவை பரகுவையின் கொடி
(ஆங்காங்; 17 நவம்பர் 2010)
பெருத்த தோல்வி
 அர்கெந்தீனா 8–0 பரகுவை பரகுவையின் கொடி
(சான் டியேகோ, சிலி; 20 அக்டோபர் 1926)
உலகக் கோப்பை
பங்கேற்புகள்8 (முதற்தடவையாக 1930 இல்)
சிறந்த முடிவுகாலிறுதி, 2010
கோபா அமெரிக்கா
பங்கேற்புகள்34 (முதற்தடவையாக 1921 இல்)
சிறந்த முடிவுவாகையாளர், 1953, 1979
1929ஆம் ஆண்டு தென்னமெரிக்க போட்டியில்

பராகுவே தேசிய காற்பந்து அணி (Paraguay national football team) பன்னாட்டு ஆடவர் காற்பந்தாட்டங்களில் பராகுவேயின் சார்பாக விளையாடும் அணியாகும். இதனை பரகுவை காற்பந்துச் சங்கம் (Asociación Paraguaya de Fútbol) நிர்வகிக்கின்றது. பராகுவே தென்னமெரிக்க கால்பந்துக் கூட்டமைப்பின் பத்து உறுப்பினர்களில் ஒன்றாகும். ஆல்பிரோயா எனச் செல்லப்பெயரிடப்பட்டுள்ள இந்த அணி உலகக்கோப்பை காற்பந்து இறுதியாட்டங்களுக்கு எட்டு முறை தகுதி பெற்றுள்ளது (1930, 1950, 1958, 1986, 1998, 2002, 2006 and 2010); இரண்டாம் சுற்றுக்கு நான்கு முறை முன்னேஇயுள்ளது. வழமையாகப் பங்கேற்கும் கோபா அமெரிக்காவில் இருமுறை வாகை சூடியுள்ளது (1953, 1979). பிஃபா உலகத் தரவரிசையில் மிக உயர்ந்த இடமாக எட்டாமிடத்திலும் (மார்ச் 2001) மிகத் தாழ்ந்த இடமாக 103வதாகவும் (மே 1995) இருந்துள்ளது.

இந்த தேசிய அணி அரெகெந்தீனப் பயிற்றுநர் கெரார்டோ மார்ட்டினோ வழிகாட்டுதலில் மிகுந்த வெற்றிகளை ஈட்டியுள்ளது; இதற்காக 2007இல் அவருக்கு சிறந்த தென்னமெரிக்க பயிற்றுநர் விருது கிடைத்தது. இவரது பயிற்சியில் பராகுவே தனது கால்பந்து வரலாற்றிலேயே முதல்முறையாக 2010ஆம் ஆண்டில் உலகக்கோப்பை காற்பந்து இறுதிப்போட்டியில் காலிறுதிக்கு முன்னேறியது. தவிரவும் 2011 கோபா அமெரிக்காவில் இறுதியாட்டத்தில் பங்கேற்றது; இதில் தோல்வியுற்று இரண்டாமிடம் பெற்றது.

மேற்சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 "Paraguay matches, ratings and points exchanged". Eloratings.net. பார்த்த நாள் 2015-06-14.
  2. After 1988, the tournament has been restricted to squads with no more than 3 players over the age of 23, and these matches are not regarded as part of the national team's record, nor are caps awarded.

வெளி இணைப்புகள்[தொகு]